மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை சாத்தியமாகுமென நினைக்கவில்லை என தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நான் நானாகவே இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. தீர்மானம் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு…

கேள்வி:- இரா­ணுவ ஆளுநர், பிர­தம செய­லாளர் மாற்­றப்­பட்­டதன் பின்னர் தற்­போது வட­மா­காண சபையின் செயற்­பா­டு­களில் எவ்­வா­றான மாற்­றங்கள் காணப்­படு­கின்­றன?

பதில்:- நல்ல­மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இரா­ணுவ அதி­கா­ரி­யாக இருந்து அதன் பின்னர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­மையால் அவ­ரு­டைய போக்கும் நிரு­வாக செயற்­பா­டு­களும் வித்­தி­யா­ச­மாக அமைந்­தி­ருந்­தன. அந்­தக்­காலம் தற்­போது மலை­யே­றி­விட்­டது.

வெளிநாட்டு இரா­ஜ­தந்­திர சேவையில் செயற்­பட்ட ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அதே­போன்று முன்னர் அர­சாங்க அதி­ப­ராக செயற்­பட்ட ஒருவர் பிர­தம செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர்கள் பல விட­யங்­களில் எம்மை அனு­ச­ரித்து சுமு­க­மாக செல்­லக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள்.

ஆனால் சில மாவட்ட செய­லா­ளர்கள் எமக்கு இடை­யூ­ற­ளித்­து­வ­ரு­கின்­றார்கள். அவர்­க­ளிடம் மத்­திய அர­சாங்­கத்தைச் சார்ந்­த­வர்­களே கேள்­வி­யெ­ழுப்ப முடியும் என்ற தோர­ணையில், ஆண­வப்­போக்கில் சில இடங்­களில் செயற்­ப­டு­கின்­றார்கள். இவர்­க­ளினால் எமது நிரு­வாகச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் பல இடை­யூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வி­டயம் தொடர்­பாக அண்­மையில் வடக்­கிற்கு வருகை தந்­தி­ருந்த ஜனா­தி­ப­தி­யிடம் குறிப்­பிட்­டி­ருந்தேன். அதன்­போது அவர்கள் மக்­க­ளுக்­கா­கவே செயற்­ப­டு­கின்­றார்கள். ஆகவே அவர்கள் அனை­வ­ரு­டனும் இணைந்தே செயற்­ப­ட­வேண்­டு­மென்றே குறிப்­பிட்டுச் சென்­றுள்ளார்.

கேள்வி:- வட­மா­காண சபையில் ஏகோ­பித்த தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­ற­போதும் சபைக்கு வெளியே தாங்கள் உட்­பட ஏனைய உறுப்­பி­னர்கள் ஒன்­று­பட்­டு­ செ­யற்­ப­டு­கின்­ற­தொரு நிலைமை காணப்­ப­ட­வில்­லையே?

பதில்:- வட­மா­கா­ண­சபை அமை­யப்­பெற்று இரண்டு வரு­டங்­க­ளா­கின்­றது. இது­வ­ரையில் நிரு­வாக ரீதி­யான செயற்­பா­டுகள் தொடர்பில் ஒன்­றி­ணைந்து நட­வ­டிக்­கைகள் எடுப்­பது குறித்து எம்­மி­டையே சரி­யான புரிந்­து­ணர்வு ஏற்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நான்கு கட்­சி­களை கொண்­டி­ருக்­கின்­றது. அவற்றில் வேறு­பட்ட சிந்­த­னை­களும் கொள்கை வேறு­பா­டு­களும் காணப்­ப­டக்­கூடும்.

அதே­போன்று சிலர் மாவட்ட ரீதி­யாக செயற்­ப­டு­வதால் அவர்­க­ளது சிந்­த­னை­களும் செயற்­பா­டு­களும் வேறுபடுகின்­றன. ஆகவே ஒரு கட்­சிக்­கு­ரிய ஒன்­றி­ணைந்த பிர­தி­நி­தி­க­ளாக நீங்கள் எங்­களை கரு­தக்­கூ­டாது. நாம் வெவ்­வே­று­பட்ட எண்­ணங்­களைக் கொண்­ட­வர்­க­ளா­கவே இருக்­கின்றோம்.

புரிந்­து­ணர்வை ஏற்­ப­டு­த்துவது தொடர்­பாக உறுப்­பி­னர்­க­ளுக்கு பல பயிற்சி நெறி­க­ளையும், செயற்­றிட்­டங்­க­ளையும் விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ளோம். அவ்­வி­த­மான செயற்­பா­டுகள் நிறை­வுறும் பட்­சத்தில் பல சாத­க­மான விளை­வு­களை எதிர்­பார்க்­க­மு­டியும்.

