இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவரை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டி மேற்குக் கரை, ஹெப்ரூன் நகரில் இப்ராஹிமி பள்ளிவாசலு க்கு அருகில் 23 வயது பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் பலஸ்தீனர் ஒருவரது தோளில் தாக்குவதும் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் பார்த் ததாக பலஸ்தீனின் மஅன் செய்திச் சேவை க்கு சம்பவத்தை பார்த்த ஒருவர் விபரித்துள்ளார்.
“அப்போது அந்த இளைஞனை நோக்கி வந்த இஸ்ரேல் வீரர் அவரது தலையில் சுட்டார். பின்னர் அவரது சடலத்துக்கு அருகில் கத்தி ஒன்றை போட்டார்” என்று நேரில் பார் த்தவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் வீரர் சுடு ம்போது அந்த பலஸ்தீனர் ஓடுவதை கண்ட தாக மற்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “அந்த இளைஞன் நிலத்தில் விழுந்தான். பின்னர் அவ ரது ஆடைகள் களையப்பட்டு சடலம் கறுப்பு பையில் போடப்பட்டது” என்று நேரில் பார்த்த மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளது.
எனினும் முற்பிதாக்களின் கல்லறைக்கு அரு கில் படையினர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக் குதல் நடத்த முயன்றபோது பதில் நடவடிக் கையாக படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி னர் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டு ள்ளது.
இப்ராஹிமி பள்ளிவாசலை யூதர்கள் முற்பிதாக்களின் கல்லறை என்றே அழைக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ஹெப்ரூன் நகரில் மோதல் வெடித்ததோடு அருகில் இருக் கும் பாடசாலைகள் மூடப்பட்டன.
இதன்படி ஹெப்ரூன் நகரில் மாத்திரம் இம் மாதத்திற்குள் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீ னர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஐவர் சிறுவர்களாவர். இதில் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம்சாட்டியே பெரும்பாலான பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற பகுதியான கர்யாத் அர்பாவுக்கு அருகில் கடந்த புதன்கிழமை 23 வயது பலஸ்தீனர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு முற்பட்டதாக குற்றம்சாட்டி இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்மாம் செய்யித் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதன்போது ஹம்மாம் மீது 11 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோட அவர் இறக்கும் வரை இரத்தம் கொட்ட வீதியில் விடப்பட்டிருந்ததாகவும் பின்னர் சடலத்திற்கு அருகில் இஸ்ரேல் இராணுவம் கத்தியை வைத் ததாகவும் சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித் துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் கடைசியில் ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் அத்து மீறல்கள் அதிகரித்ததை அடுத்தே அங்கு பதற்றம் தீவிரம் அடைந்தது. ஆரம்பத்தில் கிழ க்கு nஜரூசலத்தில் வன்முறைகள் அதிகரித் திருந்த நிலையில் அது தற்போது மேற்குக் கரைக்கு பரவியுள்ளது.
இந்நிலையில் தொட ரும் வன்முறைகளில் கடந்த ஒக்டோபர் முத லாம் திகதி தொடக்கம் இஸ்ரேல் படையின ரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இல்லக்காகி கொல் லபட்டிருக்கும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.
மறுபுறம் இந்தக் காலப்பிரிவில் பலஸ்தீனர்களின் தாக்குதல்க ளில் 11 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ள னர்.
பலஸ்தீனர்கள் மீதான ஒருசில கொலை கள் அநீதியானது என்றும் இஸ்ரேல் இராணு வம் கடுமையாக பலப்பிரயோகத்தை மேற் கொண்டிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே 1948ஆம் ஆண்டு தொடக் கம் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் அதி ர்ச்சி தரும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டி ருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப் பாஸ் பலஸ்தீன மக்களுக்கு சர்வதேச பாது காப்பு தேவை என்று ஐ.நாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஜெனீவாவில் இருக் கும் ஐ.நா. மனித உரிமை கௌன்ஸிலில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவி த்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன த்திற்கு இடையில் தொடரும் வன்முறை ஒரு பேரவலத்திற்கு இட்டுச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று எச்சரிக்கை விடுத்திரு ந்தது.
தற்போதைய வன்முறை ஆறு தசாப்த மோதலில் அபாயகரமான மற்றும் கடுமையானதாக உள்ளது என்று மனித உரிமை உய ர்ஸ்தானிகர் செயித் ராத் அல் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.
“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன வன்முறை உடனடியாக நிறுத்த முடியாத வகையில் ஒரு பேரவலத்தை நோக்கி செல்கிறது” என்று அவர் எச்சரித்தார்.