தேனி: குடி போதையில் தாலிகட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மணமகள் மறுப்பு தெரிவித்து தாலியை கழற்றிக் கொடுத்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள போடி புதூரை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் சவுந்தர்யா, 20. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி, 34 என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இவர்களது திருமணம் ஞாயிறன்று காலை வீரபாண்டியில் கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் நடைபெற்றது.

அப்போது மணமகள் சவுந்தர்யா திருமண கனவுகளோடு மணமகளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து இருந்தார்.
முதலில் மணமேடையில் மணமகன் செல்லப்பாண்டியன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் மணமகள் சவுந்தர்யா மணமேடையில் உட்கார வைக்கப்பட்டார். நல்ல நேரம் வந்ததும் மணமகன் செல்லப்பாண்டி மணமகள் சவுந்தர்யா கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது அவர் குடிபோதையில் தள்ளாடியபடி தாலி கட்டியதால் சவுந்தர்யா அதிர்ச்சி அடைந்தார். அதோடு நான் செல்லப்பாண்டியோடு வாழ முடியாது.
என்னை இப்படியே விட்டு விடுங்கள் என்று கதறி அழுதார். இதனை அறிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உறவினர்கள் எவ்வளவோ சமரசம் செய்தும் மணமகள் சவுந்தர்யா அதற்கு உடன்படவில்லை. இதனால் மணவீட்டார்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
மணமகளின் செயலை பார்த்த மணமகன் செல்லப்பாண்டியன் தனது கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி ஆவேசத்துடன் வீசினார்.
ஆனாலும் சவுந்தர்யா குடிகார மாப்பிள்ளைக்கு வாழ்கைப்படமாட்டேன் என கூறினார். நேரம் ஆக நிலைமை மோசமானது. உடனே மணக்கோலத்துடன் சவுந்தர்யா தனது தாயார் சித்ரா உதவியுடன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷிடம் புகார் செய்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு போடி அனைத்து மகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மணமகளிடம் சமாதானம் பேசியும் அவர் குடிகார கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறி, தாலி உள்ளிட்ட பொருட்களை திருப்பி கொடுத்து விட்டு தன்னுடைய பெற்றோருடன் ஊர் திரும்பினார்.
மணமேடையில் கட்டிய தாலியை மணமகள் கழற்றிக் கொடுத்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாலி கட்டிவிட்டான் என்பதற்காக குடிகார கணவனுடன் காலம் முழுவதும் வாழ்ந்து கண்ணீர் விடுவதை விட தாலியை கழற்றிக் கொடுத்து விட்டால் ஒரே நாளில் பிரச்சினை தீர்ந்தது என்று முடிவெடுத்த சவுந்தர்யாக ஏராளமானோர் பாராட்டினர்.
Share.
Leave A Reply