துருக்­கியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் விமா­ன­மொன்றில் குடி­போ­தையில் நப­ரொ­ருவர் தனது ஆடையைக் களைந்து விமானப் பணிப்பெண் ஒரு­வரை தன்­னுடன் தகாத உறவில் ஈடு­பட வலியுறுத்தியதையடுத்து அந்த விமானம் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் சேர்­பிய தலை­நகர் பெல்­கி­ரேட்டில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

அயர்­லாந்­தின் டுப்ளின் நக­ரி­லி­ருந்து துருக்­கிய இஸ்மிர் பிராந்­தி­யத்­துக்கு 120 பய­ணி­க­ளுடன் பய­ணத்தை மேற்கொண்ட சண் எக்ஸ்­பிரஸ் விமா­னமே இவ்­வாறு அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

அயர்­லாந் தைச் சேர்ந்த குறிப்­பிட்ட நபர் தனது நண்­பர்கள் பல­ருடன் அந்த விமா­னத்தில் ஏறி­யி­ருந்தார்.

அவர் விமா­னத்தில் ஏறு­வ­தற்கு முன்னர் விமான நிலைய மதுச்­சா­லையில் அள­வுக்­க­தி­க­மாக மது அருந்தியிருந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

விமானம் புறப்­பட்­டதும் அந்த நபர் தனது ஆடை­களைக் களைந்து ஆபா­ச­மான முறையில் நடந்து கொண்­ட­துடன் அங்­கி­ருந்த விமானப் பணிப்­பெண்­ணை அணுகி தன்­னுடன் தகாத உறவில் ஈடு­பட வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இதன்­போது விமா­னத்­தி­லி­ருந்த அவ­ரது நண­்பர்கள் மகிழ்ச்சி ஆர­வாரம் செய்து அவரை உற்­சா­கப்­ப­டுத்தும் நடவடிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் அங்கு குடி­யோ­தையில் இருந்த பெண் பய­ணி­யொ­ரு­வரும் ஆபா­ச­மான முறையில் விமான உத்தியோ­கத்­தர்­க­ளுடன் நடந்து கொள்­வ­தற்கு முயற்­சித்­துள்ளார்.

இதனால் விமா­னத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அந்த விமானம் பெல்கி ரேட் நகரிலுள்ள நிகொலா தெஸ்லா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட் டுள்ளது.

இதனால் அந்த விமானத்தின் பயணம் 10 மணி நேர தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

Share.
Leave A Reply