முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.
ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம், கடந்த 23ஆம் நாள் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது.
இந்த தகவலை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகள், உயிருடன் இருந்த திமிங்கலத்தை கடலுக்கள் விடும் முயற்சியில் இறங்கினர்.
பெருமளவு சிறிலங்கா படையினர், காவல்துறையினர், பொதுமக்கள் இந்த பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, சுமார் 8 மணிநேரம் நடந்த போராட்டத்தின் முடிவில், கரையொதுங்கிய திமிங்கலம், மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.