டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள், ரஷ்யாவின் விமான தாக்குதலை சமாளிக்க வித்தியாசமான நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்யாவின் விமானங்களை அழிக்க அவர்கள் ஆணுறைகளில் வெடிகுண்டை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்கள் வெளியிட்டு உள்ள வீடியோ மூலம் தெரியவந்து உள்ளது.

அந்த வீடியோவில் சில தீவிரவாதிகள் ஆணுறைகளில் வெடிகுண்டுகளை வைத்து பறக்கவிடுகின்றனர். மேலே பறந்து செல்லும் இந்த வெடிகுண்டுகள் ரஷ்ய விமானங்களை தாக்குகின்றன. இத்தகைய வெடிகுண்டுகள் சிரியாவின் இடிலிப் நகரில் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply