“களியாட்ட விடுதியை உடைத்து சேதப்படுத்தினால் விலை உயர்ந்த மதுபான போத்தல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் மனதில் ஆசையை ஏற்படுத்தியே அவர்களை இத்திட்டத்துக்குள் இணைத்திருக்கின்றார்.

அவர்களும் மதுபான போத்தல்களுடன் உல்லாசமாக பொழுதை கழிக்கலாம் என்ற போலியான நம்பிக்கையில், நடக்க போகும் விபரீதத்தை சற்றும் நினைத்து பார்க்காது லொக்காவின் திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள்.”

இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக குற்­றச்­செ­யல்கள் வெகு­வாக அதி­க­ரித்து வரு­கின்­றன. கொள்­ளை­ய­டிப்­பது, தனக்கு எதி­ரா­ன­வர்­களை கண்­ட­துண்­ட­மாக வெட்டி பழி­வாங்­கு­வது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு­கின்­றன.

அந்­த­வ­கையில் சினிமா பாணியில் கடந்த வாரம் கராத்தே வீரரும், கின்னஸ் சாத­னை­யா­ள­ரு­மான வசந்த சொய்சா படு­கொலை செய்­யப்­பட்­டமை நாட்டில் பர­வ­லாக அனை­வ­ராலும் பேசப்­பட்ட விட­ய­மாகும்.

கூரிய ஆயு­தங்கள், கம்­புகள், தடிகள் என எடுத்துக்கொண்டு வந்த கூட்டம் அவ­ரது களி­யாட்ட விடு­தியை துவம்சம் செய்­த­துடன் அவ­ரையும் அடித்து கொலை செய்­தது.

IMG_2975-1024x637

இச்­சம்­பவம் தொடர்பில் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணையின் அடிப்­ப­டையில் இது­வரை கிடைத்த தகவல்­களை நாம் வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­கின்றோம்.

அன்று ஒக்­டோபர் மாதம் 24 ஆம் திகதி. இரவு 11 மணி­யி­ருக்கும். தனது களி­யாட்ட விடு­தியின் கணக்கு வழக்குகளை சொகுசு நாற்­கா­லியில் அமர்ந்­த­வாறு சரி பார்த்துக் கொண்­டி­ருந்தார் கராத்தே வீரர் வசந்த சொய்சா.

ஏதோ யோச­னையில் எதேச்­சை­யாக தனது அறையில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சீ.சீ.டி.வி கெம­ராவை பார்த்த போது, நுழை­வா­யிலின் ஊடாக மூக­மூடி அணிந்த இனம் தெரி­யாத நபர்கள் சிலர் களி­யாட்ட விடு­திக்குள் நுழைவ­தையும், அங்­குள்ள உடை­மை­களை சேதப்­ப­டுத்­து­வ­தையும் அவ­தா­னித்தார்.

எனவே, களி­யாட்ட விடு­திக்குள் ஏதோ ஒரு அசம்­பா­விதம் நடை­பெ­று­கின்­றது என்­பதை உணர்ந்த அவர், வேகமாக தனது அறை கத­வினை திறந்­துக்­கொண்டு “ஏய் யாரடா என் ஹோட்­டலை சேதப்­ப­டுத்­து­வது?” என்று பலத்த குரலில் கத்­தி­ய­வாறே வெளியில் வந்தார்.

வந்­தவர் சுற்று முற்றும் பார்க்க முற்­படும் முன்­னரே முக­மூடி அணிந்து களி­யாட்ட விடு­திக்குள் நுழைந்­தி­ருந்த இனம் தெரி­யாத நபர்கள் வசந்த சொய்­சாவை கோட­ரியால் தாக்க முற்­பட்­டனர்.

இதன்­போது வசந்த சொய்சா தனது கராத்தே அனு­ப­வங்­களை பயன்­ப­டுத்தி தன்னை காப்­பாற்­றிக்­கொள்ள போரா­டினார்.

எனினும், அவர் சற்றும் எதிர்­பார்க்­காத நேரத்தில் பின்னால் வந்த இனம் தெரி­யாத சந்­தேக நபர் கோடரியால் வசந்த சொய்­சாவின் தலையில் பல­மாகத் தாக்­கினான். வலி தாங்­க­மு­டி­யாமல் அவர் கீழே மயங்கி வீழ்ந்தார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் லொறி­க­ளிலும், மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­னார்கள். அத­னை­ தொ­டர்ந்து களி­யாட்ட விடு­தியில் பணி­பு­ரிந்த ஊழி­யர்கள் வசந்த சொய்­சாவை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த போதும் சிகிச்சை பல­ன­ளிக்­காது வசந்த சொய்சா உயி­ரி­ழந்தார்.

