வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்கவின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஏ9 வீதியில் குறித்த காரினை அதன் சாரதி செலுத்திக் கொண்டிருந்த போது, வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் கார் பயணித்த போது தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது சாரதி கதவிளை திறந்து வெளியில் பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தண்ணீர் பவுசர்கள் வரவழைக்கப்பட்டு நீர் பாய்ச்சி தீ அணைக்கப்பட்டது. எனினும் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இத் திடீர் தீவிபத்துக்கான காரணம் உடனடியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.