தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தற்கொலையே செய்துள்ளார் என சுட்டிக்காட்டியவர் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் சக்தி அவசியம் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;

கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி யின் உப­த­லைவர் பத­வி­யி­லி­ருக்கும் நீங்கள் அதி­லி­ருந்து விலக வேண்­டு­ மென்ற தீர்­மா­னத்தை எடுத்­த­மைக் ­கான பின்­னணி என்ன?

பதில்:- தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை விட்­டுப்­பி­ரிந்­ததன் பிற்­பாடு சில ஓய்­வுக்கு பின்னர் நான் நேரடியாக தேசிய கட்­சி­யான சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லேயே இணைந்­தி­ருந்தேன்.

அதற்கு சில கார­ணங்­களும் இருந்­தன. குறிப்­பாக யுத்­தக்­கொ­டூரத்­தி­லி­ருந்து தமிழ் மக்­களை காப்­பாற்­று­வ­தற்­காக அந்த இணைவை பயன்­ப­டுத்­த­வேண்­டு­மென்றே எதிர்­பார்த்தேன். தவிர அர­சாங்கம் என்னைப் பயன்படுத்துவதற்கு தற்­போ­து­வ­ரையில் நான் இட­ம­ளிக்­க­வில்லை.

நடை­பெற்று நிறை­வ­டைந்த பொதுத்­தேர்­தலில் என்­னைப்­போட்­டி­யி­டு­மாறு அழுத்­த­ம­ளித்­தார்கள். இருப்­பினும் நான் போட்­டி­யிட மறுத்­தி­ருந்தேன்.

முன்­ன­தாக மட்­டக்­க­ளப்­பிலும் சரி ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் சரி பெரும்­பான்மை தேசிய கட்­சி­களின் ஊடாக தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன் என்­பதை அறி­வித்­தி­ருந்தேன். அந்த கொள்­கைக்கு அமை­வா­கவே நான் போட்டி­யிட மறுத்­தி­ருந்தேன்.

தற்­போ­துள்ள நிலை­மை­களின் பிர­காரம் தொடர்ந்தும் அக்­கட்­சியில் இருப்­பதால் எமது மக்­க­ளுக்­காக எத­னையும் பெற்­றுக்­கொள்ள முடி­யாது. ஏன், பெற­மு­டி­யா­தெனக் பார்ப்­போ­மானால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாதை மாறிச் செல்­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கான ஆத­ரவை தெரி­வித்து நூறு­நாட்­க­ளுக்குள் அனைத்­தையும் செய்­து­த­ரு­வ­தாக வாக்­கு­று­தி­யளித்­தார்கள்.

அதன் பின்னர் பொதுத்­தேர்­த­லிலும் கடு­மை­யாக வாக்­கு­று­தி­களை வழங்கினார்கள். தற்­போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக மாறி­ய­பின்னர் அவர்கள் மௌனி­க­ளா­கி­விட்­டனர்.

கேள்வி:- புதிய அர­சாங்­கத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யா­கவே காணப்­ப­டு­கின்­றதே?

பதில்:-தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றமை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய விடயம்.

ஆனால் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிரதித் தலைவர் பத­வியை ஏற்­றுக்­கொண்­டி­ருக்கக் கூடாது. இலங்கை வர­லாற்­றினை பார்க்­கையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­வர்­க­ளுக்கே அப்­ப­தவி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

எதிர்­க்கட்­சியில் இருப்­ப­வர்­க­ளுக்கு அப்­ப­தவி வழங்­கிய வர­லா­று­க­ளில்லை. இம்­மு­றையே அப்­ப­தவி கூட்டமைப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­மையால் அவர்கள் அர­சாங்­கத்தின் அங்­க­மா­கி­விட்­டார்கள்.

அவர்கள் அர­சாங்­கத்தின் வார்த்­தையை மீறி செயற்­ப­டு­வ­தென்­பது முடி­யாத விடயம். இதனால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்­பட்­டுள்­ளது.

கேள்வி:- பல­வீ­ன­மான நிலையில் இருக்கும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை நீங்கள் தெரிவு செய்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- தமிழர் விடு­தலைக் கூட்­டணி பழம்­பெரும் கட்­சி­யாகும். இந்­த­க் கட்­சி­யி­லி­ருந்தே அப்­பாப்­பிள்ளை அமிர்த­லிங்கம் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரானார்.

இரா.சம்­பந்தன் முதன் முத­லாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வானார். அக்­கட்சி ஆரம்­பத்­தி­லி­ருந்து இன்றுவரையில் காந்­திய வழி­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது.

அதன் கார­ணத்­தா­லேயே அமிர்­த­லிங்கம், சிவ­சி­தம்­பரம், நீலன் திருச்­செல்வம் என பலர் அழிக்­கப்­பட்­டார்கள். இறு­தி­யாக அவர்­களின் கருத்­துக்­களே இன்று நிதர்­ச­ன­மா­கின்­றன.

குறிப்­பாக தற்­போ­தைய தலைவர் ஆனந்­த­சங்­கரி விடு­த­லைப்­பு­லி­களால் துரோ­கி­யாக பார்க்­கப்­பட்­டவர். அக்­காலத்­திலும் அவர் விடு­த­லைப்­பு­லி­களின் தலை­வ­ருக்கு பல­வி­ட­யங்கள் குறித்து கடிதம் தொடர்ச்­சி­யாக எழுதிக்­கொண்­டே­யி­ருப்பார்.

அவ­ரு­டைய கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்­களின் யதார்த்தம் தற்­போது வெளிப்­பட்­டுக்­கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­லேயே திட்­ட­மிட்டு இக்­கட்சி ஓரங்­கட்டப்­பட்­டுள்­ளது. எனினும் அக்­கட்­சியின் தலைவர் கொள்கை மாறா­தி­ருக்­கின்­றமை விசே­ட­மான­தாகும்.

உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் கூட இல்­லாத நிலையில் இக்­கட்சி காணப்­படு­கின்­றதால் பல­வீ­ன­மான கட்சியென பொருள்­ப­டாது.

இவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களால் தமிழ் மக்­க­ளுக்கு இன்று மாற்று அர­சியல் சக்­திகள் அவ­சி­ய­மா­கின்­றன.

மேலும் ஆனந்த சங்­கரியும் தன்­னுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான கத­வுகள் திறந்­தி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­த­மையால் அவ­ருடன் எதிர்­கா­லத்தில் இணைந்து செயற்­ப­ட­வுள்ளேன். உள்­ளூராட்சி மன்றத் தேர்­த­லி­லி­ருந்து எமது பயணம் ஆரம்­ப­மாகும்.

கேள்வி:- விடு­தலைப் புலிகள் இயக்­ கத்­தி­லி­ருந்து நீங்கள் பிரிந்­த­மைக்­ கான பிர­தான காரணம் என்ன?

பதில்:-செப்­டெம்பர் 11ஆம் திகதி அமெ­ரிக்க இரட்­டைக்­கோ­புர தாக்­கு­தலின் பின்னர் உலக அர­சியல் ஒழுங்கில் மாற்­ற­மேற்­பட்­டி­ருந்­தது.

எங்கு பயங்­க­ர­வாதம் காணப்­ப­டு­கின்­றதோ அதனை அழிக்க வேண்­டு­மென்ற சட்­டமும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதன்­போதே தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை அழிக்க வேண்­டு­மென்று முடி­வா­கி­விட்­டது.

அக்­கா­ல­கட்­டத்­திலே ஒஸ்­லோவில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன.