கேள்வி:- வட­மா­காண சபை உரு­வாகி இரண்டு வரு­டங்கள் முழு­மை­யாக நிறைவடைந்திருக்கின்றனவே?

பதில்:- எமக்கு பல­வி­த­மான சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. 13ஆவது திருத்­தச்­சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தா­மையே அதற்கு கார­ண­மா­கின்­றது.

பல­வி­ட­யங்கள் குறித்து நாம் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­போதும் மத்­திய அர­சாங்கம் பாரா­மு­க­மா­கவே இருந்து வரு­கின்­றது.

எனவே ஏனைய மாகா­ணங்­க­ளைப்­போன்று எம்மை கரு­த­மு­டி­யாது. அவை 20,25வரு­டங்­க­ளுக்கு மேலாக செயற்­பட்டு வரு­கின்­றன.

ஆகவே இரண்டு வரு­டங்கள் என்­பது போது­மா­ன­தாக இல்லை. அத்­துடன் அலு­வ­லர்­களின் திறன், அனு­பவம் போன்ற விட­யங்கள் தொடர்­பிலும் சில பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் நான்கு கட்­சிகள் காணப்­ப­டு­வ­தனால் வெவ்­வே­று­பட்ட சிந்­த­னைகள், கொள்­கைகள் காணப்­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளீர்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை கருத்தியல் ரீதி­யாக ஒற்­று­மைப்­ப­டுத்தி கட்­ட­மைக்­கப்­பட்ட ஒரு நிறு­வ­ன­மாக அமைப்­ப­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுத்­துள்­ளீர்கள்?

பதில்:- கூட்­ட­மைப்பில் தலை­மைத்­து­வங்­க­ளுக்­கி­டை­யி­லேயே சில கருத்து வேற்­று­மைகள் இருக்­கின்­றன. எமக்­கி­டையில் தனிப்­பட்ட முறையில் எவ்­வி­த­மான வேற்­று­மை­களும் இல்லை. ஆனால் சில விட­யங்­களில் வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

உதா­ர­ண­மாக கூறு­வ­தானால் எந்­த­ள­விற்கு மத்­திய அர­சாங்­கத்தை நம்­பலாம் என்ற விட­யத்தில் சில கேள்­விகள் உள்­ளன.
சிலர் அதனை சாத­க­மாக கரு­து­கின்­றார்கள். சிலர் எதிர்­ம­றை­யாக கரு­து­கின்­றார்கள்.
ஆகவே இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக பேச்­சு­வார்த்­தை­யொன்றின் மூலம் தான் முடி­வொன்­றுக்கு வர­மு­டியும். அப்­பேச்­சு­வார்த்­தைகள் உரிய காலத்­திலே சரி­யாக அமை­யு­மென நம்­பு­கின்றோம்.

கேள்வி:- இங்கு நடந்­தது ஒரு இனப்­ப­டு­கொ­லையே என பிரே­ரணை நிறை­வேற்­றி­னீர்கள். அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லா­ள­ரு­ட­னான சந்­திப்­பை­ய­டுத்து சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி மீண்­டு­மொரு பிரே­ர­ணையை நிறை­வேற்­றி­னீர்கள்.

ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் கலப்பு நீதி­மன்­றத்தை வலி­யு­றுத்தி அறிக்கை வெளியிட்­டி­ருந்தார். எனினும் அமெ­ரிக்க தீர்­மானம் அவ்­வ­றிக்­கையை நீர்த்­துப்­போகச் செய்­துள்­ள­தாக ஆய்­வா­ளர்­களால் கூறப்­ப­டு­கின்ற நிலையில் அதனை அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வர­வேற்­றுள்­ள­னவே?

பதில்:- இது­வொரு சிக்­க­லான வினா­வாகும். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­தினால் வெளியி­டப்­பட்ட அறிக்­கை­யையும் அவரின் கருத்­துக்­களையும் நாம் முழு­மை­யாக வர­வேற்­கின்றோம்.

அறிக்கை வெளியி­டப்­பட்டால் அது தொடர்­பாக எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும் என அமெ­ரிக்­காவும் ஏனைய உறுப்பு நாடு­க­ளுமே தீர்­மா­னிக்­கின்­றன.

அவ்­வா­றி­ருக்­கையில் விசா­ரணை தொடர்­பான விட­யத்தில் மத்­திய அர­சாங்­கத்­திற்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் முன்­ன­ரேயே சில புரிந்­து­ணர்­வுகள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தற்­போது தெரி­கின்­றது.

