குமரி: குமரியில் இளம்பெண் ஒருவர் காதலனுடன் வீட்டில் தனியாக இருந்த காரணத்தினால் அவர்கள் இருவருக்கும் இரவோடு இரவாக திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர்.
கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும் சிதறாலைச் சேர்ந்த ஒருவரும் காதலித்து வந்தனர். அவர் அருமனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.அப்பெண்ணின் கிராமத்தில் நடந்த ஒரு முகாமுக்கு சென்றபோது அவருக்கு, அப்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் கல்லூரிக்கு வரும் சமயம் அவரை காதலர் சந்தித்து காதலை வளர்த்து வந்தார்.

மேலும் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர். நேற்றுமுன்தினம் அப்பெண்ணின் பெற்றோர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
பெற்றோர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் காதலனுக்கு அப்பெண் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தான் மட்டும் இருப்பதாகவும், எனவே நீங்கள் வாருங்கள் என்று கூறி அழைத்தார்.
அவரும் காதலி வீட்டுக்கு வந்தார். கடந்த 2 நாட்களாக காதல் ஜோடி 2 பேரும் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியாக இருந்தனர்.
கோவிலுக்கு சென்ற அப்பெண்ணின் பெற்றோர் நேற்று இரவு 7 மணிக்கு வீடு திரும்பினர். பல முறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. வெகுநேரம் கழித்து அப்பெண் கதவை திறந்தார்.
வீட்டுக்குள் அவரது காதலனும் நின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். அப்பெண்ணை கண்டித்து விசாரித்தபோது அவர் தனது காதலன் என்றும், அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார்.
இதையடுத்து அப்பெண்ணின் தந்தை மகள் என்றும் பாராமல் அவரையும், அவரது காதலனையும் போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார். போலீசார் காதலர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் 2 பேரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினர். மேலும் காதலன் எனக்கு சற்று கால அவகாசம் வேண்டும், 2 வாரத்தில் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
உடனே போலீசார் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். அதன்பிறகும் ஆத்திரம் தீராத அப்பெண்ணின் தந்தை எனது மகளை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று காதலனிடம் வலியுறுத்தினார்.
இதையடுத்து அப்பெண்ணின் கழுத்தில் அவர் தாலி கட்டி தனது ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த பிரச்சனை நள்ளிரவு வரை நீடித்து முடிவடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
Share.
Leave A Reply