மஹிந்த ராஜபக்ஷ வெட்­டிய குழியே இன்று அவ­ருக்கு ஆபத்­தா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இப்­போ­தைக்கு அர­சாங்­கத்தின் இந்த வாதம்- பதி­லடி அர­சியல் ரீதி­யாக எடு­பட்­டுள்­ளது. என்­றாலும், இது எந்தளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

பொல்லைக் கொடுத்து அடி­வாங்­கி­யது என்­பார்­களே, அது தான் இப்­போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு நடக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவை வைத்தே, அவ­ரது வாயை அடைக்­கின்ற உத்­தியைத் தான், தற்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

குறிப்­பாக, போர்க்­குற்ற விசா­ரணை விட­யத்தில், அர­சாங்கம் கடு­மை­யான நெருக்கடிக­ளையும் அழுத்தங்களையும் எதிர்­கொண் டாலும், அதற்­கான பழியில் இருந்து தப்­பித்துக் கொள்வதற்­கான கரு­வி­யாக மஹிந்த ராஜபக் ஷவையே தெரிவு செய்­தி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை அறிக்­கைக்கு எதி­ரா­கவும், ஜெனீவா தீர்மானத்­துக்கு ஆத­ரவு அளித்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டுக்கு எதி­ரா­கவும் மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது அணி­யி­னரும், சிங்­கள மக்­க­ளி­டையே தீவி­ர­மான கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றனர்.

இது அர­சாங்­கத்­தினால் முன்­னரே எதிர்­பார்க்­கப்­பட்ட விடயம் தான்.

அதே­வேளை, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யுடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யதும், பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை நிறை­வேற்ற வேண்­டி­யதும் அர­சாங்­கத்தின் கட­மை­யா­கவே உள்­ளது.

ஒரு பக்­கத்தில் இந்த கடப்­பாட்டில் இருந்து விலக முடி­யாது. அதே­வேளை, மஹிந்த அணி­யினர் அதற்கு எதிராக வீசப்­போகும் அஸ்­தி­ரங்­க­ளையும் வெற்­றி­க­ர­மாக எதிர்­கொள்ள வேண்டும்.

அதை­விட, தமிழர் தரப்பின் நம்­பிக்­கை­யையும் காப்­பாற்­றி­யாக வேண்­டிய கட்­டா­யமும் இருக்­கி­றது, இந்த அரசாங்­கத்­துக்கு.

இதனால் எப்­ப­டி­யா­வது போர்க்­குற்ற விசா­ர­ணையை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலையில் அர­சாங்கம் இருக்கிறது.

ஜெனீவா தீர்­மா­னத்­தையும், ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யையும், மஹிந்த ஆத­ரவு அணி­யினர், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஒரு ஆயு­த­மாக மட்டும் பார்க்­க­வில்லை. அது, தமது கழுத்­துக்குப் போடப்­படும் சுருக்­கா­கவும் கூடப் பார்க்­கின்­றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் போரின் போது இடம்­பெற்ற மீறல்­களை மையப்­ப­டுத்­தியே விசாரணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த விசா­ர­ணை­களில், இரா­ணு­வத்­தினர் எதிர்­கொள்­ளப்­போகும் விசா­ர­ணை­க­ளுக்கு முன்­னைய அரசாங்கத்தில் இருந்­த­வர்­களே பொறுப்­பேற்க வேண்­டி­யி­ருக்கும்.

போருக்கு அர­சியல் ரீதி­யாக தலை­மை­யேற்­ற­வர்கள், அதற்­கான உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்­த­வர்கள், விசா­ர­ணை­களை எதிர்­கொள்­ளலாம்.

அவர்­களின் மீது குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்டால், ஒரு­வேளை தண்­ட­னையை எதிர்­கொள்ளும் நிலை கூட வரலாம்.

எனவே தான், இத்­த­கைய விசா­ர­ணை­களைத் தவிர்க்­கவும், தடுக்­கவும் மஹிந்த ராஜபக்ஷ அணி­யினர் முயற்சிக்­கின்­றனர்.

சர்­வ­தேச விசா­ரணை அல்­லது சர்­வ­தேச தலை­யீட்­டுடன் கூடிய நம்­ப­க­மான விசா­ர­ணை­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷ ஆரம்­பத்தில் இருந்தே இணங்க மறுத்து வந்­ததன் மர்மம் இது தான்.

இப்­போது அவரைத் தாம் மின்­சார நாற்­கா­லியில் இருந்து பாது­காத்து விட்­ட­தாக அர­சாங்கத் தரப்பு கூறிவந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அவ­ருடன் இணைந்து போரை நடத்­தி­ய­வர்­க­ளுக்கோ ஆபத்து முற்றாக விலகிவிட்­ட­தெனக் கூறமுடி­யாது.

