தமிழ் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லைகள் பற்­றிய விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வி­சா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அழுத்­தங்கள் பிர­தான பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை பற்­றியும் விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இப்­ப­டு­கொலை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முத­ல­மைச்­சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான பிள்­ளையான் என்று அழைக்­கப்­படும் சிவநேசதுரை சந்­தி­ர­காந்தன் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இதேவேளை, ஏனைய தமிழ் அர­சியல் தலை­வர்­களின் கொலைகள் பற்­றியும் விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அவ்­வி­சா­ர­ணை­களின் போது திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய விசாரணை­களும், தண்­ட­னை­களும் எதிர்­கா­லத்தில் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லை­களை தடுப்­ப­தற்கு வழி­வ­குக்கும் எனலாம்.

தமிழ் அர­சியல் தலை­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­தனைப் போன்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மூதூர் முதல்வர் என அழைக்­கப்­பட்ட அப்துல் மஜீத், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த எம்.ஏ.மஹ்ரூப், இணைந்த வட­கி­ழக்கு மாகாண சபையின் உறுப்பினர்­க­ளாக இருந்த முஹம்மட் மன்சூர், அலி உதுமான், மு.காவின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகி­யோர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவர்­களின் படு­கொ­லைகள் பற்­றியும் விசா­ர­ணைகள் நடை­பெற வேண்டும்.

குறிப்­பாக, முஸ்­லிம்­க­ளுக்கு தனித்­து­வ­மா­ன­தொரு கட்­சியை உரு­வாக்­கி­யவர், பெரும்­பான்­மை­யான முஸ்லிம்களை ஒரு கட்­சியின் கீழ் கொண்டு வந்து பேரம் பேசும் சக்­தியை ஏற்­ப­டுத்­தி­யவர் என்ற பல பெருமைகளுக்­கு­ரி­ய­வ­ரான அஷ்­ரபின் மரணம் குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்று முஸ்லிம் மக்­க­ளினால் கோரிக்­கைகள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

அஷ்ரப் 2000.09.16ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மானார். ஆனால், அது திட்­ட­மி­டப்­பட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லை­யாக இருக்­கலாம் என்­பதே முஸ்­லிம்­களின் கருத்­­தாக உள்­ளது.

அவ­ருக்கு ஆயுதக் குழுக்­க­ளினால் மரண அச்­சு­றுத்­தல்கள் காணப்­பட்­டன. அர­சியல் ரீதி­யா­கவும் எதிர்ப்புக்கள் இருந்­தன.

அவர் அன்­றைய அர­சாங்­கத்தில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருந்­த­மையை பேரி­ன­வா­திகள் விரும்­ப­வில்லை. அவரை கடு­மை­யாக விமர்­சனம் செய்­தார்கள். மேலும், அவரின் தலை­மையின் கீழ் மு.கா. பெரும் அர­சியல் சக்தி­யாக வளர்ந்து வந்­ததை பேரி­ன­வாத அர­சியல் கட்­சி­களும், தலை­வர்­களும் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

இத்­த­கை­ய­தொரு பின்­னணி இருக்­கின்ற நிலை­யில்தான் அவர் ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மானார்.

ஆனால், இவர் மர­ண­ம­டைந்த போது ஹெலி­கொப்­டரின் கருப்புப் பெட்­டியும் காணாமல் போயிருந்­தது. இது முஸ்­லிம்­க­ளி­டையே பலத்த சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­படும் இந்த சந்தே­கங்­களை இல்­லாமல் செய்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அஷ்­ரபின் மரணம் குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு அன்­றைய அர­சாங்­கத்­தினால் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது. ஆனால், இந்த ஆணைக்­கு­ழுவின் செயற்­பாடுகள் பற்றி எந்­த­வொரு தக­வல்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தற்­போது தமிழ் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லைகள் பற்­றிய விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்டிருக்கின்­றன.

அவர்களுக்கு முன்னர் படு­கொலை செய்­யப்­பட்ட முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் மரணம் பற்றிய விசாரணைகள் இடம்­பெ­றாத நிலையில், அவர்­க­ளுக்கு பின்னர் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் படுகொலைகள் பற்றி விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது முஸ்­லிம்­க­ளுக்கு செய்யும் பாரபட்சமானதொன்றாகும்.

இதனை குறிப்­பி­டு­வ­தனை வைத்து தமிழ் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லைகள் பற்றி விசா­ரிக்க கூடாதென்றோ, இடை­நி­றுத்தி வைத்து விட்டு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லை­களை விசா­ரிக்க வேண்­டு­மென்றோ கூற­வ­ர­வில்லை.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் படுகொலைகள் தொடர்பில் காட்­டப்­படும் பார­பட்­சத்தை சுட்டிக் காட்­டவே இது ஒப்­பீட்டு ரீதி­யாக எடுத்துக் காட்­டப்­ப­டு­கி­றது.

