ஒரு வழியாய் என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் ­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்த குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை. குழந்­தையை அவர்கள் இரு­வரின் பெயரி­லேயே பதிவு செய்தார்கள்..

……………………………………………

“நான்  தவறு செய்ய வேண்டும் என்று நினைத்து எதையும் செய்­ய­வில்லை. காலத்தின் போக்கில் என்­னு­டைய கோலம் மட்டுமல்ல, என்­னு­டைய வாழ்க்­கையும் திசை மாறிப்­போ­னது.

என்­னு­டைய கடந்த காலத்தை நினைத்தால் எனக்கு சரி­யாக நித்­தி­ரை­கூட வரு­வ­தில்லை. முன்பு நான் நடந்துவரும் பாதையில் யாரும் எதிர்ப்­பட்­டாலே பாவம் என்று நினைத்து விலகிச் செல்­வார்கள்.

ஆனால், இது நான் விரும்பி ஏற்ற வாழ்க்­கை­யல்ல. விதியின் விளை­யாட்டில் நானும் தவறு செய்ய வேண்­டிய சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்டேன்.

இன்று எனக்­காக உப்­பு­க­ரிக்கும் கண்ணீர்த் துளி­களும், ஆறாத காயங்­க­ளுமே எஞ்­சி­யுள்­ளன. சிறு வயது முதலே நான் ஆசைப்­பட்­டது எது­வுமே எனக்கு கிடைத்­த­தில்லை.

அப்பா எனக்கு மூன்று வயதாய் இருக்கும் போதே எங்­களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதன்பின் மிகுந்த கஷ்­டத்­துக்கு மத்­தி­யி­லேயே அம்மா என்­னையும் ,அக்­கா­வையும் வளர்த்தார்.

இன்று அம்மா உயி­ரு­டனே இல்லை. அக்கா எங்கு இருக்­கின்றாள் என்றே தெரி­ய­வில்லை. யாருமே இல்­லாமல் தனி­ம­ரமாய், சுதந்­தி­ரமாய் சுற்றி திரிய வேண்­டிய வயதில் கூண்டில் அடைப்­பட்ட கூண்­டுக்­கி­ளியாய் செய்த பாவத்­துக்கு தண்­டனை அனு­ப­விக்­கின்றேன். “

இது பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்­காக பொலி­ஸாரின் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட நதி­காவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) உள்­ளக்­கு­மு­ற­லாகும். நதிகா தொடர்ந்து தனது கடந்த காலத்தை பற்றி கூறு­கையில்,

“நான் 25 வரு­டங்­க­ளுக்கு முன்பு சன­நெ­ருக்­க­டி­யான கொழும்பு பிர­தே­சத்தில் இருக்க இட­மில்­லாமல் எனது தாயுடனும், சகோ­த­ரி­யு­டனும் சேரி­பு­றங்­க­ளி­லுள்ள வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்­ளப்­பட்டேன்.

தந்தை சிறு வய­தி­லேயே எங்­களை விட்டு சென்­றதால் எங்கள் இரு­வ­ரையும் வளர்க்க எம் தாய் மிகுந்த சிர­மப்­பட்டாள். எங்­க­ளுக்கு உத­விக்கு என்று யாரும் இருக்­க­வில்லை.

எல்­லோரும் எங்­களை அனு­தா­பத்­துடன் மட்­டுமே பார்த்­தார்கள். இரவு நேரங்­களில் எங்கள் வீட்டில் யாரா­வது ஆண் ஒருவன் இருப்பான். எனினும், ஆரம்­பத்தில் வீட்டில் என்ன நடக்­கின்­றது என்­பது எனக்கு புரி­ய­வில்லை.

அம்மா என்­னையும், அக்­கா­வையும் பாட­சா­லையில் சேர்த்தார். அக்காவுக்கு 16 வயது பூர்த்­தி­யா­கி­ய­வு­டனே சேகர் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) என்­பவ­ருடன் வீட்டை விட்டு சென்­று­விட்டார்.

அதன்பின் நானும், அம்­மாவும் மட்­டுமே வீட்டில் இருந்தோம். என்னை நன்கு படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அம்மா ஆசைப்­பட்டார்.

எனினும், நான் இருந்த இடம் படிப்­ப­தற்கு ஏற்ற சூழ­லா­க­வி­ருக்­க­வில்லை. எனக்கு 13 வயதாகிய போதே எனது அம்மா என்ன தொழில் செய்து பணம் சம்­பா­திக்­கின்றாள் என்­பதை தெரிந்து கொண்டேன்.

நான் பாட­சா­லைக்கு செல்­வது, புத்­த­கங்கள், உடைகள் வாங்­கு­வது, நானும் அம்­மாவும் பசி­யாற உணவு உண்­பது எல்­லாமே அந்த பாவப்­பட்ட பணத்தால் என்­பதை நினைக்கும் போது அரு­வ­ருப்­பா­க­வி­ருந்­தது.

ஒரு வகையில் அம்­மாவை நினைக்கும் போது கவ­லை­யா­கவும் இருந்­தது. எனவே, நான் இது தொடர்பில் அம்­மா­வுடன் முரண்­பட ஆரம்­பித்தேன்.

அம்மா என்னைக் கட்­டி­ய­ணைத்து அழு­த­வாறே ” உன்­னு­டைய அப்பா உன்­னையும், உன் அக்­கா­வையும் விட்டுச் சென்­ற­வுடன் எனக்கு வாழ்­வ­தற்கு வேறு வழி­யி­ருக்­க­வில்லை.

ஒரு நாள் உங்கள் இரு­வ­ரையும் தூக்கிக் கொண்டு ஆற்றில் குதித்து தற்­கொலை செய்­து­கொள்வோம் என்று கூட எண்­ணினேன்.

எனினும், உங்கள் இரு­வ­ரி­னதும் பிஞ்சு முகத்தை பார்த்­த­வுடன் அப்­படி செய்ய எனது மனச்­சாட்சி இடம் கொடுக்­க­வில்லை. அதனால் தான் உங்கள் இரு­வ­ரு­டைய எதிர்­கா­லத்­துக்­காக என்­னையே அர்ப்­ப­ணிக்கத் துணிந்தேன்.

வெவ்­வேறு ஆண்­க­ளுக்கு பின்னால் சென்று பணம் சம்­பா­தித்தேன். சில ஆண்­களின் மனை­விமார் வீட்­டுக்கு முன்னால் வந்து நின்று என்னைத் தகாத வார்த்­தை­க­ளினால் திட்­டு­வார்கள்.

எனினும், உங்கள் இரு­வ­ருக்­காகவும் நான் அவற்­றை­யெல்லாம் பொறுத்­துக்­கொண்டேன். நான் அனு­ப­விக்கும் கஷ்­டத்தை நீங்கள் இரு­வரும் எந்த காலத்­திலும் அனு­ப­விக்க கூடாது என்­பது மட்­டுமே என் நோக்­க­மாக­விருநதது .

எனினும், உன் அக்கா அதை உண­ராமல் எங்கோ சென்று விட்டாள். “நீ நன்கு படித்து என்னை பெரு­மைப்­ப­டுத்து” என்று கூறினார். அன்று அம்­மாவின் கண்­ணீ­ரி­லி­ருந்து சிந்­திய கண்ணீர்த் துளிகள் என் மனதை ரண­மாக்­கின. அன்று முதல் என்­னு­டைய உல­கத்தில் நண்­பர்கள், காத­லர்கள் என்று யாருக்­குமே இடம் இருக்­க­வில்லை.

நண்­பர்கள் என்று யாரை­யுமே என்­றுமே நான் வீட்­டுக்கு கூட்­டி­வந்­தது கிடை­யாது. நான் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று அம்­மாவின் இந்த அவல வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும் என்­பது மட்­டுமே என் சிந்­தையில் சதா ஓடி­யது.

என்­னு­டைய கவனம் முழுக்க படிப்பில் இருந்­தது. மிகுந்த சிர­மத்­துடன் படித்து கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்­றினேன். அதன்பின் பெறு­பே­றுகள் வரும் வரை ஒரு சிறு தொழி­லுக்கும் சென்றேன்.

அந்த தொழிலும் என் மன­துக்கு நிறை­வாக அமைந்­தது. எனவே, அங்கு கிடைக்கும் சம்­பள பணத்தில் சிறு அறையொன்­றினை வாட­கைக்கு வாங்கி அம்­மாவை அங்கு அழைத்துச் சென்றேன்.

அங்கு வசதி வாய்ப்பில் குறை­வி­ருந்த போதும் நானும், அம்­மாவும் சந்­தோ­ஷ­மா­க­வி­ருந்தோம். கல்­விப் பொ­துத் ­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சையின் பெறு­பே­று­களும் வெளி­யா­கின.

எனக்கு உயர்­த­ரத்தை தொடரும் அள­வுக்கு பெறு­பே­று­களும் கிடைத்­தன. அன்று எனது மகிழ்ச்­சிக்கு அளவே இருக்­க­வில்லை. நான் அழ­காக உடுத்திக் கொண்டு பாட­சா­லைக்கு சென்றேன். ஏதோ புதிதாய் பிறந்­தது போன்ற ஒரு பூரிப்பு என்னுள்.