மேலும் காய­ம­டைந்த முகா­மை­யாளர் உட்­பட இரு பணி­யா­ளர்கள் அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள அவ­சர சிகிச்­சை­ப் பிரிவில் உயி­ருக்குப் போரா­டிய நிலையில் இன்று சிகிச்­சை­பெற்று வரு­கின்­றனர்.

வசந்த சொய்­சாவின் இறுதி கிரி­யைகள் கடந்த 27 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற்­றது. இதில் பெருந்தொகை­யான பொது­மக்கள் கலந்­து­கொண்­டனர்.

அலெக்­ஸாண்டர் விக்­ரம வசந்த சொய்சா என்று அழைக்­கப்­படும் இவர் ஒரு சிறந்த கராத்தே சண்டை பயிற்சி வீரர்.

தனது திற­மையின் கார­ண­மாக பல இளம் கராத்தே வீரர்­களை உரு­வாக்­கிய பெருமை வசந்த சொய்­சா­வையே சாரும்.

அது­மட்­டு­மின்றி, இவர் பிர­பல தொலைக்­காட்சி ரிய­லிட்டி நிகழ்ச்­சியின் மூலம் 11 தட­வைகள் கின்னஸ் சாதனை படைத்­தவர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள பிர­பல பனோ­ராமா இரவு நேர களி­யாட்ட விடு­தியின் உரி­மை­யா­ள­ரா­கவும் வசந்த சொய்சா விளங்­கினார்.

இச்­சம்­ப­வத்தில் களி­யாட்ட விடு­தியின் பல மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான உடை­மைகள் சேதமாக்கப்பட்டிருப்ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

எனவே, மேற்­படி சம்­பவம் தொடர்­பாக அநு­ரா­த­புர குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் தமது விசா­ர­ணை­களை பல்­வேறு கோணங்­களில் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இது­வரை பொலி­ஸாரின் துல்­லி­ய­மான விசா­ர­ணை­களின் மூலம் 20 பேர் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். வசந்த சொய்­சாவை கூரிய ஆயு­தத்தால் தாக்கி கொலை செய்து விட்டு, களி­யாட்ட விடு­தியின் சொத்­து­களை சேதமாக்கி­யமை, அங்கு பணி­பு­ரிந்­த­வர்­களை தாக்­கி­யமை போன்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளின்­பேரில் இவர்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

இவர்­களில் 14 பேர் அநு­ரா­த­புர நீதவான் நீதி­மன்ற உத்­த­ர­வின்­பேரில் விசா­ர­ணை­க­ளுக்­காக எதிர்­வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர் என இச்­சம்­பவம் தொடர்பில் தெரியவருகின்றது.

அது­மட்­டு­மின்றி, இச்­சம்­பவம் தொடர்­பாக அநு­ரா­த­புர பொலிஸ் நிலைய குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் இது­வரை மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இச்­சம்­ப­வத்­துக்கு இரா­ணு­வத்தில் பணி­யாற்றி தப்­பிச்­சென்ற எஸ். எப்.லொக்கா என்­ப­வ­ருக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இவரே வசந்த சொய்­சாவை கோடரியால் தாக்கிப் படு­கொலை செய்த முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக இருக்­கக்­கூடும் என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. எனவே, லொக்­காவை கைது­செய்ய ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்­பட்­டுள்­ளன.

அநு­ரா­த­புரம், தஹய்­யா­கம பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாக கொண்ட லொக்கா இரா­ணு­வத்­தி­லி­ருந்து இடை­வி­லகி வந்­த­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம், தஹய்­யா­கம பிர­தே­சத்­தி­லேயே வசித்து வந்­துள்ளார்.

எனவே, இரவு நேரங்­களில் வசந்த சொய்­சாவின் களி­யாட்ட விடு­திக்கு சென்று மது அருந்தி உல்­லா­ச­மாக இருப்பதை வழக்­க­மாக கொண்­டி­ருந்தார்.

எனினும், ஆரம்­பத்தில் களி­யாட்ட விடு­தியில் பணி­பு­ரிந்­த­வர்­க­ளுடன் சுமு­க­மாக பழ­கி­வந்த லொக்கா கடந்த சில மாதங்­க­ளாக அங்­குள்­ள­வர்­க­ளுடன் தொடர்ந்து முரண்­பட்டு வந்­துள்ளார்.

