அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அந்தக் குழுக்களுக்கிடையேயான சண்டையை நிறுத்தி அங்கே குழுமியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒரு 17 வயது பெண், பொலிசாரை வெறுப்பேற்றும் விதமாக ‘வாட்ச் மீ’ (சைலண்ட்டோ) என்கிற பிரபலப் பாடலைப் போட்டு திடீரென ஆடத் தொடங்கினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் மீது மிளகு தெளிப்பானையோ, தடியடியையோ பயன்படுத்த முயற்சிக்காமல், அவருக்கு இணையாக இன்னும் சிறப்பாக நடனமாடினார்.

அடிதடியை நிறுத்த ஆயுதத்தை கையில் எடுக்காமல், அவர்களது போக்கிலேயே சென்று, நிலைமையை நடனமாடி சமாளித்த அந்தப் பெண் பொலிஸ் அதிகாரியின் சமயோஜித அறிவு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பொலிஸ் அதிகாரியின் நடனத்தைக் காண….

Share.
Leave A Reply