இதேவேளை, இன்று பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் உள்ளவர்களின் இய­லாமை புடம்­போட்டுக் காட்­டு­வ­தற்கு தமிழ் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லைகள் பற்றிய விசா­ர­ணைகள் நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தங்கள் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லை­களை விசா­ரிப்­ப­தற்கு அழுத்­தங்­களை கொடுத்து அதனை சாத்­தி­ய­மாக்­கி­யுள்ள நிலையில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளினால் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லை­களை விசா­ரிப்­ப­தற்கு அழுத்­தங்­களை கொடுக்க முடி­யா­தது ஏன்?

ஆகக் குறைந்­தது தங்­க­ளுக்கு அர­சியல் பாடத்தை கற்றுக் கொடுத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர், மாகாண சபை உறுப்­பினர் என்ற முக­வ­ரியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு கார­ண­மாக இருந்த அஷ்­ரபின் மர­ணத்­திற்­கு­ரிய காரணங்­களை கண்டு கொள்ள வேண்­டு­மென்ற ஆர்வம் ஏற்­ப­டா­திருப்பது வருந்­தத்­தக்­க­தாகும்.

இன்று பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் அதிகமானோர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்­த­வர்கள்.

இருப்­பினும் அவர்கள் எல்­லோரும் அஷ்ரபின் கொள்­கை­களை மறந்­ததைப் போன்று அவரின் முகத்­தையும் மறந்­துள்­ளார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வ­தற்கும், அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவும் காட்டும் ஆர்வம், தமது தலை­வரின் மரணம் குறித்து காட்­டா­தி­ருப்­பது நியா­ய­மா­ன­தல்ல.

இதேவேளை, ஐ.நாவின் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் ஹுஸைன் இலங்­கையில் நடை­பெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் பற்றி அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட வேண்­டு­மென்று கேட்டுள்ளார்.

அவ­ரினால் இலங்கை தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள 20 அம்­சங்கள் கொண்ட அறிக்­கையில் இது பற்றி தெரி­விக்­கப்பட்டுள்­ளது. இலங்­கையில் ஜனா­தி­பதி ஆணைக்­குழுக்கள் பல நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

 

அவை விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளன. ஆனால், எல்லா அறிக்­கை­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையில் நடை­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்தில் முஸ்­லிம்­களும் கணி­ச­மான வகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவை­க­ளுக்­கு­ரிய தீர்­வு­களை பெற்றுக் கொடுப்­பது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கட­மை­யாகும். கட­மை­களை மறந்து கொண்­டி­ருக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அஸ்­ரப்பின் மரணம் குறித்து விசா­ர­ணைகள் நடை­பெற வேண்­டு­மென்று அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுப்­பார்கள் என்று நம்பமுடியாது.

அமைச்சர் பத­வி­க­ளுக்கும், ஏனைய சொகு­சு­க­ளுக்கும், தனி­நபர் சொத்துக் குவிப்­புக்கும் தடை­களை ஏற்படுத்திவி­டு­மென்று சிந்­திக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்கும் வரைக்கும் முஸ்­லிம்கள் தலை நிமிர்ந்து வாழ முடி­யாது.

ஒரு சமூகம் தலை நிமர்ந்து வாழ்­வ­தென்­பது அச்­ச­மூ­கத்தின் தலை­வர்­களின் செயற்படுகளிலேயேதங்கியுள்ளன.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், மக்கள் பிர­தி­நி­தி­களும் சமூக சிந்­த­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு தனது குடும்பம், நண்­பர்கள், உற­வி­னர்கள் என்று சிந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதனை முஸ்­லிம்கள் பர­வ­லாக அறிந்­தி­ருந்தும் மீண்டும் மீண்டும் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கே வாக்­க­ளித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஏமா­று­கின்­ற­வர்கள் உள்­ள­வரை ஏமாற்­று­கின்­ற­வர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்­பார்கள்.

முஸ்­லிம்­களின் உரிமை அர­சி­யலை தங்­களின் சுய­ந­லன்­க­ளுக்­காக புதைத்தவர்கள் இன்று அரசாங்கத்தின் பக்கம் இருந்து கொண்டு அபிவிருத்தி அரசியலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

அபிவிருத்தி அரசியலை திட்டமிடாது அரசாங்கத்தின் நிதியை வீண்விரயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். கடற்கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் நிந்தவூரில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நிந்தவூர் வைத்தியசாலையும் இதே மாதிரியே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அவ்வைத்தியசாலை பல தடைகைளை எதிர்கொண்டுள்ளது.

இதே போன்று அம்பாரை மாவட்டத்தில் பல அபிவிருத்திப் பணிகள் திட்டமிடப்படாத வகையிலும், பிரதேச செயலாளர்களின் அனுமதியை முறையாகப் பெற்றுக் கொள்ளாத வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது பற்றி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் நிதியை பொறுப்புடன் மக்கள் பயன்பெறும் வகையில் செலவு செய்யப்படுவதற்கு; நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Share.
Leave A Reply