பராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம் ரத்த காட்டேரி போன்று இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பராகுவே பகுதியில் தண்ணீரில் மிதந்து வந்த அந்த வித்தியாசமான உருவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
சிதிலமடைந்த நிலையில் தண்ணீரில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கிய அந்த உருவம் ரத்த காட்டேரி போன்று இருப்பதாக பீதியடைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலி, மெக்சிகோ பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மிருகங்களை தாக்கி ரத்தம் குடித்து வந்த ரத்த காட்டேரியான Chupacabra எனவும் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Carmen del Paarana எனும் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சந்தேகத்துக்குரிய இந்த உருவத்திற்கு மனிதர்கள் போன்று கைகள் மற்றும் விரல்கள் இருப்பதாக கூறியுள்ள கிராம மக்கள்,
இதுபோன்ற உருவங்கள் அருகாமையில் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.