திண்டுக்கல்லில் நேற்று ‘டாஸ்மாக்’ பாரில் மதுமயக்கத்தில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

gallerye_23190352_1370723
திண்டுக்கல் பாண்டியன் நகரில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு நேற்று மாலை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மது அருந்தினார். பின், பாரில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.

டாஸ்மாக் ஊழியர்களால் வெளியேற்றப்பட்டவர், ஆட்டோவில் ஏறினார். எங்கு செல்ல வேண்டும் என கூற முடியாததால் ஆட்டோ டிரைவர் அவரை இறக்கிவிட்டார்.

gallerye_231930625_1370723பின் அங்கேயே தரையில் மயங்கி சரிந்தார்.அப்போது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த மூன்று பேர், அந்தப் பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் செல்ல முயன்றனர்.

அருகில் இருந்தவர்கள் அடையாள அட்டையை கேட்டதும் நைசாக நழுவினர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

gallerye_231855526_1370723அப்பெண்ணை அழைத்துச் செல்ல பெண்போலீசாருடன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், உட்பட பல போலீசார் வந்தனர். அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மயங்கினார். பெண் போலீசார் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிபாதுகாப்பாக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

‘குடிமகன்’களால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக பலஅமைப்புகளும் மதுவுக்கு எதிராக போராடுகின்றன.

இச்சூழலில் குடிப்பழக்கம் பெண்களையும் தொற்றிக் கொண்டுள்ளது, சமூக அவலத்தின் உச்சம் என்றே கருத வேண்டியுள்ளது.

Share.
Leave A Reply