கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் இன்று மாலை 6.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்ட அவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் குறித்த பகுதியிலுள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Kele-Ac-02Kele-Ac-03Kele-Ac-04Kele-Ac-05Kele-Ac-01

Share.
Leave A Reply