உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளம்பெண், தனது கைபேசியில் மரண வாக்குமூலத்தை பதிவுசெய்து, தூக்குக் கயிற்றில் துடிதுடித்துச் சாகும் காட்சியையும் வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா நகரில் வசித்துவந்த நேஹா யாதவ் என்ற அந்தப்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணவருக்கு போன்செய்து, நீங்கள் இனிமேல் என்னைப் பார்க்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

கலக்கமடைந்த கணவர் யாடேஷ் யாதவ், வீடுவந்து சேர்வதற்குள் நேஹா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

அங்கு தற்கொலைக்கான காரணம் தொடர்பாக ஒரு கடிதமும், நேஹாவின் செல்போனும் கிடந்தது. அந்த செல்போனில் நேஹாவின் குரல் வாக்குமூலமும், தூக்கில் தொங்கி உயிரிழக்கும் வீடியோ காட்சியும் பதிவாகி இருந்ததை கண்ட யாடேஷ் யாதவ், அந்த செல்போனை அங்கிருந்து எடுத்துகொண்டு, வந்தச் சுவடே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

இதுதொடர்பாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குவந்த போலீசார் நேஹாவின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, போலீசாரை கைபேசி மூலம் தொடர்புகொண்ட யாடேஷ் யாதவ், நேஹாவின் மரணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை.

தனது பெற்றோரின் புறக்கணிப்புக்கு உள்ளானதால்தான் இந்த தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்தேன் என நேஹாவே மரண வாக்குமூலம் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேஹாவின் குரல் வாக்குமூலத்தை யாடேஷ் ‘வாட்ஸ்அப்’ மூலமாக போலீசாருக்கு அனுப்பியுள்ளார். எனினும், அவர் சரணடைந்து நேஹாவின் செல்போனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதன்பின்னரே, இவ்வழக்கில் இறுதிமுடிவு எடுக்க முடியும் என கூறும் போலீசார், யாடேஷ் யாதவை கைதுசெய்ய தேடிவருகின்றனர்.

Share.
Leave A Reply