பிரான்ஸில் நடக்கும் 2015 ஆம் ஆண்டு கேன்ஸின் போது நடிகை ஐஸ்வர்யா நடித்த ‘ஜஸ்பா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பங்கு கொண்ட நடிகை ஐஸ்வர்யா சிக்கென்று தன் பழைய தோற்றத்தில் வந்திருந்தார். ஏற்கனவே நான்காம் நாள் கேன்ஸ் விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, பச்சை நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.
ஆனால் அதில் அவ்வளவாக எதிர்பார்த்தது போல் வரவில்லை. ஆனால் ஜஸ்பா திரைப்பட பஸ்ட் லுக்கின் போது அழகான ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.
இங்கு ‘ஜஸ்பா’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவில் பங்கு கொள்ளும் போது ஐஸ்வர்யா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
டிசைனர் ஆஸ்கர் டீ லா ரென்டா
ஐஸ்வர்யா அணிந்து வந்த மெரூன் நிற கவுனானது டிசைனர் ஆஸ்கர் டீ லா ரென்டா டிசைன் செய்தது.
ஸ்ட்ராப்லெஸ் கவுன்
மெரூன் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஐஸ்வர்யா ராய் சிக்கென்று, திருமணத்திற்கு முன்பு காணப்பட்டது போல் இருந்தார்.
வைர ஆபரணங்கள்
ஐஸ்வர்யா ராய் இந்த மெரூன் நிற கவுனிற்கு ஏற்றவாறு, கை விரலுக்கு வைர மோதிரங்களையும், காதுகளுக்கு வைர கம்மலையும் அணிந்து மின்னல் போல் மின்னினார்.
மேட்ச்சான லிப்ஸ்டிக்
ஐஸ்வர்யா ராய் மெரூன் நிற கவுன் நிறத்திலேயே தன் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.
ஐஸ்வர்யா ராய், சைடு உச்சி எடுத்து, முடியின் முனையில் கர்ல்ஸ் செய்திருந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
போஸ்
இது கப்பலில் ஏறும் போது ஸ்டைலாக நடந்தவாறு கொடுத்த ஐஸின் ‘ஜில்’ போஸ்
கண்ணைப் பறிக்கும் வகையில் நீல நிற அனார்கலியில் பளிச்சென்று வந்த ஐஸ்வர்யா! (படங்கள்)
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லரி தனது மற்றொரு கிளையை அம்ரித்சரில் திறந்தது. இந்த திறப்பு விழாவிற்கு கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அற்புதமான நீலம் மற்றும் வெள்ளை கலந்த அனார்கலியில் வந்திருந்தார். இந்த அனார்கலியில் ஐஸ்வர்யா ராய் பளிச்சென்று அழகாக காணப்பட்டார்.
சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் தனது பழைய உடல் அமைப்பைப் பெற்று, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
சரி, இப்போது அம்ரித்சரில் நடந்த கடை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!
அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா
ஐஸ்வர்யா அணிந்து வந்த நீலம் மற்றும் வெள்ளை கலந்த அனார்லியானது டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்தது.
அழகான எம்பிராய்டரி
ஐஸ்வர்யா அணிந்து வந்த அனார்கலியின் ஹைலைட்டே நீல நிறத்தில் வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பது தான். அதிலும் இந்த அனார்கலியின் துப்பட்டாவில் வெள்ளை நிற எம்பிராய்டரியுடன் கூட பார்டர் அட்டகாசமாக இருந்தது.
ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா எப்போதும் போல அளவான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். அதில் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு அழகாக கண் மை போட்டு வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்
ஐஸ்வர்யா இந்த அனார்கலிக்கு கோல்டு மற்றும் சில்வர் கலந்த காதணியையும், கைக்கு தங்க பிரேஸ்லெட்டையும் அணிந்து வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா நீல நிற அனார்கலிக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
Post Views: 38