சென்னை: அப்பா கமல்ஹாசன் தீபாவளிக்கு எங்கு துணி எடுக்கலாம் என்று அறிவுறுத்தி, துணிக்கடை விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரது மகள் ஸ்ருதிஹாசன், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு துறை எடுத்துள்ள விளம்பர படத்தில் நடித்துள்ளார். suruthiy
பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் ரூ.16 கோடியை சம்பளமாக பெற்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்த விளம்பரத்தில், தீபாவளிக்கு துணி எடுப்பதன் பாரம்பரியத்தையும், அதை எந்த ஜவுளிக்கடையில் எடுத்தால் நல்லது என்பது குறித்தும் கமல் விளக்குகிறார்.

இந்நிலையில் அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தீபாவளி பட்டாசு குறித்த பாதுகாப்பு விளம்பர கானொலியில் நடித்துள்ளார்.

இந்த வீடியோவை தமிழ்நாடு தீயணைப்பு துறை எடுத்துள்ளது. யூடியூப்பில் அதை வெளியிட்டுள்ளது.

கையில் வைத்து ஃபிளவர் பாட்ஸ்சை வெடிக்க கூடாது, நீளமான அகர்பத்தியை கொண்டு பட்டாசு கொளுத்த வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகளை ஸ்ருதி தனது தத்துபித்து தமிழிலில் வழங்குகிறார்.
நீங்களும் பாருங்கள். எச்சரிக்கையாக தீபாவளி பட்டாசுகளை வெடித்து மகிழுங்கள்.
Share.
Leave A Reply