ஆயினும், அந்த மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்­க­வில்லை. நான் வேலையை விட்டு விலகி மீண்டும் பாட­சா­லைக்கு செல்ல ஆரம்­பித்­ததால் எங்­க­ளுக்கு பணப்­பற்­றாக்­குறை ஏற்­பட்டது.

எனவே, பணப்­பற்­றாக்­குறை கார­ண­மாக எனது படிப்பை பாதி­யி­லேயே நிறுத்­தி­விட நேரி­டுமோ என்ற பயம் எனக்குள் இருந்­தது.

இத­னி­டையே தான் நாங்கள் தங்­கி­யி­ருந்த வீட்டின் உரி­மை­யா­ளரின் சகோ­தரர் அங்கு அடிக்­கடி வந்து போவார். அவர் சற்று வய­தா­னவர் எனினும், திரு­ம­ண­மா­கா­தவர்.

அவ­ரு­டைய வரு­கை­யா­னது நாள­டைவில் அவ­ருக்கும் அம்­மா­வுக்கும் இடையில் பழக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அதன் கார­ண­மாக அவர் எங்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­க­ளையும் செய்து வந்தார். எனக்கு அது பிடிக்­க­வில்லை.

நான் இது தொடர்பில் அம்­மா­வுடன் முரண்­பட ஆரம்­பித்தேன். எனினும், அம்மா “மகள் நாங்கள் சாப்­பி­டு­வ­தற்கு, நீ படிப்­ப­தற்கு எல்லாம் பணம் வேண்டும்.

எனக்கு இதை விட்டால் வேறு வழி­யில்லை” என்று கூறி என்னைச் சமா­ளித்தாள். எனவே, நானும் என்ன செய்­வதென்று எல்­லா­வற்­றையும் பொறுத்துக் கொண்டேன். ஒரு வழியாய் இரண்டு வரு­டங்கள் உருண்­டோ­டின.

உயர்­தர பரீட்­சைக்கு இரண்டு மாதங்கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தன. அம்மா திடீ­ரென சுக­வீ­ன­முற்றார். நாளுக்கு நாள் அம்­மாவின் உடல் நிலை மோச­மா­கிக்­கொண்டே சென்­றது.

அவரால் தனி­யாக எதை­யுமே செய்ய முடி­யவில்லை. மர­ணப்­ப­டுக்­கையில் இன்றோ நாளையோ என்று இழுத்துக்­கொண்­டி­ருந்தார். எனவே, அம்­மா­வுக்­காக என் முழு நேரத்­தையும் செல­வ­ழித்தேன்.

இத்­த­கைய ஒரு தரு­ணத்தில் தான் அம்­மா­வுடன் பழ­கிய வீட்டு உரி­மை­யா­ளரின் தம்பி நடு­நி­சியில் அறைக்குள் நுழைந்து என்­னிடம் தவ­றாக நடந்து கொள்ள முயற்­சித்தார். ஆரம்­பத்தில் நான் அவ­ரி­ட­மி­ருந்து விலகிச் சென்றேன்.

எனினும் வெகு நாட்கள் என்னால் அப்­படி இருக்க முடி­ய­வில்லை. அம்­மாவின் மருந்து செல­வுகள், வீட்டுச் செல­வுகள் என்­ப­வற்­றுக்கு எனக்கு பணம் தேவைப்­பட்­டது.

என்னால் அம்­மாவை தனி­யாக விட்டு வெளியில் வேலைக்கு செல்ல முடி­ய­வில்லை. எனவே, எந்த வாழ்க்கையி­லி­ருந்து அம்­மா­வுக்கு விடு­தலை கொடுக்க வேண்டும் என்று நினைத்­தேனோ…. எந்த தொழிலை வெறுத்­தேனோ அதையே நானும் செய்ய வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்டேன்.

நான் அந்த மனி­தனின் ஆசைக்கு இணங்­கி­யதால் அம்­மாவின் மருந்து செல­வுகள், வீட்டுச் செலவுகளுக்கு அவர் உதவி செய்தார்.

எனினும், என் தாய் உயிர் பிழைக்­க­வில்லை. அம்மா சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்தார். அம்­மாவின் இறுதி ச்சடங்­கு­க­ளுக்கும் அவர் உதவி செய்தார்.

எனினும், அதற்கு பிறகு அங்கு இருக்க எனக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. எல்லாம் முடி­வ­டைந்து விட்­டது. என்­னு­டைய இளமைப் பரு­வமும் வீண­டிக்­கப்­பட்டு விட்­டது. வெறும் கையுடன் அங்கு இருந்து வெளியில் வந்தேன்.

