தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.

திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார்.

மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது.

இதனையடுத்து தனது மனைவியை தனக்கு துரதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் ஒருவர் எனக் கருதிய அந்தக் கணவர், அவரை விவாகரத்துச் செய்வதற்கு முடிவெடுத்ததாக சவூதி அரேபிய ஊடகமான அல்- மர்ஸாத் அறிக்கையிட்டுள்ளது.

Share.
Leave A Reply