துருக்கியை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் விமானமொன்றில் குடிபோதையில் நபரொருவர் தனது ஆடையைக் களைந்து விமானப் பணிப்பெண் ஒருவரை தன்னுடன் தகாத உறவில் ஈடுபட வலியுறுத்தியதையடுத்து அந்த விமானம் அவசரகால நிலைமையின் கீழ் சேர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் டுப்ளின் நகரிலிருந்து துருக்கிய இஸ்மிர் பிராந்தியத்துக்கு 120 பயணிகளுடன் பயணத்தை மேற்கொண்ட சண் எக்ஸ்பிரஸ் விமானமே இவ்வாறு அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.
அயர்லாந் தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர் தனது நண்பர்கள் பலருடன் அந்த விமானத்தில் ஏறியிருந்தார்.
அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் விமான நிலைய மதுச்சாலையில் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் புறப்பட்டதும் அந்த நபர் தனது ஆடைகளைக் களைந்து ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன் அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணை அணுகி தன்னுடன் தகாத உறவில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது விமானத்திலிருந்த அவரது நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அங்கு குடியோதையில் இருந்த பெண் பயணியொருவரும் ஆபாசமான முறையில் விமான உத்தியோகத்தர்களுடன் நடந்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.
இதனால் விமானத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த விமானம் பெல்கி ரேட் நகரிலுள்ள நிகொலா தெஸ்லா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட் டுள்ளது.
இதனால் அந்த விமானத்தின் பயணம் 10 மணி நேர தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.