கனடா பொதுத் தேர்தலில்; கடந்த ஒரு தசாப்தமாக நீடி த்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்ப தோடு லிபரல் கட்சி வெற்றி யீட்டியுள்ளது.
இதன்மூலம் கனடாவின் முன்னாள் பிரதமர் பியெர் ட்ருதாவின் மகனும் லிபரல் கட்சி தலைவருமான ஜஸ்டின் ட்ருதா அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பே ற்கவுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 188 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலையில் இருந்தது. மொத் தமுள்ள 338 தேர்தல் மாவட் டங்களில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 170 இட ங்களில் வெற்றிபெற வேண் டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிரதமரான ஸ்டீ பன் ஹார்ப்பர் தலைமையி லான கன்சர்வேட்டிவ் கட்சி 107 தேர்தல் மாவட்டங்களிலேயே முன்னிலை பெற்றிருந்தது. இட துசாரிக் கட்சியான புதிய ஜன நாயக கட்சி 44 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றா வது இடத்தை வகிக்கிறது.
வெற்றிக்கு பின்னர் ஆதர வாளர் முன் உரையாற்றிய ஜஸ்டின் ட்ருதா, “மாற்றத்தி ற்கான நேரம் வந்துவிட்டது என்ற செய்தியை கனேடிய மக்கள் தந்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டார்.
43 வயதான ட்ருதா, மாற் றத்திற்கு ஒன்று திரளுமாறு தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்தி இருந்தார். ட்ருதாவின் தந்தை பியெர் நவீன கனடாவின் தந்தை என்று கரு தப்படுகிறார்.
தேர்தல் முடிவுகளில் பின்னடைவை சந்தித்துள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான ஸ்டீபன் ஹார்ப்பர் தனது பொறுப்பில் இருந்து விலகவு ள்ளார்.
இவரது ஆட்சியில் கொண்டுவரப்ப ட்ட சட்ட திட்டங்கள் மக்களிடம் எதி ர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இங்கு குடியுரிமை பெறுவோர் முகத்திரை (பர்தா) அணியக் கூடாது என அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளிக்க கன் சர்வேடிவ் கட்சி திணறியது.
வளர்ச்சி திட்டங்கள், சில சட்டங் கள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்ப டுத்தியது.
இந்நிலையில் லிபரல் கட்சி கொடு த்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதே, எங்களின் வெற்றிக்கு காரணம் என அந்த கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.