இந்த சம­யத்தில் விடு­தலைப் புலிகள் அமைப்பை காப்­பாற்ற வேண்­டு­மென எண்ணம் எனக்குள் ஏற்­பட்­டது. ஆகவே அர­சியல் ரீதி­யாக இயக்­கத்தை மாற்­ற­மடையச் செய்­வ­தற்கு முயற்­சி­களை அர­சியல் ஆலோ­சகர் அன்ரன் பால­சிங்­கத்­துடன் இணைந்து மேற்­கொண்டேன்.

இருந்­த­போதும் ஒஸ்லோ ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்து வைத்­தமை தொடர்­பாக என்­மீது குற்­றச்­சாட்­டுக்கள் வைக்­கப்­பட்­ட­மையால் அவ்­வ­மைப்­பி­லி­ருந்து வில­கி­னேனே தவிர எனக்கும் விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்­கு­மி­டையில் எந்­த­வி­த­மான தனிப்­பட்ட குரோ­தங்­க­ளு­மில்லை.

கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு உலக அரங்கில் ஏற்­பட்ட, ஏற்­ப­ட­வுள்ள மாற்­ றங்கள், அதற்­கான அடுத்த கட்ட செயற்­பா­டுகள் தொடர்­பாக தத்­து­வா­சி­ரியர் அன்ரன் பால­சிங்­கத்­தாலோ அல்­லது உங்­க­ளாலோ தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டதா?

பதில்:-இந்த விடயம் தொடர்­பாக பல தட­வைகள் பிர­பா­க­ர­னுடன் பேசி­யி­ருக்­கின்றோம். ஒவ்­வொரு பேச்சுவார்த்­தைகள் நிறை­வ­டையும் போதும் அது தொடர்பில் அவ­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டன.

எதிர்­கா­லத்தில் உலக ஒழுங்கில் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வுள்­ளதால் எமது அடுத்த கட்ட நகர்­வுகள் இவ்­வா­றுதான் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

அக்­கா­லப்­ப­கு­தியில் இயக்­கத்­தி­னுள்­ளி­ருந்து அர­சியல் விட­யங்­களை திட்­ட­மி­டு­வ­தற்­காக ‘சிரான்’ என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. இருப்­பினும் அந்­நே­ரத்தில் இருந்த சூழ்­நி­லையில் ஆயு­தப்­போ­ராட்டம் தான் முடிவு என்ற தீர்­மா­னத்­தினை எடுத்­தி­ருந்­தனர்.

விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் ஆயுத ரீதி­யாக போராடி பல வெற்­றி­க­ளைப்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது என்பதில் மாற்­றுக்­கருத்­திற்கு இடமில்லை.

குறிப்­பாக ஜெய­சிக்­குறு நட­வ­டிக்­கையின் போது களத்தில் நின்­றவன் என்ற அடிப்­ப­டையில் அதன்­போது எமக்கு பாரிய ஆட்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டது.

அதன் பின்னர் வீட்­டுக்கு ஒருவர் இயக்­கத்தில் இணை­ய­வேண்­டு­மென்று கட்­டா­யத்தின் அடிப்­ப­டையில் ஆட்­சேர்ப்பு இடம்­பெற்­றது. கட்­டாய ஆட்­சேர்ப்பின் மூலம் யுத்­தத்தை தொட­ரலாம் என்­பது முடி­யாத விட­ய­மாகும். இதனால் மக்கள் தமது பிள்­ளை­களை இழந்து துன்­பத்­தி­லி­ருந்­தனர். அவர்கள் போராட்­டத்தை விரும்­பாது சலிப்­ப­டைந்­தி­ருந்­தார்கள்.

கேள்வி:- விடு­தலைப் புலி­களின் பின்­ன­டை­வு­க­ளுக்கு உங்­களின் பிரி­வு­ மொரு காரண­மாக கூறப்படுகின்­றதே?

பதில்:-அது தவ­றான கருத்­தாகும்.அதனை ஏற்­க­மு­டி­யாது. நான் அந்த இயக்­கத்­தி­லி­ருந்து பிரிந்து வந்­த­வுடன் ஏனைய போரா­ளி­களை வீட்­டுக்கு அனுப்­பி­யி­ருந்தேன்.

அந்த இயக்­கத்­திற்கு எதி­ராக ஆய­ுத­மேந்­த­வு­மில்லை. போரா­ட­வு­மில்லை. அதே­நேரம் பிர­பா­கரன் தொடர்பில் எந்­த­வி­த­மான விமர்­ச­னங்­களை நான் முன்­வைக்­க­வு­மில்லை. அவரும் என்­னு­டைய விட­யங்கள் தொடர்­பாக கூற­வில்லை.

கேள்வி:- தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உங்­களை விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பி­லி­ருந்து வெளிக்கொண்­டு­வந்­த­மைக்கு தானே கார­ண­மெ­னக்­கூ­றி­யி­ருக்­கின்றார். அத­னா­லேயே அவ்­வ­மைப்பு பல­வீ­ன­மா­க்­கப்­பட்­ட­தா­கவும் கூறு­கின்­றாரே?

பதில்:– எனது பிரிவு அவ்­வ­மைப்பை பல­வீ­ன­மாக்­கி­யி­ருக்­கலாம். நான் யுத்­த­க­ளத்தில் தள­ப­தி­யாக இருந்து செயற்­பட்­டதன் கார­ண­மாக அவ்­வாறு அமைந்­தி­ருக்­கலாம்.

அதே­நேரம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்தில் நியா­யமொன்றும் இருக்­கின்­றது. அதா­வது, ஒஸ்லோ பேச்சுவார்த்தை இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் உலக நாடு­களைப் பயன்­ப­டுத்தி விடு­த­லைப்­பு­லிகள் மீது அழுத்தமொன்றை கொண்­டு­வந்­தி­ருந்தார்.

அந்த பாரிய அழுத்­தத்தை விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன் புரிந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.

வெளிப்­ப­டை­யாக கூறு­வ­தானால் சர்­வ­தேச வலைப்­பின்­ன­லொன்றை ஏற்­ப­டுத்தி விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பை கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்ற திட்­டத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொண்­டி­ருந்தார்.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவ்­வா­றான அழுத்தம் வழங்­கப்­பட்­டது. அத­னையே அவர் தனது பங்­க­ளிப்­பாக கூறுகின்றார். மேலும் அவ்­வா­றான வலைப்­பின்­னலில் நாம் சிக்­காது எவ்­வாறு வெளியில் வரு­வ­தென்ற நகர்வில் தோல்­வி­ய­டைந்­து­விட்டோம்.

கேள்வி:- நீங்கள் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்­து­செல்­வ­தற்கு முன்­ன­தாக உங்­க­ளுடன் பேரம்­ பே­சப்­ பட்­ட­தா­கவும் அப்­போ­தைய அர­சாங்­ கத்­த­ரப்­பினர் சார்பில் சில முக்­கி­யஸ்­தர்கள் உங்­களை தனி­யாக சந்­தி­த் திருந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அவ்­வாறு எந்­த­வொரு தரப்­பி­னரும் என்னை அணு­க­வில்லை. ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தைக்கு செல்லும் கால­கட்­டத்தில் ஐ.தே.க.வின் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய மலிக் சம­ர­விக்­கி­ரம கட்­டு­நா­யக்­கவில் உள்ள எயார்போர்ட் கார்டின் விடு­தியில் சந்­தி­த்திருந்தார்.