இரவு நேரங்­களில் களி­யாட்ட விடு­தியில் குடித்து விட்டு அங்கு பணி­பு­ரிந்­த­வர்­க­ளிடம் தனது போலி வீரத்தை காட்ட முற்­பட்­டுள்ளார்.

இது வெகு நாட்கள் செல்லும் முன்­னரே முகா­மை­யாளர் மூலம் வசந்த சொய்­சாவின் காது­க­ளுக்கு எட்­டி­யது. எனவே, களி­யாட்ட விடு­திக்கு லொக்கா வரு­வ­தற்கு அதன் உரி­மை­யா­ள­ரான வசந்த சொய்­சா­வினால் தடைவிதிக்­கப்­பட்­டது.

இதனால் ஆத்­தி­ர­முற்ற லொக்கா எப்­ப­டி­யா­வது வசந்த சொய்­சாவை பழி­வாங்க வேண்டும் என்று திட்டமொன்றை தீட்­டினார்.

எனினும், பல தட­வைகள் அவ­னு­டைய திட்டம் ஈடே­ற­வில்லை. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­னரும் ஒரு நாள் கைக்­குண்­டுடன் களி­யாட்ட விடு­திக்கு சென்று தாக்க முற்­பட்­டி­ருக்­கின்றார்.

எனினும், அதிஷ்­ட­வ­ச­மாக அந்த குண்டு வெடிக்­க­வில்லை. இத­னை­ தொ­டர்ந்து வசந்த சொய்சா இது தொடர்பில் அநு­ரா­த­புர பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்­றினை பதி­வு­செய்தார்.

அதன்­பி­றகு துரி­த­மாக செயற்­பட்ட பொலிஸார் அந்த கைக்­குண்­டினை கைப்­பற்றி செய­லிழக்க செய்­த­துடன், சந்தேக நப­ரான லொக்­காவை தேடி வலை விரிக்க ஆரம்­பித்­தனர். எனினும், லொக்கா அத்­த­ரு­ணத்தில் அப்­பி­ர­தே­சத்தை விட்டு தப்­பி­யோ­டி­யி­ருந்தான்.

ஆயினும், தலை­ம­றை­வா­கியே இருந்த லொக்கா அத்­துடன் நின்­று­வி­டல்லை. மறைந்­தி­ருந்­த­வாறு வசந்த சொய்­சாவை பழி­வாங்க வலு­வான திட்­ட­மொன்றை தீட்­டி­யுள்­ளார்.

அதன்­படி தலை­ம­றை­வா­கி­யி­ருந்த லொக்கா மீண்டும் அநு­ரா­த­புர நகரை நோக்கி வந்­தது வசந்த சொய்­சாவை கொலை செய்யும் நோக்­கத்­து­ட­னேயே என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

எனவே, தனது திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்ற பல்­வேறு நபர்­க­ளையும் நய­வஞ்­ச­க­மாக பேசி தன்னோடு இணைத்­துக்­கொண்டார்.

இதில் முதலில் வசந்த சொய்­சாவை வியா­பார போட்­டி­யாக அல்­லது எதி­ரி­யாக பார்க்கும் இரு­வரும் சேர்ந்துகொண்­டார்கள்.

அவர்கள் இரு­வரும் வசந்த சொய்­சாவின் இரவு நேர களி­யாட்ட விடு­திக்கு போட்­டி­யாக களி­யாட்ட விடு­தி­களை நடத்தி வரும் இரு வர்த்­த­கர்­க­ளாவர்.

இவர்­க­ளுக்கும் வசந்த சொய்­சா­வுக்­கு­மி­டையில் பல வரு­டங்­க­ளாக கடு­மை­யான வியா­பார போட்டி நிலவி வருகின்­றது. எனவே, அவர்­களும் இந்த சந்­தர்ப்­பத்தை தமக்கு சாத­க­மாக்­கிக்­கொண்­டார்கள் என்றே கூறவேண்டும்.

மேலும் தனது திட்­டத்­திற்கு கடற்­ப­டையில் பணி­யாற்றி வில­கிய இரு வீரர்கள், தஹய்­யா­கம பிர­தே­சத்தில் பல்­வேறு கூலி வேலை­களில் ஈடு­படும் இளை­ஞர்கள் என்று மொத்­த­மாக 20க்கு மேற்­பட்­டோரை தன்­னுடன் இணைத்­துக்­கொண்டார்.

