முதல்முறையாக, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன ஆக்ரோஷமாக பேசியதால்  பாராளுமன்றம் ஸ்தம்பிதம் அடைந்தது.     இருக்கையில்  அமர்ந்திருந்த   சம்பந்தன்   திடீரென எழுந்து  “ஆக்ரோசமாக ”   மூன்றுமொழிகளிலும்  மாறிமாறி  சரமாரியாக பேசியதால்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்!! (இது உண்மையல்ல… ஒரு நகைச்சுவையான சமாச்சாரம்)

sampanthanaaa(மாவையார் ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருக்க.. சம்பந்தனாரோ ஆழந்த உறக்கத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் காட்சியை பாருங்கள்.)

எதிர்க்கட்சி  தலைர் சம்பந்தனாரின் பேச்சு இதோ...(அவர் எந்தக்காலம் இப்படி பேசியவர்?? நமது கற்பனையில் உதிர்த்தவைகள்  இவை..)

பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கும் நான்,  நாட்டில் நடக்கும் எந்தவொரு பிரச்சனைகளுக்கும் குரல்கொடுப்பதில்லையெனவும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக ம்ட்டுமே குரல்கொடுப்பதாக இங்குள்ள எதிர்கட்சியாக செயல்படும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

அதில் துளியளவும் உண்மையில்லை. நான் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரச்சனை சம்பந்தமாகவோ அல்லது நாட்டில்  நடக்கும் எந்தவொரு பிரச்சனை சம்பந்தமாகவோ எதுவுமே பேசுவதில்லை என்பதையும் இங்கு உங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

Sambanthan-chanrika
யார் யார் எதைபற்றி, என்ன பேசுகின்றார்கள் என்று எனக்குதெரிந்தால்தானே? நான் அதுசம்பந்மாக பேசுவதற்கு? (நான்  எப்பவுமே நித்திரை.)

sampanthanzநீங்களாக பேசுகிறீர்கள், நீங்களாக சண்டைபிடித்துக்கொள்கிறீர்கள. இதில் எனக்கென்ன வருத்தம்? யார் எதை, எப்படி பேசினாலும், நான் அவற்றையெல்லாம் காதுகொடுத்து கேட்பதில்லை. ஏனெனில் நான் எப்பவுமே ஆழ்நத உறகத்தில் இருப்பவன்.

என்னுடைய உலகமே வேறு. நான் எங்குபோனாலும் நிம்மதியாக நித்திரை கொள்வதையே விரும்புகிறேன்.

நான் என்னுடைய கருமத்தில் மாத்திரம் அக்கறைகொள்பவனாக இருந்துகொண்டிருக்கும் நிலையில், இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள சிலர், தமிழர்களின் பிரச்சனை சம்பந்தமாக மட்டுமே நான் பேசுவதாக கூறுவது நகைப்புக்கிடமானது.

நான்  எப்பவுமே, எதைப்பற்றியும் கவலைப்படாமல்  நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நான் தமிழர்களின் பிரச்சனைகள் சம்பந்தமா பேசுவதாக கூறுவது எந்தளவுக்கு  உண்மை?? அதை நீங்களே பாருங்கள்…

பக்கத்தில் நின்று மாவையார் இப்படி கத்திப்பேசும்போது கூட… எந்தவித சலனமுமின்றி சம்பந்தனார் உறங்குவதை பாருங்கள்!! (இனி  அடுத்த  தேர்தல்  வரும்போதுதான் விழிப்பாரோ?)

இயலாமை வந்துவிட்டால் “பேசாமாமல்   ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் போய்யிருந்து நிம்மதியாக  நித்திரை கொள்ளவேண்டியதுதானே?

கூட்டமைப்பு தலைவர் பதவியும் வகிக்கவேண்டும், எதிர்க்கட்சி தலைவர் பதவியும் வகிக்கவேண்டும், நித்திரையும் கொள்ள வேண்டுமென்றால் எப்படி??

ஆக்கம்
கி.காந்தன்-

Share.
Leave A Reply