யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடலில் குளித்த இரு இளைஞர்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்து உள்ளனர்.
எழுதுமட்டுவாளை சேர்ந்த அருள்ராசா ஜோன் அஜித் (வயது 21) , தர்மகுலசிங்கம் டினா (வயது 21) ஆகிய இருவருமே உயிரிழந்து உள்ளனர்.
இரு இளைஞர்களும் திங்கள் கிழமை காலை கடற்கரைக்கு சென்று மீன் வாங்கி வருவதாக கூறி சென்று நாகர் கோவில் கடலில் குளித்து உள்ளனர். அதன் போது இருவரும் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
அருள்ராஜா ஜோன் அஜித் என்பவருடைய சடலம் குடாரப்பு கடற்கரையிலும் தர்மகுசிங்கம் டினா என்பவரின் சடலம் நாகர்கோவில் கிழக்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கியுள்ளன. இவருடைய சடலமும் மீட்கப்பட்டு மந்திகை வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நடந்தது இது தான்…!
அந்த இரு நண்பர்களும் என்றும் அனேகமாக பிரிவதே இல்லை.அது போன்று தான் இன்றும். இருவரும் வழமையாக நேரம் கிடைக்கும் போதேல்லாம் வாரத்துக்கு ஒரு முறையாவது நாகர்கோவில் கடலில் நீராடுவதற்காக செல்பவர்கள்,அது போன்று தான் இன்றும் (26.10.2015) சென்றார்கள் .
அவ்வாறே சென்று தாங்கள் நீராடுவதற்கு இறங்கும் இடத்தில் செல்கையில் அங்கிருக்கும் “மீனவர்கள்,படகோட்டிகளால்” எச்சரிக்கை செய்யப்பட்டது.
“இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது நீங்கள் உள்ளே இறங்காதீர்…”
“நாங்கள் கூட இன்று தொழிலுக்கு செல்லவில்லை”
என்ற செய்தியை அங்கு நின்ற மீனவர்கள் பரவலாக்கி கொண்டனர்.
இதை கூட சற்றும் காதில் போட்டுக்கொள்ளாமல் அங்கிருந்து விலகிய இருவரும் சற்று தூரம் தள்ளிச்சென்று உடைகள், பணப்பைகள், கைத்தொலைபேசிகளை வைத்துவிட்டு கடலில் இறங்கிகொண்டனர்.
இதை அவதானித்தவர்கள் 15நிமிடம் கழித்து அவ்விடத்தை நோக்கிய போது இருவரையும் கடலில் இல்லை.
“அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது”
அவர்களது உடைமைகள் அங்கேயே கொட்டிக்கிடந்தன. இதை அவதானித்தவர்கள் விரைவாக அங்கு தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க,கடலின் அலைகளோ பாரிய இரைச்சலுடன் கரைகளுடன் போரில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது.படகோட்டிகளால் படகை கடலில் இறக்கி தேடவும் முடியவில்லை.
1கிலோமீட்டர் தொலைவில் சற்று நேரம் கழித்து ஒருவரது உடல் சடலமாக கரையொதுங்கியது சுமார்
அவர் தான் மிருசுவில் படித்தமகளீர் குடியேற்றதிட்டம் (பாம்) இல் வசிப்பவரும். யாழ்-சாவகச்சேரி இந்துக் கல்லுரியின் 2013ம் ஆண்டின் உயிரியல் துறை மாணவனும் ஆகிய தனபாலசிங்கம்டினா
பின்னர் சில மணிநேரங்களின் பின்னர் ஒருவர் கரையேறிய இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கரையேறியது மற்றவர் உடல்.அவரும் அதே இடம்,அதே பாடசாலையை சேர்ந்த 2013 உயிரியல் மாணவனான ஜான் அஜித்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களின் தொலைபேசி மூலம் அவரவர் வீடுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டதுடன். பருத்தித்துறை போலீசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. உடனே அவ்விடத்துக்கு விரைந்த போலீசார் சடலங்களுக்கு பாதுகாப்பு வழங்கியவண்ணம் இருக்க நீதிபதி அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டார் மாலை 5.00 மணியளவில்.
நீதிபதியின் கண்காணிப்பின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மாலை 08.00மணியளவில் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அகவை இருப்பத்தொன்ரில் கடல் அன்னையின் பசிக்கு இரையான அந்த உயிர்களை எண்ணி பலரது நெஞ்சங்கள் நொருங்கிப்போனது, கண்கள் கலங்கின. நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கியது, நட்புடன் பழகிய நாட்கள் அலை மோதின கண்மூடிய அவனவன் கண்களை பார்க்கையில்.
அந்த கடல் தனில் இரு தாய்,தந்தையின் கனவுகள்,எதிர்பார்ப்புக்கள் சிதைக்கப்பட்டது.
பிள்ளையை பறிகொடுத்த பாவியாய் அழுதுபுலம்பல்களுடன் கடற்க்கரை மணலில் கதறுகின்றார்கள்.
தற்போதோ வீடுகள் எங்கு அழுகுரல்களே ஒலிக்கின்றது.
குறிப்பு – இயன்ற அளவு நீங்கள் செல்லும் இடங்களை துல்லியமாக உங்கள் உறவினர்களுக்கு அறியக்கொடுத்துவிட்டு செல்லுங்கள்.
முடிந்தவரை உங்கள் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பாளிகள்.
விளையாட்டுக்கள் விபரீதத்தில் முடியும்.
காலநிலைகளையும்,சுற்றுலாக்களையும் உரிய விதத்தில் பயன்படுத்துங்கள்.
சுற்றுலாக்களை தவிர்த்துக்கொள்வதும் நல்லது.
மீண்டும் ஒரு உயிர் இழப்பதற்கு இடம் கொடுக்காதீர்