இந்­த­நி­லையில், ஜெனீவா தீர்­மா­னத்­தையும், ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யையும் வைத்து அர­சாங்­கத்­துக்கு எதிரான சிங்­கள இன­வாத அலை ஒன்றை பரவச் செய்யும் முயற்­சியில் மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஈடுபட்டுள்­ளனர்.

 

மீண்டும் சிங்­கக்­கொ­டி­யேந்தி, சிங்­கள நாடாக இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்ப சிங்­க­ள­வர்கள் முன்­வர வேண்டும் என்று விமல் வீர­வன்ச கடந்த 19ஆம் திகதி விஹா­ர­மா­தேவி பூங்­காவில் நடத்­திய கூட்­டத்தில் அழைப்பு விடுத்தி­ருந்தார்.

இது, அர­சாங்­கத்­துக்கும், தமி­ழர்­க­ளுக்கும் எதி­ரான இன­வாத அலை ஒன்றை உரு­வாக்­கு­கின்ற மஹிந்த தரப்பினரின் முயற்­சி­யோகும்.

ஆனால், அதனை அவ்­வ­ளவு இல­கு­வாக செய்ய முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­ரிய விட­யமே,

போர்க்­குற்ற விசா­ரணை விவ­காரம், சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­க­ளையும், உணர்வுகளையும் ஏற்­ப­டுத்தும் என்­பதை அர­சாங்கம் நன்­றா­கவே அறியும்.

மஹிந்த ராஜபக்ஷ அணி­யினர், தமது அர­சியல் நல­னுக்­காக இதனை எந்­த­ளவு தூரத்­துக்குக் கொண்டு செல்வார்கள் என்­பதும் அர­சாங்­கத்­துக்குத் தெரியும்.

அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷவை வைத்தே அவர் சிங்­கள மக்கள் மத்­தியில் கட்­டி­யெ­ழுப்ப முனையும், அரச எதிர்ப்பு அலையை, முறி­ய­டிக்கும் நகர்­வு­களில் அர­சாங்கம் இறங்­கி­யி­ருக்­கி­றது.

ஐ.நாவு­டனும், மேற்­கு­ல­கு­டனும், இலங்­கையின் புதிய அர­சாங்கம் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்டு, பொறுப்புக்­கூறல் பற்­றிய கடப்­பா­டு­களை நிறை­வேற்ற இணங்­கிய போது, அதற்கு எதி­ராக மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு அணி­யினர் வெளி­யிட்ட எதிர்ப்பை அர­சாங்கம் அடக்­கி­யது.

ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் 2009இல் இலங்கை வந்த போது, பொறுப்­புக்­கூறல் கடப்­பாட்டை நிறைவேற்று­வ­தாக, ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவே வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.

அதனை நிறை­வேற்­றா­ததால் தான், இலங்கை நெருக்­க­டிக்குள் சிக்க நேர்ந்­தது என்­பதை அர­சாங்கம் தெளிவுபடுத்­தி­யது.

இது அர­சாங்­கத்­துக்குக் கிடைத்த முதல் வெற்றி.

அதை­ய­டுத்து, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால், ஆயிரம் மடங்கு கடு­மை­யா­ன­தாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை அறிக்கை அமைந்­தி­ருக்கும், நாம் ஆட்­சிக்கு வந்­ததால் தான், அதன் காரத்தை குறைத்து விட்டோம் என்றும் நம்ப வைத்­தி­ருக்­கி­றது தற்­போ­தைய அர­சாங்கம்.

இது அவர்­களின் இரண்­டா­வது வெற்றி.

இப்­போது அடுத்த தடையைத் தாண்ட வேண்­டிய நிலையில் அர­சாங்கம் இருக்­கி­றது.

அதா­வது உள்­நாட்டு விசா­ர­ணையே நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று அர­சாங்கம் சிங்­கள மக்­களை நம்­ப­வைக்க முயன்­றாலும், ஏதோ ஒரு வகையில், வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்குத் தொடு­னர்கள், சட்­ட­வா­ளர்கள் இதில் பங்­கேற்கப் போகின்­றனர் என்­பது உறுதி.

அதற்­கான உத்­த­ர­வாதம், ஜெனீவா தீர்­மா­னத்தில் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதனை மீறி அர­சாங்கம், உள்­நாட்டு விசா­ர­ணையே நடத்­தப்­படும் என்று அடம்­பி­டிக்க முடி­யாது.

