ஹெப்ரூன் நகரில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட 18 வயது பலஸ்தீனரின் கையில் இஸ்ரேல் படையினர் கத்தியை வைக்கும் வீடியோ ஆதாரத்தை பலஸ்தீன ஆர்வலர் குழுவொன்று வெளியிட்டுள்ளது.
குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அமைப்பு என்ற குழு வெளியிட்டிருக்கும் வீடியோவில் கொல்லப்பட்ட பலஸ்தீன இளைஞனின் சடலத்திற்கு அருகில் இஸ்ரேல் படையினர் இருவர் அடையாளம் காணப்படாத பொரு ளொன்றை கைமாறிக் கொள்வதை காணமுடிகிறது.
12 வினாடிகள் அந்த வீடியோவில் கைமாறிக் கொள்ளும் மேற்படி பொருள் அந்த இராணுவ வீரரால் பலஸ்தீனரின் சடலத்திற்கு அருகில் வைக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் குடியேற்றக் காரரும் கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.
பாதில் காசிம் என்ற பலஸ்தீனர் கத்திக் குத்து தாக்குதலுக்கு முயன்றபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது.