ஹைதராபாத்: தனக்கு எய்ட்ஸ் இருப்பதை தெரிந்துகொண்ட பிறகும், கள்ளக்காதலிகளுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் பாதுகாப்பற்றமுறையில் உடலுறவு வைத்துக்கொண்டு அவர்களுக்கு நோயை பரப்பி வந்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹைதராபாத்தின், மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஜேம்ஸ் (31). கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ஆட்டோ ஓட்டிவந்தார்.

21-1445425973-wedding--6000

3 கல்யாணம்
திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சமீபத்தில் போலீசார் இவரை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை சொல்லியுள்ளார். ஜோசப் ஜேம்ஸ் அளித்துள்ள வாக்குமூலம்: எனக்கு மூன்றுமுறை திருமணமாகியுள்ளது. ஆனால் எனது மது, மாது பழக்கங்களால் மூன்று மனைவிகளும் என்னைவிட்டு போய்விட்டனர்.

21-1445425996-sex-600

காமுக வாழ்க்கை
நான் தினமும் ஒரு விபச்சார பெண்களிடமாவது போவது வாடிக்கை. இதுதவிர, நான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பழக்கத்தால் பல குடும்பத் தலைவிகள் எனக்கு கள்ளக்காதலிகளாக மாறினர். அவர்களோடும் உல்லாசம் அனுபவிப்பேன்.

21-1445426007-women56566
திருடிக்கு தேள் கடித்த கதை
இதனிடையே ஜோசப்பிடம் உல்லாசம் அனுபவித்த குடும்ப பெண்கள், தங்களுக்கும் எய்ட்ஸ் வந்திருக்குமோ என்ற அச்சத்தில் புழுங்கிவருகின்றனர். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் அவர்கள் துடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த பெண்களின் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர்.
Share.
Leave A Reply