களுத்துறை, புளத்சிங்கள பிரதேசத்தில் கடந்த 27ஆம் திகதி மரமொன்றிலிருந்து வேலியொன்றின் மேல் விழுந்த மாணவன், நெஞ்சுப் பகுதியில் கம்பு குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

16 வயதான குறித்த மாணவன், தனது மாமாவுடன் வயலுக்கு சென்றுள்ளார். அங்குச்சென்று, அருகிலிருந்த மா மரத்தில் ஏற்றியுள்ளார். அதன்போதே, மரத்திலிருந்து தவறி, மாமரத்துக்கு கீழிருந்த வேலியில் விழுந்துள்ளார்.

அந்த கம்பு மாணவனின் நெஞ்சுப் பகுதியை பதம்பார்த்துள்ளது. சம்பவத்தையடுத்து அவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், கம்பு அகற்றப்படாமல் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அங்கு ஆறுமணிநேரம் மேற்கொண்ட சத்திர சிகிச்சையடுத்தே அக்கம்பு அகற்றப்பட்டது.

தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை இந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மாம்பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!- (அதிர்ச்சி வீடியோ)
28-10-2015

மரத்தில் இருந்து விழுந்த சிறுவனின் நெஞ்சு பகுதியில் பரகை துண்டு பாய்ந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

16 வயதான பாடசாலை மாணவரே இவ்வாறு அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்த சம்வம் புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்ற சிறுவன் மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கிழே விழுந்துள்ளார். இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின்  நெஞ்சில் பாய்ந்துள்ளது.

இவ்வாறு சிறுவனின் நெஞ்சில் பாய்ந்துள்ள பலகைதுண்டை வெளியில் எடுப்பதற்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக, மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் குழு போராடி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Share.
Leave A Reply