அவர் பேச்­சு­வார்த்­தை­களின் நிலை­மைகள், தொடர்ந்து பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­பது குறித்தே கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். மாறாக எந்­த­வி­த­மான பேரம்­பே­சல்­களும் இடம்­பெ­ற­வில்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பு விடு­த­லைப்­பு­லி­களால் உரு­வாக்­கப்­ப­ட­வில்­லை­யென தற்போது கூறப்ப­டு­கின்­றதே?

பதில்:- விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கமே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது என்­பதில் மாற்றுக்கருத்தில்லை. கிழக்­கி­லி­ருந்தே இந்த உரு­வாக்கம் தோற்றம் பெற்­றது.

அந்த உரு­வாக்­கத்தில் நானும் ஒரு அங்கம். ஆனால் சம்­பந்தன் தற்­போது முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்­கின்றார்.

சற்று விளக்­க­மாக பார்ப்­போ­மா­க­வி­ருந்தால் அன்றைய காலத்தில் தராக்கி சிவராம் என்ற பிர­பல்­ய­மான ஊடகவி­ய­லாளர் இருந்தார். அவர் எனது நண்­பரும் கூட.

அவரே இதற்­கான முதல் யோச­னையை முன்­வைத்தார். அதா­வது, ஐரிஸ் விடு­தலைப் போராட்­டத்தில் ஆயு­தப்­போ­ராட்டம் ஒரு­பு­ற­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட அதே­ச­மயம் அதற்கு ஒப்­பாக ‘சிங்பென்’ அமைப்பு அர­சி­யலில் ஈடு­பட்டு பாரா­ளு­மன்றில் இருந்­தது.

ஆகவே இவ்­வ­ாறான கட்­ட­மைப்பை நாமும் உரு­வாக்­கு­வோ­மென என்­னி­டத்தில் ஆலோ­ச­னையை முன்வைத்து பிர­பா­க­ர­னுடன் ஆலோ­சிக்­கு­மாறு கோரினார். அந்த விட­யத்தை நான் பிர­பா­க­ர­னிடம் கூறினேன். அவர் மகிழ்ச்­சி­யுடன் ஏற்­றுக்­கொண்ட பின்னர் கூட்­ட­மைப்­பினை உரு­வாக்­கினார்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பு விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் பினா­மிகள் எனக் கூறப்பட்டது. அதனை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ கின்­றீர்­களா?

பதில்:- நிச்­சய­மாக. ஒரு­புறம் விடு­தலைப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். அதற்கு சமாந்­த­ர­மா­கவும் ஆதரவாகவும் பாரா­ளு­மன்றில் குரல் எழுப்­ப­ப்ப­ட­வேண்டும் என்ற நோக்­கத்­திற்­காவே கூட்­ட­மைப்பு உருவாக்கப்பட்­டது.

மேலும் அக்­கா­ல­கட்­டத்தில் விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மையின் அங்­கீ­கா­ர­மின்றி இவ்­வா­றான கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­மு­டி­யாது என்­பது யதார்த்­த­மான விடயம்.

விடு­த­லைப்­பு­லி­களின் தலைமை, தள­ப­திகள் உட்­பட பலர் மடிந்­து­விட்­டார்கள். மடிந்­த­வர்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­க­வேண்­டி­யது தமி­ழர்­க­ளாக இருக்கும் எமது கட­மை­யாகும்.

அதனை விடுத்து அவர்கள் எத­னை­யுமே செய்­ய­வில்லை. அவர்­க­ளுக்கும் எமக்கும் தொடர்­பில்லை. நாமே அனைத்­தை­யும்­செய்தோம் எனக்­கூ­று­வது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.

கேள்வி:- 2004ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெற்­றி­ உ­று­தி­யாகவிருந்­த­போதும் வடக்கு கிழக்கில் மக்கள் வாக்­க­ளிக்க வேண்­டா­மென புலிகள் கோரியிருந்தார்கள். இதன் பின்­ன­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் அவர் மூல­மாக வழங்­கப்­பட்ட பெருந்­தொகை நிதி­யுமே கார­ண­மெனக் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- நிதி­வ­ழங்­கி­னார்­களா இல்­லையா என்­பது குறித்து எனக்குத் தெரி­யாது. ஒரெ­யொரு விட­யத்தை நான் நன்கு அறிந்­தி­ருந்தேன்.

ஒஸ்லோ பேச்­சுக்­களின் போது எம்மை சிக்­க­லுக்குள் உட்­ப­டுத்­தி­யவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. அதனால் விடுதலைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் அவர் மீது கடுங்­கோபம் கொண்­டி­ருந்தார்.

அதனால் தமிழ் மக்கள் ஒட்­டு­மொத்­த­மாக எவ­ருக்­குமே வாக்­க­ளிக்­க­வேண்­டா­மெனக் கோரி­யி­ருந்­தாரே தவிர தனியே ரணி­லுக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டா­மென கோரி­யி­ருக்­க­வில்லை.

கேள்வி:- பிள்­ளையான் என அறியப்­ பட்ட சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உங்­க­ளுடன் இணைந்து புலிகள் அமைப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­ த­போதும் அவர் பிரிந்து சென்­ற­மைக்­கான கார­ண­மென்ன?

பதில்:– பிரிந்து போனார் எனக்­கூ­ற­மு­டி­யாது. பல தள­ப­தி­களை காப்­பாற்­று­வ­தற்­காக நான் தலை­ந­க­ருக்கு அழைத்து வரப்­பட்டேன். அவர்­களை வேறு­வே­றாக பாது­காக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அதன்­போது பல போரா­ளிகள் கொலை செய்­யப்­பட்­டார்கள். குறிப்­பாக கொட்­டாவ எனும் இடத்தில் கஞ்­சிக்குள் தூக்க மாத்­தி­ரையைக் கலந்து விடு­த­லைப்­பு­லிகள் அவர்­களை கொலை­செய்­தி­ருந்­தார்கள்.

வாக­ரையில் வீடு­க­ளுக்கு செல்ல தயா­ராக இருந்த பெண்­போ­ரா­ளிகள் விடு­த­லைப்­பு­லி­களால் சுடப்­பட்­டார்கள். அவர்­களின் இறு­திக்­கி­ரி­யை­களை செய்யக் கூட அச்­சு­றுத்­த­லுடன் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு வாகரை பொது­மக்­களே சாட்­சி­யா­ளர்கள். அதன் பிற்­பாடு ஐநூ­றுக்கும் மேற்­பட்ட ஆத­ர­வா­ளர்கள் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டார்கள். எனது சொந்த சகோ­தரர் சுடப்­பட்டார்.

மீண்டும் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம் சர­ண­டைந்த தள­ப­தி­களை சுட்­டார்கள். குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் உயிரைக் காப்­பாற்­றிய ரொபேட், விசு, துரை, ஜிங்­க­ளித்­தாத்தா, நிஸாம் போன்­ற­வர்கள் நம்­பிக்­கையில் மீண்டும் சென்­ற­போது உட­ன­டி­யாக சுடப்­பட்­டார்கள்.

அத­னைத்­தொ­டர்ந்து நான் இந்­தி­யா­வுக்கு குடும்­ப­ச­கிதம் சென்­றி­ருந்தேன். அக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்சி உரு­வாக்­கப்­பட்­டது. அதில் நான் உறுப்­பி­ன­ராகக் கூட இருக்­க­வில்லை.

அதன்­பின்னர் இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­கை­ தந்து லண்­ட­னுக்குச் சென்­றி­ருந்தேன். அங்கு கைது செய்­யப்­பட்டு ஒரு­வ­ரு­டத்­திற்கு அதி­க­மாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தேன்.

அதன் பின்னர் மீண்டும் இங்கு வருகை தந்­த­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு கோரினார். அதனை பெற்றேன். இதுவே உண்­மையில் நடந்­தது.

கேள்வி:- புலிகள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்து வந்­ததன் பின்னர் வாக­ரையில் நீங்கள் முகா­மிட்­டி­ருந்­த­தா­ கவும் கிழக்கில் விடு­த­லைப்­பு­லி­களின் புலா­னய்வுக் கட்­ட­மைப்பை முழு­மை­ யாக முடக்­கி­யி­ருந்­த­தா­கவும் யுத்தம் ஏற்­ப­டு­வ­தற்­கான நிலை­மைகள் காணப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் உள்­ளதே?

பதில்:-விடு­த­லைப்­பு­லி­களின் தலைமை அனை­வ­ரையும் வன்­னிக்கு வருகை தரு­மாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்­போது அனைத்து தள­ப­தி­களை அழைத்து விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்து வந்­த­மைக்­கான விளக்­கத்தை பூர­ண­மாக வழங்­கி­யி­ருந்தேன். அதன்­போது தள­ப­தி­களின், போரா­ளி­களின் பெற்­றோர்கள் அங்கு வரு­கை­தந்து விட்­டார்கள். அதனால் இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.

அந்­நி­லையில் நான், யாருக்கு வன்­னிக்கு செல்­வ­தற்கு விருப்­ப­மி­ருக்­கின்­றதோ அவர்கள் செல்­லலாம். அதற்கு தடை­வி­திக்­கப்­போ­வ­தில்லை.

ஏனையோர் அவர்­களின் உற­வு­க­ளுடன் வீட்­டுக்­குச்­செல்­லலாம் என்ற அறி­விப்பைச் செய்­தி­ருந்தேன். அதனைத்தொ­டர்ந்தே ரமேஷ், ராம், பிரபா, ரமணன், கரி­காலன் அண்ணா, அவ­ரு­டைய மனைவி என அனை­வரும் சென்­றி­ருந்­தார்கள்.

அதே­போன்­றுதான் புல­னாய்வு பிரி­வினர் மீது சந்­தே­கங்கள் ஏற்­ப­டு­கின்­ற­போது அவர்­களை பிரச்­சி­னை­களை தவிர்ப்­ப­தற்­காக வன்­னிக்குச் செல்­லு­மாறு கூறி­யி­ருந்­தேன். காவல்துறை­யி­ன­ரையும் அவ்­வாறே கூறி அனுப்பி வைத்தேன். தவிர யாரையும் தடை­செய்­ய­வில்லை. யுத்தம் புரி­வ­தற்­கான முஸ்­தீபைச் செய்­ய­வில்லை.

ஆனால் அக்­கா­லத்தில் யுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சூழ்ச்­சி­களை அர­சாங்கம் மறை­மு­க­மாக ஏற்படுத்திக்கொண்­டி­ருந்­தது. குறிப்­பாக யுத்­த­நி­றுத்த ஒப்­பந்­தத்­தையும் மீறி ஆயு­தங்­களை கடற்­ப­ரப்­பி­னூ­டாக மூதூ­ருக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்­தது. பட்­டப்­ப­கலில் ஆயு­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

நூற்­றுக்­க­ணக்­கான போரா­ளிகள் பஸ்ஸில் கொண்­டு­வ­ரப்­பட்­டார்கள். அதனை அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்தேன்.

அதன் பின்னர் இறு­தி­யா­க­வொரு சம்­பவம் என்னால் என்­றுமே மறக்க முடி­யா­த­தொன்­றாகும்.

 

வெருகல் ஆற்றின் மறு­பக்­கத்தில் மூதூர் தள­பதி சுசிலன் தலை­மையில் படையினர் இருந்­தனர். ஆற்றின் இப்பக்­கத்தில் நான் இருந்தேன். அதன்­போது போர்­பு­ரி­வது எனது நோக்­க­மல்ல.

சகோ­த­ரப்­ ப­டு­கொ­லை­கள் வேண்டாம் என்­பதை தெளிவாக குறிப்­பிட்டேன். எனினும் அத­னை­ய­டுத்த சிலநாட்களில் வீடு­க­ளுக்குச் செல்­லவி­ருந்த பெண்­போ­ரா­ளிகள் கொலை­செய்­யப்­பட்­டார்கள். ஆறா­யிரம் போராளிகள் என்­னி­ட­மி­ருந்தும் நான் யுத்தம் செய்­ய­வில்லை.

கேள்வி:- அலி­சாஹீர் மௌலானா உங்­களை கொழும்­ புக்கு அழைத்து வந்­த­போது சில ஆவ­ணங்களை கொண்டு­வந்­­தீர்கள் என கூறப்­பட்­டி­ருக்­கின்­றதே?

பதில்:- தமிழ் – முஸ்லிம் உற­வுக்­காக அலி­சாஹீர் மௌலா­னாவும் நானும் மிக நெருக்­க­மாகச் செயற்பட்டவர்கள்.

அவ­ரி­டத்தில் அப்­போ­தைய நிலை­மை­களை நான் எடுத்துக் கூறி­ய­போது அவர் அதனை ஏற்­றுக்­கொண்டு என்னை தலை­ந­க­ருக்கு அழைத்து வந்­தி­ருந்தார். அவ­ரு­டைய செயற்­பாடு மிகவும் சிறந்­தது. என்றும் நன்­றிக்­கடன் பட்­ட­வ­னாக உள்ளேன்.

அதே­நேரம் இங்கு வருகை தரும்­போது வெறு­மை­யான கைக­ளு­ட­னேயே வந்­தி­ருந்தேன். எந்­த­வி­த­மான ஆவணங்­க­ளையும் நான் எடுத்து வந்­தி­ருக்­க­வில்லை.

மேலும் யுத்தம் தொடர்பில் மக்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்­து­கொள்ள வேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்திருக்­கின்ற நிலையில் செய்­ம­தி­மூலம் வேண்­டிய தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள முடியும்.

இரா­ணு­வமும் விடு­த­லைப்­பு­லி­களும் 100 மீற்றர் இடை­வெளியில் தடுப்­ப­மைத்து இருக்­கின்ற நிலையில் அங்கு மறைப்­ப­தற்கு எது­வு­மில்லை. ஆகவே நான் ஆவ­ணங்­களைக் கொண்டு வந்து கொடுத்து அதன் மூலம் இராணுவம் வெற்­றி­ய­டைந்­தது என்­பது மிகவும் தவ­றா­னது.

கேள்வி:- முள்­ளி­வாய்க்­காலில் பாரிய அவலம் நிகழ்­வ­தற்கு யாரு­டைய தவ­றுகள் கார­ண­மாக அமைந்­தன எனக்­க­ரு­து­கின்­றீர்கள்?

பதில்:- அர­சாங்கம், விடு­த­லைப்­பு­லிகள் ஆகிய இரண்டு தரப்­புக்­க­ளுமே கா­ர­ணமா­கின்­றன. விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம், மக்­களை கேட­ய­மாக வைத்­தி­ருந்தால் அர­சாங்கம் எவ்­வி­த­மான தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொள்­ளாது பேச்­சு­வார்த்­தைக்கு வரு­வார்கள் எனக் கரு­தி­னார்கள்.

கழுத்தில் சய­னைட்டை வைத்து யுத்தம் செய்த விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் மக்கள் பின்னால் மறைந்து நின்று யுத்தம் செய்­தமை தவ­றான விடயம்.