பிரித்­தா­னியா அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து சென்­ற­மைக்­கான காரணம் என்­ன­வென வின­வி­ய­போது பல ­விடயங்­களில் இலங்கை அர­சாங்கம் அடம்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் அமெ­ரிக்கப் பிரே­ர­ணையில் கூறப்­பட்ட விட­யங்கள் நீர்த்­துப்­போ­ன­வை­யாக இருந்­தாலும் பர­வா­யில்லை.

இவ்­வா­றா­ன­தொரு செயற்­றிட்­டத்­திற்குள் இலங்­கையை கொண்டு வந்­து­வி­ட­வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யி­லேயே பிரித்­தா­னியா அவ்­வாறு செயற்­பட்­ட­தாக அறி­ய­வந்­துள்­ளது.

ஐ.நா. அறிக்­கையை அமெ­ரிக்க பிரே­ரணை நீர்த்­துப்­போகச் செய்­துள்­ளது என்ற கருத்தில் எவ்­வி­த­மான மாற்றுக்க­ருத்­துக்கும் இட­மில்லை.

ஆனால் எதற்­கா­க­வென சிந்­திக்­கும்­போது பல­வி­த­மான கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இலங்கை ரோம் உடன் படிக்­கையில் கைச்­சாத்­தி­ட­வில்லை.

ஆகவே அர­சாங்­கத்தை எவ்­வ­ளவு தூரம் பலாத்­கா­ரப்­ப­டுத்­தலாம் என்­பதில் பிரச்­சி­னை­யி­ருக்­கின்­றது. நடை­மு­றைச்­சாத்­தியம் சாத்­தி­ய­மற்ற தன்மை என்­பதனை அடிப்­ப­டையில் கொண்டே இவ்­வா­றா­ன­தொரு முடிவு எட்­டப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கரு­து­கின்றேன்.

கேள்வி:- வடக்கு மக்­களின் பெரும்­பான்மை ஆணை­பெற்ற சபை சர்­வ­தேச விசா­ரணையை வலி­யு­றுத்தி நிற்­கையில் பொதுத்­தேர்­தலில் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி ஆணை­கேட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இத்­தீர்­மா­னத்தை வர­வேற்­றி­ருக்­கின்­றதே?

பதில்:- எம்­முடன் நெருங்­கி­யி­ருந்த பிரித்­தா­னியா என்ன கார­ணத்­திற்­காக அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து செயற்­பட்­டது என்­பதை முன்­ன­தா­கவே குறிப்­பிட்டேன். அதே­போன்­றுதான் இலங்கை அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அவ்­வாறு கூறி­னார்­களோ தெரி­ய­வில்லை. ஆகவே அவ்­வி­டயம் தொடர்­பாக என்னால் உறு­தி­யாக கூற­மு­டி­யாது.

கேள்வி:- தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக உள்­நாட்டில் பொறி­முறை அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது எவ்­வ­ளவு தூரம் சாத்­தி­ய­மாகும் எனக்­க­ரு­து­கின்­றீர்கள்?

பதில்:- உள்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் பொறி­முறை சாத்­தி­ய­மா­கு­மென நினைக்­க­வில்லை. கடந்த மாதம் 30ஆம் திகதி ஐ.நா. செய­லாளர் நாய­கத்­திற்கு அனுப்­பிய கடி­தத்தில் இவ்­வி­டயம் தொடர்­பாக குறிப்பிட்டிருந்தேன்.

பொறி­மு­றையை வகுத்து இவ்­வாறு செயற்­ப­ட­வேண்­டு­மென குறிப்­பிட்­டமை வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் எவ்­வி­தத்தில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­போ­கின்­றீர்கள் என்­பதில் சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன என்­பதை குறி­பிட்­டி­ருக்­கின்றேன்.

வட­மா­காண முத­ல­மைச்சர் என்­ப­தற்கு அப்பால் முன்னாள் உச்ச நீதி­மன்ற நீதி­ய­ரசர் என்ற அடிப்­ப­டையில் இச்­சட்­டங்­களை எவ்­வாறு உள்­நாட்டு சட்­டங்­க­ளுடன் இணைக்­கப்­போ­கின்­றீர்கள் என்­பதை எடுத்­து­ரைத்­தி­ருந்தேன்.

போர்க்­குற்­றங்கள் இழைக்­கப்­படும் போது அவை எமது நாட்டில் குற்­றங்­க­ளாக இருக்­க­வில்லை. ஆகவே நாம் காலத்தால் பின்­நோக்­கிய சட்­ட­மொன்றை அமைக்­க­வேண்­டி­யுள்­ளது.

அதனை எவ்­வாறு கொண்­டு­வ­ரப்­போ­கின்றோம். அதற்கு பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் தருமா? புதிய அர­சியல் அமைப்பை கொண்­டு­வ­ர­வி­ருக்­கின்­றார்கள். அதில் இவ்­வி­ட­யங்­களை உள்­வாங்­கு­வார்­களா என்­பது குறித்து எமக்கு தெரி­யாது.

அது மட்­டு­மல்ல, உள்­ளகம் எனக்­கூ­றும்­போது விசா­ரணை நடத்­து­வ­தற்­காக இங்­குள்ள சட்­டத்­துறை தலைமை அதி­ப­தியை அல்­லது ஓய்­வு­பெற்­ற­வொ­ரு­வரை நிய­மிக்­கலாம். அவர்­களால் எமக்கு எந்­த­வி­த­மான நன்­மையும் கிடை­யாது.
சட்­டத்­துறை தொடர்­பான குறை­பா­டு­களை முன்­னரே இங்கு வருகை தந்­தி­ருந்த நிபு­ணர்­கு­ழு­வினர் கூறி­யுள்­ளார்கள்.

அதே­நேரம் வெளிநாட்டை சேர்ந்­த­வொ­ரு­வரை நிய­மிக்­கின்­றார்­க­ளென கரு­துவோம். அவ­ருக்கு இங்­குள்ள சட்­டத்­துறை தலைமை அதி­ப­தியின் காரி­யா­ல­யத்தை சேர்ந்­த­வர்­களே உத­வி­யா­ள­ராக இருக்­க­வுள்­ளானர். ஆகவே அவ­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள தர­வுகள் அனைத்தும் சரியா தவறா என்­பதை எம்மால் கூற­மு­டி­யாது.

இங்­குள்ள நீதி­ப­தி­க­ளையும் வெளிநாட்டு நீதி­ப­தி­க­ளையும் நிய­மிக்கும் பட்­சத்தில் வெளிநாட்டு நீதி­ப­தி­களின் கருத்­துக்கள் எவ்­வ­ளவு தூரம் செல்­வாக்குச் செலுத்தும் என்­பது கேள்­விக்­குரி­யதாகும். சட்­டங்­களை இயற்றி உள்­வாங்­கு­வதில் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. வழக்கு நடத்­துநர் யார்? எவ்­வாறு கடமை புரி­யப்­போ­கின்றார் என்­ப­திலும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன.

அதே­நேரம் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை நிறை­வுக்கு கொண்­டு­ வ­ர­வி­ருக்­கின்­றார்கள். புதிய ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் கூறு­கின்­றார்கள்.

கடந்த காலத்தில் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்கள் மீண்டும் சாட்­சி­ய­ம­ளிக்க வேண்­டிய நிலை உரு­வாகும். அவர்­களின் பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆகவே இவ்­வா­றான பொறி­முறை எமக்கு நன்­மை­ப­யக்கும் என எதிர்­பார்க்க முடி­யாது.

இது­வ­ரையில் எவ­ருமே இப்­பொ­றி­மு­றையில் நன்மை இருக்­கின்­ற­தாக என்­னி­டத்தில் கூற­வில்லை. உங்­க­ளு­டைய வினா போன்றே எனது மன­திலும் கேள்­விக்­கு­றி­யுள்­ளது.

கேள்வி:- இப்­பொ­றி­முறை ஒரு சர்­வ­தேச விசா­ர­ணை­யாகும். தென்­னி­லங்கை எதிர்­ப்புக்­க­ளுக்­கா­கவே கலப்பு விசேட நீதி­மன்றம் என்ற பதம் அகற்­றப்­பட்­டி­ருப்­ப­தாக கூட்­ட­மைப்பின் ஒரு தரப்­பி­னரும் பிறிதொரு தரப்­பினர் அவ்­வா­றில்­லை­யெ­னவும் இரு­வே­று­பட்ட நிலையில் இருக்­கின்­றார்­களே?

பதில்:- கருத்­தொற்­று­மை­யில்லை என்றே கூற­மு­டியும்.

கேள்வி:- பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக நீங்கள் எவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ளீர்கள்?

பதில்:- நான் சர்­வ­தேச விட­யங்­களைப் பற்றி பேசினால் மாகாண முதல்­வ­ராக இருக்கும் எனக்கு எமது நாடு தொடர்பில் வெளிநா­டு­களில் கருத்து வெளியி­டு­வ­தற்கு என்ன உரிமை இருக்­கின்­ற­தென கேள்­வியெழுப்புகின்றார்கள்.