வெளி­நாட்டு நீதி­ப­திகள் உள்­ள­டக்­கப்­பட்டால், அது கலப்பு விசா­ரணை தான்.

கலப்பு விசா­ரணை நாட்டின் இறை­மையை மீறு­கின்ற செயல் என்றும், அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என்றும், மஹிந்த அணி­யினர் போர்க்­கொடி எழுப்பத் தொடங்கி விட்­டனர்.

கடந்­த­வாரம், இவர்கள் விஹா­ர­மா­தேவி பூங்­காவில் பெரி­ய­தொரு கூட்­டத்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர்.

இந்தக் கட்­டத்தில் அர­சாங்கம், நடக்­கப்­போ­வது கலப்பு விசா­ரணை அல்ல உள்­நாட்டு விசா­ர­ணையே என்று நிரூபிக்க முனை­ய­வில்லை.

அது, ஆபத்­தான விட­ய­மா­கி­விடும் என்­பதால், தந்­தி­ர­மாக மஹிந்த கொடுத்­தி­ருந்த பொல்லை வைத்தே அவ­ரது உச்­சியில் அடி­போடத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இந்த போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு உத­வு­வ­தற்­காக, ஜப்­பா­னிய நீதி­பதி மோட்டூ நொகுசி கொழும்பு வந்திருக்கிறார்.

விசா­ர­ணை­க­ளுக்கு ஜப்­பா­னிய நீதி­பதி உதவப் போவ­தாக நாடா­ளு­மன்­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பகி­ரங்­க­மா­கவே குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றிய ஜப்­பா­னிய பிர­தி­நிதி இதனை ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்தார்.

மோட்டூ நொகுசி என்ற இந்த நீதி­பதி, கம்­போ­டி­யாவில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்­பெற்­றி­ருந்­தவர்.

இந்த தீர்ப்­பா­யத்தில் இடம்­பெற்­றி­ருந்த, நியூ­ஸி­லாந்து நீதி­பதி சில்­வியா கார்ட்ரைட் அம்­மையார், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் உரு­வாக்­கிய விசா­ரணைக் குழு­வுக்கு, ஆலோ­சனை வழங்கும் குழு­விலும் இடம்­பெற்­றி­ருந்தார்.

அவரே கலப்பு நீதி­மன்ற விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அவ­ருடன், பணி­யாற்­றிய ஜப்­பா­னிய நீதி­பதி, இங்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள போர்க்­குற்ற விசா­ர­ணை­களில் முக்­கி­ய­மான பங்­க­ளிப்புச் செய்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது­பற்­றிய அறி­விப்பை வெளி­யிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்த ஜப்­பா­னிய நீதி­ப­தியை தாம் அழைக்கவில்லை என்றும், மஹிந்த ராஜபக் ஷவே, காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்க அழைத்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

-ஆணைக்குழு-e1445415157382பர­ண­கம ஆணைக்­கு­ழு

மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்­சிக்­கா­லத்தில், உட­ல­கம ஆணைக்­கு­ழு­வுக்­கான ஆலோ­ச­கர்­களை வெளிநாடுகளில் இருந்து நிய­மித்­தி­ருந்தார். பர­ண­கம ஆணைக்­கு­ழு­வுக்கும் வெளி­நா­டு­களின் ஆலோ­ச­கர்­களை நியமித்­தி­ருந்தார்.

அவர் விடுத்த அழைப்­புக்­க­மை­யவே இப்­போதும் வெளி­நாட்­ட­வர்­களை அழைக்­கிறோம் என்று பதி­லடி கொடுக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

அது­போ­தா­தென்று, மஹிந்த ராஜபக்ஷ நிய­மித்த பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யையும் வெளி­யிட்டு பரப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த ஆணைக்கு ஏழு போர்க்­குற்­றங்கள் குறித்து சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ளது.

இதனை மஹிந்த ராஜபக் ஷ நிரா­க­ரிக்க முடி­யாது. ஏனென்றால் இது அவர் நிய­மித்த ஆணைக்­குழு.

மஹிந்த ராஜபக்ஷ வெட்­டிய குழியே இன்று அவ­ருக்கு ஆபத்­தா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது.

அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இப்­போ­தைக்கு அர­சாங்­கத்தின் இந்த வாதம்- பதி­லடி அர­சியல் ரீதி­யாக எடு­பட்­டுள்­ளது.

என்­றாலும், எடுபட்டுள்ளது.

என்றாலும், இது எந்தளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-சத்திரியன்

Share.
Leave A Reply