சிறுமி ஒருவர் கையில் கத்தியுடன் யூதர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது.

சில காலங்களாக அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் சிறுமி ஒருவர் யூதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

child_jew_002கையில் கத்தியை வைத்திருக்கும் அந்த சிறுமி தான் யூதர்களை கொலை செய்ய விரும்புவதாக கூறுகிறார்.

பின்னர் வீடியோவை எடுத்தவர், ஏன் கொலை செய்ய விரும்புகிறாய் என்று கேட்கிறார்.

அப்போது, அவர்கள் நம்முடைய நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என்று பதிலளிக்கும் சிறுமி யூதர்களை கத்தியால் கொலை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கிறாள்.

child_jew_003இதையடுத்து அந்த நபர், அல்லாவின் விருப்பம் என்று தெரிவிக்கிறார். இந்த வீடியோவை எடுத்தவர் சிறுமியின் தந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர்தான் சிறுமிக்கு வன்முறையை போதித்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த விடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Share.
Leave A Reply