இறு­தித்­த­ரு­ணத்தில் விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டை உடைத்து மக்கள் அங்­கி­ருந்து எவ்­வாறு வெளியேறி­னார்கள் என்­ப­தற்கு வன்னி மக்கள் சான்­றா­கின்­றார்கள்.

அவர்கள் வெளியே­றிய போது விடு­த­லைப்­பு­லிகள் அவர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய வர­லா­று­களும் உள்ளன. அதற்­கான கார­ணத்தைக் கேட்­போது மேலி­டத்து உத்­த­ரவு என கூறப்­பட்­ட­மைக்­கான சான்­று­களும் உள்­ளன.

இத­னா­லேயே மக்­க­ளுடன் மக்­க­ளாக வரு­கை­தந்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களை மக்­களே இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அடை­யாளம் காட்­டி­யி­ருந்­தனர்.

அதே­நேரம் பயங்­க­ர­வாத இயக்கம் மக்­களை கொலை செய்தால் அதற்­கான சட்­டங்கள் வேறு­பட்­டவை. ஆனால் இறை­மை­யுள்ள நாடு அவ்­வாறு செய்­யு­மானால் அது சர்­வ­தேச ரீதி­யாக கருத்­தி­லெ­டுக்­கப்­படும்.

அவ்­வாறு செய்தி­ருந்தால் அதற்­கான விளக்கம், தீர்வு என்­பன உட­ன­டி­யாக எடுக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் தற்­போது இந்­த­ள­வுக்கு சர்­வ­தேச அழுத்­தங்கள் ஏற்­பட்­டி­ருக்­காது.

யுத்தம் நிறை­வ­டைந்­த­வுடன் பூச்­சி­ய­நிலை உயி­ரி­ழப்­புக்­களே நிக­ழ்ந்­த­தாக அர­சாங்கம் பாரா­ளு­மன்றத்தில் அறிவித்­தது.

அனைத்து நாடு­க­ளுமே யுத்­தத்தில் ஈடு­பட்­டுள்­ளன. எனவே உலக நாடுகள் அக்­கா­ர­ணத்தை ஒருபோதும் ஏற்­றுக்­கொள்­ளாது.

தென்­னா­பி­ரிக்­காவில் அசா­தா­ரண நிலை­மை­களின் பின்னர் உட­ன­டி­யாக உண்­மை­களைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிறு­வி­னார்கள்.

உட­ன­டி­யாக விசா­ரணை மேற்­கொண்­டார்கள். இங்கு கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிய­மித்த போதும் அதன் பரிந்­து­ரை­களை கவ­னத்­தில்­கொண்டு முழு­மை­யாக முன்னெடுக்கப்படவில்லை அல்­லது அர­சாங்கம் தமிழ் மக்­க­ளிடம் பகி­ரங்­க­மான மன்­னிப்பை கோரி­யி­ருக்­கலாம்.
அவற்றை அவர்கள் செய்­ய­வில்லை. இதனால் தான் போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள், மீறல்கள் என நெருக்­க­டிக்குள் சிக்­குண்­டுள்­ளார்கள்.

கேள்வி:- இக்­காலப் பகு­தியில் நீங்கள் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­தி­ருந்­தீர்கள். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் நெருங்­கிய உற­வு­களை கொண்­டி­ருந்­தீர்கள். எனவே அவ­லங்கள் நிக­ழாது தடுத்து நிறுத்­து­வது குறித்து அவ­ரி­டத்தில் எடுத்துக் கூறி­னீர்­களா?

பதில்:- கூறி­யி­ருந்தேன். சில விட­யங்­களை அவர் செய்­தி­ருந்தார். வன்­னி­யி­லி­ருந்து போரா­ளிகள் வருகை தரும்­போது வெளிப்­ப­டை­யாக இல்­லாது விட்­டாலும் தீவி­ர­மாக செயற்­பட்டேன்.

ஒவ்­வொரு நாளும் அப்­போ­தைய ஜனா­தி­ப­தியைச் சந்­தித்தேன். இவ்­வாறு வருகை தரும் போரா­ளிகள் மீது வழக்குத் தாக்­கல்­செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­னார்கள்.

அதன்­போது போரா­ளி­களை மன்­னித்து புனர்­வாழ்­வ­ளிக்கும் பொறி­மு­றை­யொன்றை ஏற்­ப­டுத்­த­வேண்­டு­மெனக் கோரினேன். அதனை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்டு 12 ஆயிரம் போரா­ளி­களை விடு­தலை செய்­தி­ருந்தார். அது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டி­ய­தொன்­றாகும்.

கேள்வி:- ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தை­களின் பின்­னரே விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பினுள் முரண்­பா­டு ஏற்பட்டிருந்­தது. உண்­மை­யி­லேயே அப்­பேச்­சுக்­க­ளின்­போது என்ன நடந்­தது?

பதில்:- போர் நிறுத்த ஒப்­பந்­தத்தை தொடர்ந்து ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன. எமது தரப்­பிற்கு அன்ரன் பால­சிங்­கமும், அர­சாங்­கத்­த­ரப்­பிற்கு ஜி.எல்.பீரிஸும் தலைமை தாங்­கினர்.

நோர்­வே­நாட்டின் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளாக நோர்வே, நாட்டின் விடார் எல்­கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் ­சொல்ஹெய்ம் ஆகியோர் இருந்­தனர்.

பேச்­சு­வார்த்தை தொடர்ந்த நாட்­களில் திடீ­ரென ஒருநாள் ஆவ­ண­மொன்று சமர்ப்­பிக்­கப்­ பட்­டது. நாம் தொடர்ந்தும் பேசிக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

இருப்­பினும் எது­வி­த­மான முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை. ஆகவே இணக்­க­பா­டொன்றின் ஊடா­கவே பேச்­சு­வார்த்­தையை முன்­ன­கர்த்த முடியும் எனக் விதா­ஹல்­ஹசன் குறிப்­பிட்டார்.

இதன்­போது அன்ரன் பால­சிங்கம் கோப­ம­டைந்து முன்­ன­றி­வித்தல் இன்றி எவ்­வாறு ஆவ­ணத்தை சமர்ப்­பிப்­பீர்கள் என கேள்­வி­யெ­ழுப்­பினார். அத்­துடன் தலை­மை­யு டன் கலந்­தா­லோ­சிக்க வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்டார்.

கேள்வி:- சமர்ப்­பிக்­கப்­பட்ட அந்த ஆவ­ணத்தில் என்ன விடயம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது?

பதில்:- அதில் சமஷ்டி முறை­யி­லான தீர்வை பரி­சீ­லிப்­ப­தென பேசுவோம். அதன் முடி­வாக ஒப்­பந்­தத்­திற்கு வருவோம். முதற்­கட்­ட­மாக பரி­சீ­லிப்­ப­தென்­ப­தற்கு இணங்கி கையொப்­ப­மி­டுவோம் என்றே கோரப்­பட்­டி­ருந்­தது.

கேள்வி:- அதன்­பின்னர் இடம்­பெற்ற விட­யங்­களை தொடந்தும் கூறுங்கள்?

பதில்:- இந்­நே­ரத்தில் அவ்­வி­டயம் தொடர்­பாக நாம் கலந்­து­ரை­யா­டுவோம் என நான் அன்­ரன்­பா­ல­சிங்­கத்தை அழைத்தேன்.

அவர் வந்­த­வுடன் தொடர்ந்தும் நாம் தலை­யிடம் கேட்டுச் சொல்­வ­தாக கூறி தாம­தப்­ப­டுத்­தினால் எம்­மீ­தான மரியாதை குறையும். நாங்கள் தலைமைப்­பேச்­சாளர் என்­பதால் உங்­க­ளுக்கு அதி­காரம் இருக்­கின்­றது.