தெற்கு மக்­க­ளுக்கு அங்­குள்ள அர­சியல் வாதிகள் இவ்­வா­றான கருத்­துக்கள் மூலம் வேறு­பட்ட காட்­சியை காண்­பிக்க முயல்­கின்­றார்கள்.
எனினும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நிதிகள் எமது கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்­கின்­றார்கள். பொறி­முறை குறித்து எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன என்­பதை உன்­னிப்­பாக அவ­தா­னிப்போம். அதன் பின்­னரே அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமையும் என்­பதை தீர்­மா­னிப்போம்.

கேள்வி:- சமா­தானத்தை கட்­டியெ­ழுப்பும் ஐ.நா.வின் செயற்றிட்­டத்தில் வட­மா­காண சபை எவ்­வா­றான பங்­க­ளிப்பை வழங்­க­வுள்­ளது?

பதில்:- அச்­செ­யற்­றிட்­டத்தில் உள்­ள­கப்­பொ­றி­முறை, நல்­லி­ணக்கம், மீள்­கு­டி­யேற்றம், எமது சபைக்கு சில நன்­மை­களை தரு­வது ஆகிய நான்கு விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

முதல் மூன்று விட­யங்­களும் அர­சாங்­கத்­திற்கு நன்­மை­யளிப்­ப­தாக உள்­ளதே தவிர எமக்கு எவ்­வி­த­மான நன்­மை­களும் ஏற்­ப­டுத்­து­வ­தாக இல்லை.

மார்ச் மாதத்­திலே ஐ.நா அறிக்­கையை தாம­தித்து வெளியி­டு­வ­தாக அறி­வித்து விட்டு ஏப்ரல் மாதத்தில் இவ்­வி­ட­யத்­திற்­கான நிதி வழங்­கு­வது குறித்து அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே ஏற்­க­னவே உள்­ளகப் பொறி­முறை தொடர்­பாக பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதே அர்த்­த­மாகும்.

எம்­முடன் கோபித்­துக்­கொண்­டி­ருக்கும் அர­சாங்கம் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை செய்ய முடியும். எம்­முடன் அது குறித்து இது­வ­ரையில் பேச­வில்லை.

இரா­ணுவ வெளியேற்றம் தொடர்பில் எவ்­வி­த­மான தீர்­மா­னங்­க­ளு­மின்றி எவ்­வாறு மீள்­கு­டி­யேற்­றத்தைச் செய்ய முடியும். ஆகவே இவற்றை வைத்துப் பார்க்­கையில் எமக்கு சார்­பாக எவ­ருமே செயற்­ப­டு­வதை காண­மு­டி­யா­துள்­ளது.

என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் நடை­மு­றையில் இச் செயற்­பாடு எவ்­வ­ளவு சிக்­கல்­களை கொண்­டி­ருக்­கின்­றது, மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நட்­டங்­களை ஏற்­ப­டுத்தும் போன்ற விட­யங்­களை முன்­கூட்­டியே மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­து­வதே அதி­யுச்ச கடப்­பா­டாக இருக்­கின்­றது. அத­னை­வி­டவும் என்னால் செய்­யக்­கூ­டி­யது எவ்­வ­ளவு என்­பது இதி­லே­யொரு கேள்­விக்­கு­றி­யாகும்.

கேள்வி:- முத­ல­மைச்சர் நிதி­யத்தை நிறு­வு­வ­தற்கு என்ன தடைகள் காணப்­ப­டு­கின்­றன?

பதில்:- அனை­வரும் தமி­ழர்கள் என்­பதால் அர­சாங்­கத்­திற்கு அக்­கட்­ட­மைப்பை வழங்­கு­வ­தற்கு அச்­ச­மா­க­வுள்­ளது. முன்னர் பத­வியில் இருந்த ஆளுநர் எமக்கு அக்­கட்­ட­மைப்பை தர மறுத்­தி­ருந்தார்.

தற்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் ஆளுநர் ஆட்­சே­ப­னை­யில்­லை­யென தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள். ஆனால் குறித்த நிதி­யத்தின் நம்­பிக்கை பொறுப்பு குழுவில் மத்­திய வங்­கியின் வெளிவ­ளத்­துறை பிர­தி­நி­தி­யையும் உள்வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென கோரி­யுள்­ளார்கள்.

அவ்­வா­றான நிலைப்­பாட்டைத் தெரி­வித்­த­வுடன் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு அவ்­வாறு நிய­மிக்­கப்­ப­ட­வில்­லை­யென்­பதை சுட்­டிக்­காட்­டினேன். அத்­துடன் குறித்த பரிந்­துரை தொடர்­பாக பரி­சீ­லித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

கேள்வி:- வட­மா­கா­ணத்­திற்கு அதிக தேவைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­ற­மையை புதிய ஆட்சியாளர்களுக்கு எடுத்­து­ரைத்­தீர்­களா? புதிய வரவு செல­வுத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்டு வரும் நிலையில் தேவை­களை உள்­வாங்கும் வகையில் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­தல்­களைச் செய்­வார்­களா?

