சுமார்  20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூதின் கும்பலில் சோட்டா ராஜன் 2-வது நபராக இடம் பெற்றிருந்தார்.

சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தாவூதுக்கு எதிராக தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார் சோட்டா ராஜன். இதனால் இருவருக்குமிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சோட்டா ராஜனின் கதையை முடிக்க தாவூத் திட்டமிட்டார்.

2000-ஆம் ஆண்டு பாங்காக் மார்க்கெட்டில் தாவூத் ஆட்களால் ராஜன் சுற்றி வளைத்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் சோட்டாவின் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்தது. எனினும் தீவிர சிகிச்சைக்கு பின் ராஜன் உயிர் பிழைத்தார். அதன்பின் ராஜன் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து இந்தோனிசியாவின் பாலி தீவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றுக்கு வந்தபோது சோட்டா ராஜனை கைது செய்ததாக பாலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கான்பெராவில் இருந்து ஆஸ்திரேலிய போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் பாலி விமான நிலையத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் விரைவில் இந்திய அரசிடம் சோட்டா ராஜனை ஒப்படைக்கவுள்ளதாகவும் பாலி போலீசார் தெரிவித்தனர்.

 

சோட்டா ராஜன் கைதானது உண்மைதான்.. அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிவிட்டோம்: ராஜ்நாத்சிங்

26-1445862285-rajnath466-600டெல்லி: சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தோனேஷியா மற்றும் இன்டர்போல் அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார்.இந்தியாவால் 2 தசாப்தங்களாக தேடப்பட்டுவரும், நிழலுலக தாதா, சோட்டா ராஜன், இந்தோனேஷியாவின் பாலி தீவில், இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின்பேரில், இந்தோனேஷியா அரசின் ஒத்துழைப்பால், இன்டர்போல் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த தகவல் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கவனத்திற்கு வந்ததும், அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து, நடந்த சம்பவங்களை விவரித்தார்.இதன்பின் நிருபர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங் “ஆம்.. சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது உண்மைதான். இதற்காக இந்தோனேஷியா அரசு மற்றும் இன்டர்போலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.சோட்டா ராஜனை அடையாளம் காணுதல் மற்றும் அவரிம் மேற்கொள்ள வேண்டிய விசாரணை குறித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள தொடங்கிவிட்டது.இந்தியாவின் வேண்டுகோளின்பேரில்தான் இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்தது” என்றார். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறுகையில்,

இன்டர்போல் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு சிபிஐயிடம் தரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்திலும் சிபிஐதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா அரசுகள் ஒத்துழைப்போடுதான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Share.
Leave A Reply