ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டும் வேளையில் மக்கள் தமது வீடுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் பேய் போல பயங்கரமானவைகளாக மாற்றி பூதாகரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு நபர் தனது செல்ல நாய்க்கு சிங்கம் போல வேடமிட்டு அதை பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்குவரும் மக்களையும் கொஞ்சம் மிரட்டி இருக்கின்றார்.
கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டெல்டா நகரில் இருக்கும் ‘பர்ன்ஸ் பாக்’ பூங்காவில் சில தினங்களுக்கு முன் சிங்கம் உலாவியது என கென் வெய்ஸ்னர் என்பவர் வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டார்.
ஹாலோவீனுக்காக சிங்கத்தின் உடல் நிறத்தைப் போலவே இருக்கும் தனது பிட்புல் வகை நாயை, அசல் சிங்கம் போலவே அலங்காரம் செய்து உலவவிட்டு அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார் கென்.
பின்புறத்தில் இருந்து பார்க்கையில் அச்சுறுத்தும் சிங்கம் போலவே காட்சியளிக்கும் இந்தச் செல்ல நாய் நம் மனதிலும் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
திக்திக் நிமிடங்கள்: சினம் கொண்ட யானைகளிடம் உயிர்பிச்சை கேட்கும் மனிதர் – வீடியோ
பாங்காக்:ஒரு யானை தாக்க வந்தலே மனிதனால் அதை சமாளிக்க முடியாத போது ஒரு யானை கூட்டமே வந்தால்.
தாய்லாந்தின் காவோ யை தேசிய பூங்காவில் சாலையில் ஓரமாக யானைகள் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது, அவற்றை ஒரு பைக்கில் செல்பவர் கடந்து போக முயல்கிறார்.
அவரின் இருசக்கர வண்டி அதிக சத்ததை எழுப்புகிறது. இதனால் தொந்திரவிற்கு ஆளான ஒரு யானை அவரை தாக்கும் நோக்கில் வேகமாக செல்கிறது.
இதை கண்ட மற்ற யானைகளும் உயிரை நடுங்கவைக்கும் பிளிறலுடன் அவரை நோக்கி ஓடுகின்றன. தான் சுற்றி வளைக்கப்பட்டதை கண்டு பயந்து போன அவர் வண்டியை போட்டுவிட்டு, சினம் கொண்ட யானைகளிடம் உயிர்பிச்சை கேட்டு கைகூப்பி நிற்கிறார்.
இதில் ஆச்சிரியப்படும் விஷயம் அந்த யானைக்கூட்டம் அவரை ஒன்று செய்யாமல் விட்டுவிட்டது என்பது தான்.
அந்த தேசிய பூங்காவில் இருசக்கர வண்டிகளுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.