வன்­னியில் அன்று ஆரம்­பிக்­கப்­பட்ட ஈழத்­துக்­கான போராட்டம் ஜெனி­வாவில் பலப்­ப­டுத்­தப்­பட்டு அமெரிக்காவின் ஆத­ர­வுடன் மீண்டும் இன்று நாட்டில் மீள்­உ­ரு­வாக்கம் பெற்­றுள்­ளது. அதற்­கான முழு­மை­யான ஆத­ரவை இந்த அர­சாங்கம் வழங்­கி­வ­ரு­கின்­றது என்று மஹிந்த ஆத­ரவு அணி­யினர் குற்­றம்­சாட்­டினர்.

அன்று சிங்­கக்­கொ­டி­களை ஏந்தி இந்த நாட்டை எவ்­வாறு பாது­காத்­தோமோ அதேபோல் மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்­கள பெளத்த நாட்டைகாப்­பாற்ற அனைத்து சிங்­க­ள­வர்­களும் முன்­வ­ர­வேண்டும்.

இந்த நாட்டை சிங்­கள நாடா­கவே கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும் எனவும் அவர்கள் தெரி­வித்­தனர்.

makintha aniaஐ.நா.மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இலங்கை மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணையை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­மைக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் நேற்று விகாரமகாதேவி பூங்கா திறந்­த­வெளி அரங்கில் ஏற்­பாடு செய்­தி­ருந்த பொதுக்­கூட்­டத்­தின்­போதே மேற்கண்டவாறு குறிப்­பிட்­டனர்.

இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­வித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில,

இலங்­கையில் நடை­பெற்ற யுத்­தத்தில் தமிழ் மக்­களை கொன்று குவித்­த­தாக எமது இரா­ணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்­தியே எம்மை சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு கொண்­டு­செல்ல முன்னர் முயற்­சித்­தனர்.

அந்த முயற்­சியை நாம் எமது அர­சாங்­கத்தில் தோற்­க­டித்தோம். ஆனால் இந்த அர­சாங்கம் சர்­வ­தேச விசாரணைக்கு ஆத­ரவு தெரி­வித்து எமது இரா­ணு­வமே குற்­ற­வா­ளிகள் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­விட்­டது.

அதேபோல் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பிரே­ரணை எமது நாட்டுக்கு மிகவும் மோச­மா­ன­தொரு தீர்­மா­ன­மாகும்.

இப்­போது நாட்­டுக்கு எதி­ராக எழுந்­துள்ள சர்­வ­தேச அழுத்தங்­களை புதிய அர­சாங்கம் எவ்­வாறு கையாள்­கின்­றது என்­பதில் பாரிய சிக்கல் நிலை­மைகள் எழுந்துள்ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மான வரைபை இலங்கை ஏற்­றுக்­கொண்­டதில் இருந்தே இந்த அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­புகள் என்­ன­வென்­பது தெளி­வா­கி­யுள்­ளது.

ஆனால் இந்த தீர்­மா­னத்தின் மூல­மாக மேற்­கொள்­ள­வுள்ள விசா­ரணை முறைமையை உள்­ளக பொறி­முறை என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது.

எனினும் இந்த விசா­ரணை முழு­மை­யான சர்­வ­தேச விசா­ரணை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரிவிக்கின்­றது.

ஆகவே இப்­போது இலங்கை மீது மேற்­கொள்­ள­வுள்ள விசா­ரணை முறைமை எவ்­வா­றா­னது என்­பதை அரசாங்கம் தெரி­விக்க வேண்டும்.

இலங்­கையில் ஒரு விசா­ரணை நடக்­கு­மாயின் அது உள்­ளக விசா­ரணை என குறிப்­பிட முடியும். அதேபோல் சர்வ­தேச தலை­யீட்டில் நடக்­கு­மாயின் அதை சர்­வ­தேச விசா­ரணை என குறிப்­பிட முடியும்.

ஆனால் இப்­பொது நடக்­க­வி­ருப்­பது இந்த இரண்டு விசா­ர­ணை­களின் கல­வை­யாகும். இந்த விசா­ர­ணை­யா­னது சர்­வ­தே­சத்தை சார்ந்த வகை­யி­லேயே அமைந்­துள்­ளது.

இந்த முறைமை மூல­மாக எமது இரா­ணுவ வீரர்­களை தண்­டிக்கும் வகையில் பல­மான ஒரு விசா­ர­ணையை இந்த அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்­ளது.

இரா­ணு­வத்தைக் காட்­டிக்­கொ­டுத்து விட்­டது

அதேபோல் அர­சாங்கம் தமது ஆட்­சியை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் எமது இரா­ணு­வத்தை காட்டிக்கொடுத்துவிட்­டது.

இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுத்தும் மக்­க­ளிடம் பொய்­களைக் கூறியும் ஆட்­சியை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஆகவே தொடர்ந்தும் பொய்­களைக் கூறி தப்­பிக்க முடி­யாது. வெகு விரைவில் உண்­மைகள் வெளி­வரும் என அவர் குறிப்­பிட்டார்.

dineshதினேஷ் குண­வர்த்­தன

இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­வித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் சபையின் பரிந்­து­ரைக்கு அமைய இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருப்­பது உள்­ளக விசா­ர­ணைகள் அல்ல. மாறாக சர்­வ­தேச விசா­ர­ணை­யே­யாகும்.

ஐக்­கிய நாடுகள் சபையின் பரிந்­து­ரையில் கலப்பு நீதி­மன்ற முறையில் விசா­ர­ணை­களை நடத்­து­வ­தென்­பது இறு­தியில் முழு­மை­யான சர்­வ­தேச விசா­ர­ணை­யா­கவே அமையும்.

இந்த செயற்­பா­டு­களின் மூல­மாக அமெ­ரிக்க, பிரித்­தா­னிய ஆகிய நாடு­களின் ஆக்­கி­ர­மிப்பில் இலங்­கையில் உள்ள வளங்­க­ளையும், பொரு­ளா­தார தன்­மை­க­ளையும் சூறை­யாடும் முயற்­சியும் உள்­ளது.

இந்த நாட்டில் ஏதேனும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாயின் அதை இலங்­கையின் அமைப்­புக்கள் மூலமாகவும் இலங்­கையின் அதி­கா­ரத்­தற்கு உட்­பட்ட வகை­யி­லுமே மேற்­கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை காப்­பாற்­ற­வேண்­டிய பொறுப்பு நாட்டில் வாழும் அனை­வ­ருக்கும் உள்­ளது. இதில் மத, மொழி, இன பேதம் இருத்­த­லா­காது. ஆனால் இந்­நாட்டை காப்­பாற்ற வேண்டும் என்­ப­தற்­காக மேற்­கு­லக வாதி­களின் காலில் விழ­வேண்­டிய அவ­சியம் இல்லை.

ஆனால் இந்த அர­சாங்கம் தம்மை காப்­பாற்­றிக்­கொள்ள சர்­வ­தேச நாடு­களின் காலில் விழு­கின்­றது. இலங்கையில் அவர்­களின் செயற்­பா­டு­களை மேற்­கொள்ள இட­ம­ளித்­து­விட்டு தமது தலை­களை இவர்கள் பாதுகாத்துக் கொள்­கின்­றனர்.

இந்த செயற்­பா­டு­க­ளினால் நாட்டு மக்­களும் இந்த நாட்டின் பாது­காப்பு படை­யி­ன­ருமே பாதிக்­கப்­ப­டு­வார்கள் எனக் குறிப்­பிட்டார்.

Tissa-Vitharanaதிஸ்ஸ விதாரண

இந்த கூட்­டத்தில் கருத்து தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வ­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­விக்­கையில்,

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அமை­யப்­பெற்­றுள்ள தேசிய அர­சாங்கம் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுத்­தரும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

இரண்டு வரு­டங்­களில் நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக இவர்கள் தெரி­வித்­தனர். ஆனால் இன்­று­வரை நாட்டின் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகை­யிலோ அல்­லது நாட்டில் சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்தும் வகை­யிலோ செயற்­ப­ட­வில்லை.

மாறாக மேற்­கத்­தேய நாடு­களின் கொள்­கையை பரப்பும் வகை­யிலும் மேற்கு வாதி­களின் அடி­மை­க­ளாக இந்த நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் மாற்­றி­ய­மைக்கும் செயற்­பா­டு­க­ளையே இந்த அர­சாங்கம் மேற்­கொள்­கி­றது.

மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் தீர்­மானம் வெளி­வந்­துள்­ளது. இதில் ஐக்­கிய நாடுகள் சபையின் பரிந்­து­ரை­யி­லான விசா­ரணை குழுவை நிய­மிக்க வேண்டும் என்று அவர்கள் எமக்கு அழுத்தம் கொடுத்­துள்­ளனர். இதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இலங்­கையில் குற்­றங்கள் நடந்­துள்­ளன என சந்­தேகம் இருக்­கு­மாயின் அதை உள்­ளக விசா­ர­ணைகள் மூலம் தீர்க்க வேண்டும்.

இலங்­கையில் புகழ்­வாய்ந்த நிபு­ணத்­துவம் மிக்க சிறந்த நீதி­ப­திகள் உள்­ளனர். சிறந்த சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளனர். ஆய்­வா­ளர்கள் உள்­ளனர். இவர்கள் இன்று சர்­வ­தேச மட்­டத்தில் புகழ்­பெற்று விளங்­கு­கின்­றனர்.

பல நாடு­களின் சட்­ட­ரீ­தி­யான செயற்­பா­டு­களில் இலங்­கையில் சட்ட வல்­லு­னர்­களின் உத­வி­களை நாடுகின்றன.

அவ்­வா­றான நிலையில் போர்க்­குற்றச் சாட்­டு­களில் இலங்கை இரா­ணு­வத்தின் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் குற்றச்­சாட்­டு­களை இலங்­கையின் நீதி­மன்­றங்­களின் மூல­மாக கண்­ட­றிய வேண்டும்.

எக்­கா­ர­ணத்தை கொண்டும் இலங்­கையின் பிரச்­சி­னை­களை சர்­வ­தேசம் கையாள இட­ம­ளிக்கக் கூடாது. சர்­வ­தே­சத்தின் தலை­யீடு உள்­ள­தெனின் உட­ன­டி­யாக அதை தடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

ஆனால் அதை அர­சாங்கம் செய்­யாது மேற்­கு­லக சர்­வா­தி­கா­ரி­களின் தலை­யீட்டில் இலங்­கையில் தீர்வு காணவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர் என அவர் குறிப்­பிட்டார்.

vimal-veவிமல் வீரவன்ச

கூட்­டத்தில் உரை­யாற்­றிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச கூறு­கையில்,

இலங்­கையில் மூன்று தசாப்த கால­மாக நடை­பெற்ற யுத்­தத்தில் புலி­க­ளினால் கொல்­லப்­பட்ட தமிழ் மக்கள், விரட்­டி­ய­டிக்­கப்­பட முஸ்லிம் மக்கள், படு­கொலை செய்­யப்­பட்ட சிங்­கள மக்­களின் இறப்­பு­க­ளுக்கு காரணம் கேட்க்­காத சர்­வ­தேச சமூகம் புலி­களின் இறப்­பிற்கு மாத்­திரம் காரணம் கேட்­கின்­றது.

அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடுகள் புலி ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கா­கவே இன்று யுத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­க முயல்கின்றன.

அதேபோல் நாட்டை காப்­பாற்­றிய இரா­ணு­வத்தை சிறை­களில் அடைத்து புலி­களை விடு­தலை செய்யும் தீர்மானத்­துக்கு இந்த அர­சாங்கம் வந்­துள்­ளது.

கைது செய்­யப்­பட புலி­களை தண்­டிக்­காத வகையில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தையும் நீக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது.

அதேபோல் யுத்த குற்­றச்­சாட்­டுகள் என்ற பெயரில் இவர்கள் முயற்­சிப்­பது வெறு­மனே விசா­ர­ணை­களை செய்வது அல்ல.

அதையும் தாண்டி நாட்டில் பிரி­வி­னையை உரு­வாக்­கவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். வடக்­கிற்கு தேவையான அனைத்­தையும் பெற்­றுக்­கொண்­டுத்து வடக்குக் கிழக்கை ஒன்­றி­ணைந்த மாகா­ண­மாக மாற்றி அவர்­க­ளுக்­கான பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை கொடுப்பதன் மூலமும்,

வடமாகாண சபையின் கீழான அதிகாரங்களை பலப்படுத்தி விடுதலை செய்யப்போகும் புலிகளை வடக்கின் பொலிஸாக மாற்றி இறுதியில் புலிகளின் பாதுகாப்பின் கீழான தனி ஈழத்தினையே அமைக்க முயற்சிக்கின்றனர்.

அன்று வன்னியில் ஆரம்பித்த போராட்டம் ஜெனிவாவில் பலப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் நாட்டில் பலமடையும் வேலையே இப்போது நடைபெற்றுள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை இந்த அரசாங்கம் வழங்கிவருகின்றது.

ஆகவே இப்போதும் சிங்கள பௌத்த மக்கள் அமைதியாக இருந்தால் இந்த நாட்டை கட்டிக்காப்பற்ற முடியாது. ஆகவே அன்று யுத்தம் முடிவடைந்தவுடன் சிங்கள மக்கள் சிங்கக்கொடிகளை ஏந்தி இந்த நாட்டை எவ்வாறு பாதுகாத்தனரோ அதேபோல் மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டை காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும்.

இந்த நாட்டை சிங்கள நாடாகவே பாதுகாத்து எமது இராணுவ வீரர்களையும் எமது மக்களையும் பாதுகாக்க வேண்டும் . சிங்கள நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.

Share.
Leave A Reply