ஒரு வருட இடைவெளிக்குள் குழந்தை பெற்றதால் குடும்பம் ஒன்று குலையும் நிலைக்கு வந்துள்ளது. வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான குடும்பப் பெண் கடந்த வாரம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னும் குறித்த குடும்பப் பெண் கடந்த வருட நவம்பர் மாத இறுதியிலும் ஆண் குழந்தை ஒன்று பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

இதே வேளை குறித்த பெண்ணுக்கு 2009ம் ஆண்டு திருமணமாகிய பின் தற்போது பிறந்த பெண் குழந்தையுடன் சேர்ந்து 4 பிள்ளைகள் என்பதும் அதில் இரு பெண் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் பெண்ணின் தாயார் குழந்தைப் பேற்றைப் பார்ப்பதற்காக அப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

வாகனச் சாரதியான பெண்ணின் கணவரின் சகோதரியும் தாயாரும் குழந்தையைப் பார்ப்பதற்காக மகனின் வீட்டுக்குப் போன போது பெண்ணின் தாயார் மகளின் வேகமான குழந்தைப் பேற்றைப் பற்றி தனது மருமகனைக் குறைப்பட்டுக் கதைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதனையடுத்து தனது தாயாரிடம் ஏச்சு வாங்கிவிட்டு வந்த மகன் மாமியாரை வீட்டை விட்டுத்துரத்த முற்பட்ட போது அங்கு பெரும் மோதல் உருவாகியாகத் தெரியவந்துள்ளது.

‘வெளிநாட்டில் என்ர பிள்ளைகள் உழைத்து அனுப்புகின்றா காசில நீ புள்ளை பெத்துக்கொண்டு இருக்கப் போறாயோ‘ என்று மாமியார் மருமகனை ஏச மருமகன் மாமியாரை தாக்கியதாகத் தெரியவருகின்றது.

தாக்கிய போது மாமியாரின் கழுத்தில் இருந்த சங்கிலியையும் அறுத்துக் கொண்டு மருமகன் மாமியாரைக் கலைத்துவிட்டதாகவும் மாமியார் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது மகள் அழுது கெஞ்சி முறையிடாது செய்ததாகவும் அப்பகுதியில் இருந்து தகவல்கள் வந்துள்ளது

Share.
Leave A Reply