மேலும் இது­வொரு நல்ல நகர்­வாகும். உருத்­தி­ர­கு­மாரன், ஜோய் மகேஸ்­வரன், தமிழ்ச்­செல்வன் ஆகி­யோரும் உடன் இருந்­தனர்.

உருத்­தி­ர­கு­மாரன் ஜப்பான் பேச்­சுக்­களின் போது நிகழ்ந்த அனு­ப­வங்­களை சட்­ட­நு­ணுக்­கங்­க­ளையும் கூறினார்.ஜோய் மகேஸ்­வ­ரனும் வர­வேற்றார். தமிழ்ச் செல்வன் மட்­டுமே தலை­வ­ரி­டத்தில் கேட்­க­வேண்­டு­மென்றார்.

பல கருத்­துக்­க­ளுக்கு மத்­தியில் இறு­தியில் இவ்­வொப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­வதெ­னவும் பின்னர் தலைவரிடத்தில் அதனை தெளிவு­ப­டுத்­து­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதனைத் தொடர்ந்து ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்ட பின்னர் நாட்­டிற்கு வரு­கை­தந்­தி­ருந்தோம். ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்திட்ட விடயம் நாம் வருகை தர முன்­ன­தா­கவே பிர­பா­கரன் அறிந்­தி­ருந்தார்.

நாம் இங்கு வரு­கை­தந்து மறு­தினம் பிர­பா­க­ரனை சந்­தித்தோம். அதன்­போது தன்னை கேட்­காது கைச்சாத்திட்டமை குறித்து கடுங்­கோபம் கொண்­டி­ருந்தார்.

ஆவ­ணத்தை கொடுத்­த­போது அதனை கிழித்து வீசினார். ஒரு­வரி கூட படித்­தி­ருக்­க­வில்லை. அன்­றைய தினம் 7மணிக்கு முக்­கிய தள­ப­திகள் பங்­கேற்­புடன் கூட்ட­மொன்று நடை­பெற்­றது.

கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் எனது தூண்­டு­த­லி­லேயே பாலா அண்ணா கையெ­ழுத்­திட்டார் என்ற விடயம் இறு­தி­யாக பிர­பா­க­ர­னுக்கு கூறப்­பட்­டது.

அதனால் கடு­மை­யான கோப­ம­டைந்­தி­ருந்தார். சூசை, தமிழ்ச்­செல்வன், தீபன், பாணு, என அனை­வரும் அமை­தி­யாக இருந்­தனர். அவ­ரு­டைய பேச்­சுக்கள் கடு­மை­ய­டைந்­தன. இறு­தி­யாக என்­னைப்­பார்த்து மாத்­தையா போன்றே நீயும் துரோகம் செய்து விட்டாய் என்ற வார்த்­தையை பிர­யோ­கித்தார்.

கட­வு­ளாக நினைத்­தவர், பல­த­ட­வைகள் அவ­ருக்­காக போரா­டியா அவரை காப்­பற்­றிய என்­னைப்­பார்த்து இவ்வாறு கூறி­விட்­டாரே என ஆதங்கம் என்னுள் ஏற்­பட்­டது.

அந்த சூழலில் தமி­ழேந்தி, பால­குமார் விடு­தலைப் போராட்­டத்தை விற்­று­விட்­டார்கள் என ஆவே­ச­மாக வார்த்தை­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தனர்.

ஆகவே சூடான வாதங்­களால் பல­பி­ரச்­சி­னைகள் ஏற்­படும் என்­பதால் இந்த ஒப்­பந்­தத்தை ஏற்­க­மு­டி­யாது என நானே அறி­விக்­கின்றேன் என கூறினேன். நீ அவ்­வாறே செய் என பிர­பா­கரன் கூறவும் அந்த கூட்டம் நிறைவானது.

அதன் பின்னர் என்னால் அவ்­வொப்­பந்­தத்தை ஏற்­க­வில்­லை­யென அறி­விப்பை செய்­ய­மு­டி­யா­தி­ருந்­தது. சமாதான ஒப்­பந்­தத்தில் ஆறு தள­ப­தி­க­ளுக்கு ஹெலி­கொப்­டரில் பய­ணிக்கும் வரப்­ பி­ர­சாதம் வழங்கப்பட்டிருந்தது.

என்ன செய்­வ­தென்ற நிலையில் இருந்த நான் இறு­தி­யாக அதனைப் பயன்­ப­டுத்தி ஓமந்­தை­யி­லி­ருந்து மட்­டக்­க­ளப்­பிற்கு வந்தேன்.

அதன் பின்னர் என்னால் அந்த அறி­விப்பை செய்­ய­மு­டி­யா­தென்­ப­தையும் அவ­ருக்கு அறிவி த்­த­துடன் நான் அமை­தி­யாக இங்­கேயே இருக்­கின்றேன் என பிர­பா­க­ர­னுக்கு கூறினேன்.

அவ்­வாறே இருந்தேன். அத்தோடு அந்தக் காலத்­தி­லேயே போரா­ளி­களை வன்னி அனுப்­பு­மாறு கோரிய நிலைமைகள் மோச­ம­டைந்­த­தால் பிரி­ய­வேண்­டிய நிலைக்குள் தள்­ளப்­பட்டேன்.

கேள்வி:- ஐ.நா அறிக்­கையில் உங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளனவே?

பதில்:- முத­லா­வ­தாக ஐ.நா. மனித உரிமை மன்றம் இறுதி யுத்தம் தொடர்­பா­கவே விசா­ரணை செய்ய அனுமதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரண்­டா­வ­தாக கருணா குழு இறுதி யுத்­தத்­திற்­காக சிறு­வர்­களை படையில் இணைத்­தது எனக்­குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு ஒரு சம்­பவம் நடை­பெ­ற­வில்லை. முள்­ளி­வாய்க்­காலில் தமிழ் இரா­ணு­வ­வீரர் போரி­ட­வு­மில்லை.

நாட்டில் நான் இருக்­காத காலத்தில் என­்னு­டைய பெயர் மிக­மோ­ச­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எவர் சுடப்பட்டாலும் கருணா குழு­வென்றே கூறி­னார்கள். உண்மை அது­வல்ல.

அண்­மையில் தொலைக்­காட்­சி­யொன்­றுக்கு செவ்­வி­ய­ளித்த பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா இறுதி யுத்தம் தொடர்­பாக கூறு­கையில் கருணா என்­பவர் யுத்­தத்தில் எமக்கு எத­னை­யுமே செய்­ய­வில்லை எனக் கூறியிருக்கின்றார். அது­சி­றந்த உதா­ர­ண­மாகும்.

நீண்­ட­காலம் ஆயு­தப்­போ­ராட்டத்தில் இருந்த என்­னூ­டாக அர­சியல் தீர்வை பெறு­வ­தற்கே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ முற்­பட்­டாரே தவிர என்னை யுத்­தத்­திற்கு உத­வு­மாறு கோரி­யி­ருக்­க­வில்லை. அப்­போ­தைய பாது­காப்புச் செய­­லாளர் கோத்­த­பா­யவும் கோர­வில்லை.

கேள்வி:- எனினும் அப்­போது இடம்­பெற்ற கொலை­களின் சூத்­தி­ர­தா­ரி­யாக நீங்­களே கூறப்­பட்­டீர்கள்?

பதில்:- அதற்கு கார­ண­மொன்று இருக்­கின்­றது. அக்­கா­லத்தில் விடு­த­லைப்­பு­லிகள் சிலரை சுட்­டுக்­கொலை செய்­த­தனால் அச்­சத்தில் பல இளை­ஞர்கள் இரா­ணு­வத்­துடன் இணைந்­தி­ருந்­தார்கள்.

கிழக்­கு­ மா­கா­ணத்தில் இவ்­வா­றான நிலைமை அதி­க­மாக காணப்­பட்­டது. அதனை மையப்­ப­டுத்­தியே கரு­ணா­குழு என புனைக்­ க­தைகள் உரு­வா­கி­யி­ருந்­தன. எனினும் எனக்கு அதில் எவ்­வி­த­மான தொடர்பும் இருந்­தி­ருக்­க­வில்லை.

கருணா குழு கார­ண­மென கூறப்­பட்ட பல­கொ­லைகள் தொடர்­பான விசா­ர­ணை­களில் உண்­மைகள் வெளிவரஆரம்­பித்­துள்­ளன. ஆகவே எனது பெயர் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

அது­தொ­டர்­பான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டால் அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ரா­க­வுள்ளேன். அதன் மூலமே இவ்­வி­ட­யங்­களில் எனக்கு எந்­த­வி­த­மான தொடர்­பு­மில்லை என்­பதை நிரூ­பிக்க முடியும்.

அண்­மையில் தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் தலைவர் கைது செய்­யப்­பட்­ட­வுடன் நான் கைது செய்­ய­ப்ப­டுவேன் எனக்­கூ­றி­னார்கள். எதுமே நடை­பெ­ற­வில்லை. காரணம் நான் எத­னை­யுமே செய்­ய­வில்லை.

கேள்வி:- யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த நிலையில் விடு­த­லைப்­பு­லிகள் அதனை நிறுத்­து­வ­தற்கு, அல்லதுவெளியே­று­வ­தற்­காக முனைப்­புக்­களை செய்­தி­ருந்­தார்­களா?

பதில்:- அவ்­வி­ட­யங்கள் குறித்து எனக்கு எவை­யுமே தெரி­யாது. இருப்­பினும் அவ்­வா­றான முஸ்­தீ­பொன்று நடை­பெற்­றி­ருக்­கின்­றது. கடற்­பு­லித்­த­ள­பதி சூசை வெளிநாட்டு ஊட­க­மொன்­றுக்கு ஆயு­தங்­களை மௌனிக்க தயா­ராக இருப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

உரிய முறையில் அர­சாங்­கத்தை தொடர்­பு­கொண்­டி­ருந்­தார்­களா என்­ பது எனக்கு தெரி­யாது. சுந்­தி­ர­நே­ருவும் அது­கு­றித்து கருத்­து­க்களை முன்­வைத்­தி­ருந்தார். எனினும் அவ்­வாறு முயற்­சித்­தி­ருப்­பார்­க­ளாயின் அது காலங்­க­டந்த நட­வ­டிக்­கை­யென்றே கரு­து­கின்றேன்.

கேள்வி:- மர­புவழி போர்­மு­றைமை, முப்­ப­டைகள் எனக் கொண்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் போரில் தோல்­வி­ய­டைந்­த­மைக்­கான கார­ண­மென்ன?

பதில்:- விடு­தலைப் புலிகள் அமைப்பை மர­பு­ வழி யுத்­தத்­திற்கு மாற்­றி­ய­மைத்­தது நானே. பூந­கரி யுத்­தத்தின் பின்னர் அம்­மு­றை­மைக்கு மாறி­யி­ருந்தோம்.

முன்­ன­தாக நாம் மர­பு­வழி யுத்­தத்­திற்கு செல்­ல­வேண்டும் என பிர­பா­க­ர­னிடம் வலி­யு­றுத்­தினேன். தவறின் இராணுவம் குடா­நாட்டை விரைவில் கைப்­பற்­று­வார்கள் என கூறி­யி­ருந்தேன்.

அதே­போன்று மூன்று மாதங்­களில் இரா­ணுவம் குடா­நாட்டை ஆக்­கி­ர­மித்­தது. பின்னர் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து நான் வன்­னிக்கு அழைக்­கப்­பட்டு மர­பு­வ­ழிக்கு யுத்தம் தொடர்­பான திட்டம் தீட்­டப்­பட்டு வன்னி யுத்­தத்தில் வெற்றி கண்டோம்.

நான் வெளியே­றிய போது 10ஆயிரம் எல்­லைப் ­ப­டை­வீ­ரர்கள் உட்­பட 40 ஆயிரம் போரா­ளிகள் காணப்­பட்­டார்கள். கொக்­கு­தொ­டுவாய் முதல் மன்னார் நாயாறு முதல் இரா­ணு­வத்தின் எல்­லை­யி­லி­ருந்து 100 மீற்றர் இடைவெளி காணப்­பட்­டது.

இவ்­வா­றி­ருக்­கையில் மூர்க்­கத்­த­ன­மாக இரா­ ணு­வ­ ந­ட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டும்­போது இராணுவரீதி­யான தந்­தி­ர ­உ­பா­யத்தை மாற்­றி­யி­ருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் முன்­னெ­டுப்­புக்­க­ளைச்­செய்த இலங்கை இரா­ணு­வமே தற்­போதும் போரிட வந்­தி­ருந்­தது. வெளிநாட்டு இரா­ணுவம் தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கி­யி­ருந்­தாலும் போரிட்­டது இலங்கை இரா­ணு­வமே.

ஆகவே தந்­திரோபா­யங்­களை மாற்ற தவ­றி­யி­ருந்­த­மையே விடு ­த­லைப்­பு­லி­களின் தவ­றா­கின்­றது. எனது பார்­வையில் யுத்­தத்தின் இறு­தியில் விடு­த­லைப்­பு­லிகள் கடற்­க­ரையில் ஒருங்­கி­ணைந்­த­மையே விடுதலைப்புலிகளின் பாரிய தவ­றாக காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் தலைவர் தற்­கொலை செய்­தி­ருக்­க­லா­மென எந்த அடிப்­ப­டையில் கூறி­யி­ருந்­தீர்கள்?

பதில்:- நான் எனக்கு தெரிந்த யுத்த அனு­பவத்­தி­லேயே அவ்­வாறு கூறினேன். காரணம் அவர் படைநடவடிக்கையில் இறந்­தி­ருந்தால் அவ­ரு­டைய உடலின் ஏனைய பகு­தி­களில் காயங்கள் ஏற்­பட்­டி­ருக்கும்.

ஆனால் அவ்­வா­றான எந்­தக்­கா­யங்­களும் இருந்­தி­ருக்­க­வில்லை. அவர் வலக்கை பழக்­க­மு­டை­யவர். துப்­பாக்­கியை எடுத்­து­சு­டும்­போது இட­து­பு­ற­மாக ரவை துளைத்துச் சென்­றி­ருக்கும்.

கேள்வி:- பிர­பா­கரன் இரண்டு கைக­ளாலும் துப்­பாக்­கியை பயன்­ப­டுத்தும் திறன்­கொண்­டி­ருந்­தவர் எனக் கூறப்படு­கின்­றதே?

பதில்:- இல்லை, அவர் வலக்கை பழக்­க­மு­டை­யவர். இரண்டு கைக­ளாலும் எவரும் துப்­பாக்­கியை பயன்படுத்தமு­டியும். ஆனால் துல்­லி­ய­மாக சுட­மு­டி­யாது. அவர் வலது கையா­லேயே துல்­லி­ய­மாக சுடுவார் என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே கூறு­கின்றேன்.

