நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி, வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டாhர்.
கடந்த 22ஆம் திகதி இரவு நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து வீட்டுக்குச் சென்ற குறித்த பெண்ணை மதுபோதையில் இருந்த சாரதி கட்டிப்பிடித்து வாயை பொத்தியுள்ளார்.
உடனே சுதாகரித்து கொண்டு அபயக்குரல் எழுப்பிய வண்ணம் அப் பெண் ஒடியுள்ளார்.
அபயக்குரலை கேட்டு அப் பகுதிக்கு வந்த இளைஞர் குழு தப்பியோடிய நபரை பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.
கொக்குவில் வண்ணார்பண்ணை பகுதியில் வழிபளியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைசெய்ப்பட்ட, மல்லாகம் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (25) உத்தரவிட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (24) கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இரு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நகைகளை அறுத்துள்ளனர்.
இதனை அவதானித்த அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 8 பவுண் தாலிக்கொடி மற்றும் 1 ½ பவுண் தங்கச்சங்கிலி என்பவற்றை அவரிடமிருந்து பொலிஸார் மீட்டனர்.
சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.