பதில்:- ஜனா­தி­பதி தேர்­த­லிலைத் தொடர்ந்து புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­பின்னர் சமர்ப்­பிக்­கப்­பட்ட வர­வு­செ­ல­வுத்­திட்ட தயா­ரிப்பின் போது எமது தேவைப்­பா­டுகள் தொடர்­பாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க எம்­மிடம் கேட்­டி­ருந்தார். அது குறித்த பூரண தக­வல்கள் அவ­ரி­டத்தில் சமர்­பித்­தி­ருந்தோம்.

தற்­போது எம்­மிடம் எவ்­வி­ட­யங்­களும் கோர­வில்லை. எதிர்­வரும் நாட்­களில் அவ்­வி­ட­யங்கள் குறித்து கோரப்­ப­டு­மாயின் வழங்­குவோம். ஜனா­தி­பதி, பிர­த­மரைச் சந்­திப்­பது குறித்து தற்­போது எந்­த­மு­டி­வு­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:- வட­மா­காண சபை முத­ல­மைச்­ச­ராக நீங்கள் பத­வி­யேற்­ற­வுடன் சட்ட நுணுக்­கங்கள் தெரிந்­தவர் என்­பதால் விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனை விட ஆபத்­தா­னவர் என தென்னிலங்கையால் விமர்­சிக்­கப்­பட்­டீர்கள். இனப்­ப­டு­கொலை, சர்­வ­தேச விசா­ரணை என்ற விடங்­களில் தங்­களின் அழுத்­த­மான போக்கு இன­ரீ­தி­யான விரி­சலை ஏற்­ப­டுத்த முயல்­வ­தாக பிர­சா­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதே?

பதில்:– ஜனா­தி­பதி வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்த போது அவர்­க­ளுக்கு விளங்கும் வகையில் நான் சிங்களவர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல என்­பதை அவர்­க­ளது மொழி­யி­லேயே கூறி­ய­தோடு எமது பிரச்­சி­னை­களை தௌிவாக விளங்கிக் கொள்ள வேண்­டு­மெ­னவும் எடுத்­து­ரைத்­தி­ருந்தேன்.

ஜனா­தி­ப­தி­யுடன் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி அவ­ருடன் இணைந்து பய­ணிக்­கின்­ற­போதும் குறித்த தின­மன்றி மதிய உண­வுக்கு இரா­ணுவ முகா­மிற்கு அழைக்­கப்­பட்­ட­போது வடக்­கி­லி­ருந்து இராணு­வத்தை வௌியேறச் சொல்லும் நான் அங்கு எவ்­வாறு வருகை தரு­வது எனக் கேள்வியெழுப்பியிந்தேன். ஜனா­தி­பதி புன்­ன­கைத்­த­வாறு நீங்கள் செல்­லுங்கள் எனக் கூறி­விட்டுச் சென்றிருந்தார்.

ஒரு விடயம் குறித்து எவ்­வா­றான மூலோ­பாய அனு­கு­மு­றை­களைச் செய்­வது என்­பதே மிக முக்கியமானதாகும்.

என்­னு­ட­னி­ருந்த சில அமைச்­சர்கள் இரா­ணுவ முகா­மிற்குச் சென்று மதிய உணவு அருந்­தி­னார்கள். அவர்கள் அவ்­வாறு செய்­வதால் நன்­மை­களைப் பெற­மு­டியும் எனக் கரு­தி­யி­ருக்­கலாம்.

ஆனால் என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் அவ்­வாறு சென்று காரி­யங்­களை சாதிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. என்­னு­டைய கொள்­கை­களைத் தாண்டி செல்­ல­மு­டி­யாது. அந்­த­வி­த­மான போக்­குகள் எமக்கு நன்­மை­ய­ளிக்கும் என்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது மத்­திய அர­சாங்­கத்­துடன் தற்­போது கொண்­டுள்ள உற­வுகள் வேறு­பட்­டுள்ள நிலையில் உங்­க­ளு­டைய உறு­தி­யான நிலைப்­பா­டு­களை சாதித்­துக்­கொள்ள முடி­யு­மென கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- சாதித்­துக்­கொள்ள முடி­யுமா இல்­லையா என்­பது குறித்து கூற­மு­டி­யாது. 67வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக சாதிக்க முடி­யு­மென நம்­பிக்கை கொண்­டி­ருந்­த­போதும் அது முடி­யாது போயி­ருக்­கின்­றது. எனினும் என்னால் சாதிக்க முடி­யு­மென கூற­வில்லை. ஆனால் விட்­டுக்­கொ­டுத்துச் செல்ல முடி­யாது.

