இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டு செல்வதற்காக முற்பட்டவேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


>

விமல் வீரவன்ஸ விமானநிலையத்தில் கைது

124508951w5இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று காலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டு செல்வதற்காக முற்பட்ட வேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும் சட்ட நடவடிக்கைகளுக்கு சிக்கல்கள் இன்றி விமல் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக பிரதமர் அறிவித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று காலை தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறப்பாடு செய்யப்பட்டுள்ள கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளதால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் விமல்  கூறியதாவது…,

காணாமல் போன கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதால் தவறுதலாக அந்தக் கடவுச்சீட்டை கொண்டு வந்தததாகவும், பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்று புதிய கடவுச்சீட்டை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply