சென்னை: நடிகர் விஷால் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் சரத்குமார் அணியினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டு உள்ளது.இந்த மோதலில், நடிகர் விஷால் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு உள்ளது. விஷால் மட்டுமின்றி நாடக நடிகை ஒருவரும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடியை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார் விஷால்.
மேலும், விஷால் குரல் எழுப்பியதை தொடர்ந்து இரு அணியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. வாக்குச்சாவடியை நோக்கி நடிகை, நடிகர்கள் ஓடியதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மோதலுக்கான காரணம்…
நடிகர் மோகன் வாக்களிக்க வந்தபோது அவரது ஓட்டு பதிவாகிவிட்டதாக கூறப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து நடிகர் மோகனை வாக்களிக்க வேண்டும் என விஷால் தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனாலும், நடிகர் மோகனை வாக்களிக்க விடாததால் சர்ச்சை ஏற்பட்டு இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும
தாக்குதலில் விஷால் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரே வெளியேறி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலின்போது வாக்குச் சாவடிக்குள் பூத் ஸ்லிப்புடன் வந்த நடிகை சங்கீதாவை முக்கிய நடிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் இன்று திடீர் மோதல் வெடித்தது. விஷால் இதில் தாக்கப்பட்டதாக பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் மோதலுக்கு என்ன காரணம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.வாக்குப் பதிவின்போது நடிகை சங்கீதா வாக்களிக்க வந்துள்ளார். அவரது கையில் பூத் ஸ்லீப் மற்றும் சில பேப்பர்கள் இருந்துள்ளன.
இதைக் கேட்டதும் நடிகை சங்கீதா, அதைக் கேட்க நீங்கள் யார், உங்களுக்கு இப்போது பேசத் தகுதியில்லை.