கேள்வி:- நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் நீங்கள் அறி­வித்­தி­ருந்த முடிவால் தற்­போது முரண்­பாட்டு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றதா?

பதில்:- முரண்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது உண்மை. நான் ஒரு கட்­சிக்குச் சொந்­த­மா­னவன் அல்ல. என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் மக்­களே மிக முக்­கி­ய­மா­ன­வர்கள்.

கேள்வி:- உங்­களை வெற்­றி­பெறச் செய்­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அத்­தனை பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளுமே பிர­சாரம் செய்­தி­ருந்­தார்­களே?

பதில்:- நானாக நான் இருந்­த­மை­யாலே என்னை முத­ல­மைச்­ச­ராக்க வேண்­டு­மென அத்­தனை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தீர்­மா­னித்­தார்கள். ஆகவே நான் எந்­த­வொரு கட்­சிக்கும் சொந்­த­ன­மா­னவன் அல்ல. கட்­சி­களே என்னை ஏற்­றுக்­கொண்­டன என்­பதே யதார்த்­த­மா­ன­தாகும்.

கூட்­ட­மைப்பில் நான்கு கட்­சிகள் காணப்­ப­டு­கின்­றன. அவர்கள் ஒவ்­வொரு வித­மான கொள்­கை­க­ளைக்­கொண்டிருக்­கின்­றார்கள். மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்க்கக் கூடி­ய­வர்­களே எமக்கு தேவை­யா­ன­வர்கள்.

தான்­தோன்­றித்­த­ன­மா­கவோ தன்­னிச்­சை­யா­கவோ சுய­நலம் கரு­தியோ நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­வர்­க­ளிலும் பார்க்க மக்கள் சார்­பாக உண்­மை­யான மனோ­நி­லையை வைத்­தி­ருப்­ப­வர்­களே எமக்குத் தேவை. அத­னையே வலிந்து கூறினேன். ஆகவே நான் கட்­சிக்கு எதி­ராக செல்­ல­வில்லை.

வீட்டை விட்டு சென்று காலை­யி­லேயே வாக்­க­ளி­யுங்கள் எனக் கூறி­யதால் தமது கட்சி சின்­னத்தை விட்டு வௌியேறச் சொன்­ன­தாக கரு­துக்கள் வௌிப்­ப­டுத்­தப்­பட்­டன.

கனவில் கூட அவ்­வாறு நினைக்­க­வில்லை. விட்டை விட்டு சைக்­கிளில் ஏறி வாக்­க­ளி­யுங்கள் எனக் கூறி­யி­ருந்தால் ஒரு­வேளை அது தவ­றாக இருந்­தி­ருக்கும். நான் அவ்­வாறு கூற­வில்­லையே.
பிரித்­தா­னி­யாவில் நடந்த கூட்­ட­மொன்றில் நான் வேறு­பட்ட கருத்­துக்­க­ளைக்­கொண்­டி­ருப்­பதால் பிறி­தொரு கட்­சியில் இணைந்தால் என்ன எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்கள்.

அதன்­போது எமக்குள் கருத்து வேற்­று­மைகள் இருப்­பது உண்மை. அவற்றை நாம் பேசித் தீர்த்­துக்­கொள்வோம். நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லேயே இருப்பேன் எனக் கூறி­யி­ருந்தேன். ஆகவே நான் பொதுத் தேர்­தலில் காலத்தில் ஒதுங்­கி­யி­ருக்க விரும்­பி­னேனே தவிர கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை. நான் நானா­கவே இருக்க விரும்­பு­கின்றேன்.

கேள்வி:- எவ்­வா­றா­யினும் இந்த தீர்­மானம் இன்று விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற நிலையில் எதிர்­கா­லத்தில் இவ்­வி­டயம் குறித்து பேச்­சு­வார்த்தை இடம்­பெ­றுமா?

பதில்:- விரிசல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது உண்­மைதான். இது குறித்து நிச்­சயம் பேச்­சு­வார்த்தை நடை­பெறும். அர­சி­யலில் எத்­த­னையோ பேர் எதி­ரும்­பு­தி­ரு­மாக இருந்­தாலும் பின்னர் இணைந்து கொண்ட வர­லா­று­களும் உள்­ள­னவே. ஆகவே அதனை பெரி­தாக கூற­வில்லை.

கேள்வி:- எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு கிடைத்­தி­ருக்­கின்­ற­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- சம்­பந்­தனின் வாழ்வில் அது­வொரு மைல் கல். அவர் சிரேஷ்ட அர­சி­யல்­வாதி. நீண்­ட­கா­ல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தவர். உயர்­ப­த­வி­யொன்­றுக்கு தெரி­வா­கி­யுள்ளார். அந்­த­வ­கையில் அது எனக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது.