அதன்பின் எங்கு செல்­வது? என்ன செய்­வது? என்று எது­வுமே புரி­ய­வில்லை. தங்­கு­வ­தற்கு இட­மின்றி தவித்தேன்.

இந்த நிலையில் தான் பஸ் நிலை­யத்தில் வைத்து வசதி படைத்த பெண்­ணொ­ரு­வரின் அறி­முகம் கிடைத்­தது. அவர் என்னை அவ­ரு­டைய வீட்­டுக்கு அழைத்துச் சென்றார்.

அவ­ரு­டைய கணவர் வெளி­நாட்டில் தொழில் புரிந்த நிலையில் அவர் மட்­டுமே வீட்டில் தனி­யா­க­வி­ருந்தார். பிள்­ளைகள் என்று யாரும் இருக்­க­வில்லை.

எனவே, நானும் எவ்­வித மறுப்பும் தெரி­விக்­காமல் அவ­ருடன் தங்­கினேன். அவர் எனக்கு வேலை­யொன்­றையும் கொடுத்து தங்­கு­வ­தற்கு அங்கு அறை­யொன்­றையும் ஒதுக்கிக் கொடுத்தார்.

எனக்கு நடந்த கசப்­பான அனு­ப­வங்­க­ளையும் நான் அவ­ரிடம் பகிர்ந்­துகொண்­டேன். அவர் எனக்கு ஆறு­த­லையும் நம்­பிக்­கையையும் வழங்­கினார்.

எனவே இனி என்­னு­டைய வாழ்க்கை அமை­தி­யா­கவும் அழ­கா­கவும் இருக்க போகின்­றது என்று அன்று நான் நினைத்தேன்.

ஆயினும் மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவ­ரு­டைய கணவர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்து விட்டார். வந்­தவர் சிறிது நாட்­களில் என்­னுடன் தவ­றான முறையில் பழக ஆரம்­பித்தார்.

இது பற்றி நான் எனது எஜ­மா­னி­யிடம் கூறிய போதும் அவர் அதை பெரி­தாக கண்­டுகொள்­ள­வில்லை.. கண­வரை கண்­டிக்­கவும் இல்லை. பல நாள் எங்கள் இரு­வ­ரையும் தனி­யாக விட்டு அவர் வெளியில் சென்று நீண்ட நேரம் கழித்தே வீட்­டுக்கு வருவார்.

எனவே அந்த சந்­தர்ப்­பத்­தை அ­வரின் கணவர் தனக்கு சாத­க­மாக்கிக் கொண்டார்.

இத­னி­டையே நான் கர்ப்­ப­ம­டைந்தேன். இது தொடர்­பாக நான் எனது எஜ­மா­னி­யிடம் கூறினேன். அவர் அப்­போது கதறி அழுதார்.

எனினும், எனது கர்ப்ப­கா­லத்தில் அவர்கள் இரு­வ­ருமே என்னை நன்­றாக பார்த்­துக்­கொண்­டார்கள். ஒரு வழியாய் எனது பிர­சவ நாளும் நெருங்­கி­யது.

நான் அழ­கிய ஆண்­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்தக் குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை.

pilaithadsiகுழந்­தையை அவர்கள் இரு­வரின் பெயரி­லேயே பதிவு செய்தார்கள். அதன்பின் குழந்­தையை எனது எஜ­மானி பொறுப்­பெ­டுத்­துக்­கொண்டார். அப்­போது தான் எனக்கு எல்லா உண்­மையும் புரிந்­தது.

இங்கும் நான் வஞ்­சிக்­கப்­பட்டு விட்டேன் என்று புலம்­பினேன். எனினும், எனது குழந்­தைக்கு நல்ல தாய், தந்தை, உற­வுகள், சொத்­துகள் என்று எல்லாம் கிடைத்­தி­ருப்­பதை எண்ணி சந்தோஷப்படுகின்றேன்.

இனி அங்கு எனக்கென்ன வேலையென்று நினைத்து அந்த வீட்டிலிருந்து வெறும் கையுடன் வெளியேறினேன் வந்தேன். நான் வரும் போது எஜமானி எனக்கு பணம் கொடுத்தார். எனினும், நான் அவற்றை ப்பெற்றுக்கொள்ளவில்லை.

அதன்பின் நானும் அம்மா செய்த அதே தொழிலை செய்ய ஆரம்பித்தேன். கை நிறைய பணம் சம்பாதித்தேன். இதன்போது தான் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் நான் கைது செய்யப்பட்டேன்.

இன்னும் சில நாட்களில் நான் விடுதலையாகி விடுவேன். விடுதலையாகியவுடன் ஒரு முறையாவது சென்று என்னுடைய பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply