பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாதம்பே பிரதேச த்தைச் சேர்ந்த துஷ்த தேவப்பிரிய விஜேசேன என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
32 வயதான அவர் ‘கனிதயா’ என அழைக்கப்படுபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் தற்கொலை செய்துள்ளார்
அவர் மீது கொலை , பாலியல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போத்தலவில் சிசுவின் சடலம் மீட்பு
31-10-2015
காலி- போத்தல பலகொட பிரதேசத்தில் நெல் அரைக்கும் இடமொன்றுக்கு அருகில் வாழைத் தோட்டமொன்றில் சிசுவின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிசு ஒரு நாளுக்கு முன் பிறந்த தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சிசுவின் சடலத்தை அங்கு போட்டுச் சென்றவர் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை. போத்தல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்