கேள்வி:- அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்­பான நிதியம் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென க் கூறி­யி­ருந்­தீர்­களே அச்­செ­யற்­திட்டம் தற்­போது எந்­நி­லை­யி­லுள்­ளது?

பதில்:- அந்­நி­தி­யத்தை ஆரம்­பிப்­பதில் சில நெருக்­க­டிகள் காணப்­ப­டு­கின்­றன. அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், சுவிஸ்­லாந்தின் அனு­ச­ர­ணை­யுடன் சட்ட உதவி திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதற்­க­மை­வாக யாழ்ப்­பாணம்,மன்னார், வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, ஆகிய ஐந்து இடங்­களில் அவர் செயற்­ப­ட­வுள்­ளார்கள்.

சட்ட உதவி வழங்கும் இடங்கள் குறித்த மாவட்­டங்­களில் காணப்­படும் நீதி­மன்­றங்­க­ளி­லேயே காணப்படுகின்றன. ஆகவே சட்ட உதவி தேவை­யா­ன­வர்கள் அவர்களை அனுகமுடியும். அதேநேரம் குறித்த அரசியல் கைதிகளின் வழக்குகளுக்காக அவர்களது குடும்பங்களுக்கு தேவையான பண உதவியை வழங்குவதற்கான செயற்திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி:- வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- வடக்கும் கிழக்கும் இணைந்தால் அது சிறந்தவிடயமாகும். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தற்போதிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

முன்பிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மஜித்துடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவதற்காக சந்தித்திருந்தபோதும் அவர் அரசியல் விடயங்கள் குறித்து பேசுவதற்கு தயாராக இருந்திருக்கவில்லை. ஆகவே அவரின் மனோநிலையை புரிந்து அவருடன் பேசவில்லை.

கேள்வி:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள விரிசல் மாகாணசபை செயற்பாடுகளுக்கு தடையாகவுள்ளதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- பிரதமருடன் விரிசல் காணப்படுகின்றதென்றால் ஜனாதிபதியுடன் எனக்கு நெருங்கிய உறவிருக்கின்றது. எவ்வாறாயினும் இவை இரண்டுமே எமக்கு பெரிதாக எதனையும் தருவதாக இல்லை. நடைமுறையிலே நல்ல சூழல் ஏற்பட்டிருக்கின்றதே தவிர எமக்கு நன்மை தரும் சூழலொன்று ஏற்படவில்லை.

கேள்வி:- இலங்கை – இந்திய ஒபந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை கட்டமைப்பின் நிலைமை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?

பதில்:- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இங்கு வருகை தந்தபோது இவ்விடயம் தொடர்பாக கூறியிருந்தேன். எனினும் அவர் எவ்விதமான பதிலையும் அளித்திருக்கவில்லை. எனினும் கடந்த ஆட்சியாளர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியிருந்தார்.

தற்போதைய நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதால் 13 தொடர்பில் பேசுவதில் பயனில்லை.

கேள்வி:- 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிராகரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை கட்டமைப்பால் சுயாதீனமாக எதனையுமே செய்யமுடியாதென உணருகின்றீர்களா?

பதில்:- கடந்த காலத்தில் கிழக்கு முதல்வராக இருந்த பிள்ளையான் வைத்தியசாலையில் ஒரு தாதியைக் கூட நியமிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட அதேநிலையில் தான் நாம் இருக்கின்றோம். 13ஆவது திருத்தச்சட்டம் பலவிதங்களில் எம்மை கட்டுப்பாடுகளுக்குள்ளேயே வைத்துள்ளது. அந்த வரையைக்குள் நின்றே செயற்படவேண்டியிருக்கின்றது.

இதிலிருந்து நாம் என்னத்தை சாதிக்கபோகின்றோமெனக் கேள்வியொன்று இங்குள்ளது. நாம் இங்கு இல்லாது பிறிதொரு தரப்பினர் இருந்திருப்பார்களேயானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக கூறி தமது பைகளை நிரப்பியிருப்பார்கள்.

அல்லது இங்கு அரசாங்கத்தின் வேண்டத்தகாத செயற்பாடுகளை முழுமையாக ஆதரித்து முன்னெடுக்க இடமளித்திருப்பார்கள். ஆகவே என்க்கு அவ்வாறான உணர்வு காணப்பட்டாலும் எம்மால் செய்யக் கூடியவற்றை செய்கின்றோம்.

நேர்கண்டவர்: ஆர்.ராம்

நன்றி:  வீரகேசரி (2015-10-21)

Share.
Leave A Reply