தனது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயாரிடமிருந்து பணத்தை கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா- ஹெட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அவர்கள் இருவரும் வங்கியிலிருந்து எடுத்து வந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை அவர்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளார்.

முகத்தை மறைத்தவாறு வந்துள்ள அவர் சிறிய தந்தையின் கழுத்தை கத்தியால் வெட்டியுமுள்ளார்.

அப்பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அப் பணம் அவர்களால் அனுப்ப ப்பட்ட தெனவும் தெரிவித்துள்ளார்.

penமேலும் அப்பெண் அவரது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயின் பராமரிப்பில் இருந்து வந்தவரெனவும் , அவர் பணத்தை வீண் விரயம் செய்வதால் பணத்தை அவருக்கு அனுப்பாமல் சிறிய தந்தைக்கு அனுப்பிவரும் விடயமும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 31 வயதுடைய பெண் ஒருவர் என்பதுடன் காயமடைந்த நபரின் மனைவியின் சகோதரியுடைய மகள் எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டிருந்த வேளையில் பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததோடு பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

pennnஇதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபரான குறித்த பெண் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தான் அதிகளவான கடன்சுமைக்கு முகங்கொடுத்திருப்பதால் இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண் வருகின்றனர்.

 

Share.
Leave A Reply