அதே­நேரம் கங்­கா­ராம விஹா­ரையைச் சேர்ந்த தேரரும் விஞ்­ஞான ரீதி­யாக தற்­கொலை செய்த ஒரு­வ­ருக்கே கண்திறந்­தி­ருக்­கு­மெனக் கூறி­யி­ருந்தார். நான் அடை­யாளம் காட்டச் சென்­ற­போது பிர­பா­கரனின் கண்கள் திறந்தே­யி­ருந்­தன.

கேள்வி:- ஏனைய தள­தி­ப­தி­களின் உடல்­க­ளையும் கண்­டீர்­களா?

பதில்:- இல்லை, நான் ஏனைய தள­ப­திகள் எவ­ரி­னதும் உடல்­க­ளையும் காண­வில்லை. ஆனால் பிர­பா­கரனின் உட­லுக்கு அருகில் ஆங்­காங்கே 18 முதல் 20 உடல்கள் காணப்­பட்­டன. அவை அ­வ­ருடைய மெய்ப்­பா­து­கா­வ­லர்­க­ளாக இருக்க முடி­யு­மென்றே கரு­து­கின்றேன்.

கேள்வி:- இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் ரஜீவ் காந்­தியின் கொலைக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் தொடர்­பி­ருக்­கின்­றதா? இதனால் தான் இறுதி யுத்தம் நடை­பெற்­றி­ருந்­த­போது இந்­தியா மெத்­த­னப்­போக்கை கடைப்­பிடித்­ததா?

பதில்:- ராஜிவ் காந்­தியின் கொலைக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் தொடர்­பி­ருப்­ப­தென்­பது வெளிப்­ப­டை­யான விடயம். விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனும், பொட்டு அம்­மானும் குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளார்கள்.

ராஜீவ் காந்­தியை கொலை­செய்­த­வர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்கள்.அவர்­களின் வாக்­கு­மூ­லத் தின் பிர­காரம் அந்த விடயம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் இழைத்த தவறு இது­வாகும். விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் அவ்வப்போது இவ்வாறான இராஜதந்திர ரீதியாக தவறுகளை இழைத்திருந்தார்கள்.

இந்திய அமைதிப்படையுடன் போரிட்டோம். அவர்களை வெற்றி கொண்டோம். அத்துடன் அனைத்தையும் நிறுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து இன்னொரு நாட்டுக்குள் சென்று அந்நாட்டின் தலைவரை கொலை செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ள முடியாது.

விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த நாடு. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது.

முத லாவதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்த நாடாகவும் இருக்கின்றது. ஆகவே பயிற்சியளித்த நாடே தடைசெய்யுமளவிற்கு சென்றிருந்தமை கடுமையான பின்னடைவா கும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அதில் விடுதலைப்புலிகளும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். மாற்றாக அதனை நிராகரித்திருந்தார்கள்.

அச்செயற்பாடும் இந்தி யாவுக்கு பிடித்திருக்கவில்லை. பின்னர் ராஜீவ் காந்தியையும் கொலை செய்தவுடன் ஆறுகோடி தமிழர்கள் இருக்கும் நாட்டுக்கு அருகில் இவ்வாறான இயக்கமொன்று உருவாகுவதை முற்றாக விரும்பவில்லை.

இந்நிலையில் இறுதிக்கட்டத்தில் முற்றுமுழு தாக விடுதலைப்புலிகளை வெறுத்ததோடு மறைமுகமாக அரசாங்கத்திற்கு உதவியது. விடுதலைப்புலிகள் அழிந்து போகவேண்டும் என்பதில் அவர்கள் முடிவாக இருந்ததால் எந்தவிதமான குரலும் கொடுக்காது பாரபட் சமாக இருந்தார்கள்.

கேள்வி:- ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் ஓரங்கட்டப்படுகின்றீர்கள் என உணர்கின்றீர்களா?

பதில்:- அவ்வாறில்லை. நான் தேசிய கட்சியில் உபதலைவராக இருக்கின்றேன். இதுவொரு வரலாற்று முக்கியமான விடயமாகும்.

எதிர் காலத்தில் இவ்வாறான பதவி தமிழருக்கு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியான விடயம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதன்போதும் உபதலைவராகவே என்னை ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன நியமித்திருக்கின்றார். ஆகவே அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை.

இருப்பினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறவேண்டுமென்பதற்காக தமிழ்க் கட்சியில் இணைந்து குரல்கொடுக்க வேண்டுமென நான் எடுத்த தனிப்பட்ட முடிவேயாகும்.

கேள்வி:- தமிழ்க்கட்சியொன்றிலிருந்து நீங்கள் குரல்கொடுக்கும்போது தென்னிலங்கைக்கு வேறு பட்டதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துமெனக் கருது கின்றீர்களா?

பதில்:- பாரம்பரிய கட்சியை நாம் கட்டியெ ழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது. எதிர் வரும் உள்ளூராட்சி சபையிலிருந்து அதற்கான அடித்தளமிட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வுள்ளன. இது மிகவும் கடினமான பணியாகும்.

இந்தகட்சியைப் பொறுத்தவரையில் அனை த்து தலைவர்களும் ஆயுதப் போராட்ட அமைப் புக்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இக்கட்சி வளரக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளது. இந்தக் கட்சி வளருமானால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென கருதுகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத் தியில் ஆட்டம் கண்டிருக்கின்றது. இந்தக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியே இல்லை.

கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கல நாதன், சித்தார்த்தன் ஆகியோர் கோருகின்ற னர். இருப்பினும் சம்பந்தனுக்கோ, மாவைசேனா திராஜாவுக்கோ அதில் விருப்பமில்லை.

அவர் களுடைய ஆதிக்கம் இல்லாது போய்விடும் எனக் கருதுகின்றார்கள். கடந்த வாரம் கூட கொழும்பில் சந்தித்திருந்தார்கள். இருப்பி னும் தீர்மானம் எடுக்கவில்லை. கூட்டமைப்பு குழப்பமான நிலையிலேயே சென்றுகொண்டி ருக்கின்றது.

மறுபக்கத்தில் வடக்கு முதல்வர் விக்கினேஸ் வரன் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கின்றார். இருப்பினும் அவரை நான் மதிக்கின்றேன். அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியிலும், தன்னுடைய கொள்கையிலும் மாறாது உறுதியாக இருக்கின்றார்.

அவர் அரசியலுக்கு புதிதாக வருகை தந்திருந்தாலும் அவர் சிறந்த தலைவராகவே காணப்படுகின்றார். அவரை யெல்லாம் தூக்கியெறிந்தே தமிழரசுக் கட்சி இயங்க ஆரம்பிக்கின்றது. எனவே தமிழ் மக் களின் குரலாக மாற்றுசக்தி அவசியமாகின்றது.

கேள்வி:- இனப்பிரச்சினை தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:- வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய நிலமாகும். தமிழ் மக்கள் தனி இனம் என்பதற்கு பாரம்பரிய நிலம், கலாசாரம், விழுமியங்கள், வரலாறுகள் என்பன சான் றாகின்றன. ஒரு தனி இனம் இன்னொரு தனி இனத்துடன் இணைந்து வாழமுடியும்.

அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ண உரிமை வழங்கப்படவேண்டும். அதன் மூலம் பரந்து பட்டு வாழும் எமது இனம் சுதந்திரமாக, அபிலாஷைகளுடன் உரி மைகளைப் பெற்று வாழமுடியும் என்பது எனது நிலைப்பாடாகும்.

Share.
Leave A Reply