எனினும், கூலி வேலை செய்யும் இளை­ஞர்­க­ளிடம் ” களி­யாட்ட விடு­தியை உடைத்து சேதப்படுத்தினால் விலை உயர்ந்த மது­பான போத்­தல்­களை உங்­களால் பெற்­றுக்­கொள்ள முடியும் என்று அவர்கள் மனதில் ஆசையை ஏற்­ப­டுத்­தியே அவர்­களை இத்­திட்­டத்­துக்குள் இணைத்­தி­ருக்­கின்றார்.

அவர்­களும் மது­பான போத்­தல்­க­ளுடன் உல்­லா­ச­மாக பொழுதை கழிக்­கலாம் என்ற போலி­யான நம்­பிக்­கையில், நடக்கப் போகும் விப­ரீ­தத்தை சற்றும் நினைத்து பார்க்­காது லொக்­காவின் திட்­டத்­துக்கு சம்­மதம் தெரி­வித்­தனர்.

எனவே, சம்­பவ தினத்­தன்று காலை­யி­லி­ருந்தே இக்­கு­ழு­வினர் அனை­வரும் தாக்­கு­த­லுக்­காக இரும்புக் கம்பி,கோடரி, வாள் போன்ற கூரிய ஆயு­தங்­க­ளையும், பெற்றோல் குண்டு போன்­ற­வற்­றையும் ஆயத்தப்படுத்திக்­கொண்­டார்கள்.

மேலும், அன்­றைய தினம் மாலை வேளையில் வாகனம் திருத்தும் இட­மொன்றில் கூடி அரு­வ­ருப்­பான, நாற்றமான சாராய போத்­தல்­க­ளுடன் தமது பொழுதை கழித்­தார்கள்.

இத­னி­டையே களி­யாட்ட விடு­தியை தாக்­கு­த­லுக்கு உட்­ப­டுத்தும் போது யாரும் தம்மை அடை­யாளம் காண­மு­டி­யா­த­வாறு முக­மூ­டி­க­ளையும், உரைப்­பை­க­ளையும் அணிந்­து­கொண்டு நிஞ்சா பாணியில் தாக்க முற்­பட்­டனர்.

அதன்பின் அங்­கி­ருந்து புறப்­ப­டு­ முன் லொக்கா களி­யாட்ட விடு­தியை முற்­றாக சேதப்­ப­டுத்த வேண்டும் என்றும், அங்கு பணி­பு­ரியும் நபர்கள் யாரையும் எக்­கா­ரணம் கொண்டும் தாக்க முற்­பட கூடாது என்றும் அறி­வுரை வழங்கிய­தாக கூறப்­ப­டு­கின்­றது.

எனினும், இத்­தாக்­கு­தலின் போது லொக்கா, தம்­மோடு வந்த கடற்­படை வீரர்கள் இரு­வ­ரு­டனும் இணைந்து வசந்த சொய்­சாவின் தலையில் கோடரியால் பல­மாக தாக்கிக் கொலைச் செய்­தி­ருக்­கின்றான் என்றே சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

அடை­யாளம் தெரி­யாத வகையில் முக­மூடி அணிந்து களி­யாட்ட விடு­திக்குள் நுழைந்­த­வர்கள், முதலில் நுழை­வா­யிலின் பிர­தான கதவை பெற்றோல் குண்­டினை வீசி தாக்­கி­யுள்­ளனர்.

எனவே, இக்­காட்­சிகள் அனைத்தும் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த சீ.சீ.டி.வி கெம­ராவில் பதி­வா­கி­யி­ருந்­தன. இவர்­களின் மொத்தம் 28 பேர்.

அதில் 24 பேர் களி­யாட்ட விடு­தியை சேதப்­ப­டுத்தும் பணியில் ஈடு­பட்­ட­துடன், மிகுதி நான்கு பேர் உளவு பார்ப்பதற்­காக அயல் பிர­தே­சங்­களில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

களி­யாட்ட விடு­தியை சேதப்­ப­டுத்தி, வசந்த சொய்­சாவை கொலை செய்த பின் முச்­சக்­க­ர­வண்டி, லொறி,மோட்டார் சைக்கிள் போன்­ற­வற்றில் அங்­கி­ருந்து தப்பி அநு­ரா­த­புரம் ஸ்வாதி­புர காட்­டு­ப்பி­ர­தே­சத்தை வந்­த­டைந்­துள்­ளனர்.

அங்கு களி­யாட்ட விடு­தி­யி­லி­ருந்து கொள்­ளை­ய­டித்த மது போத்­தல்­க­ளுடன் திட்­டத்தின் வெற்­றி­யினை மகிழ்ச்சி­யுடன் கொண்­டா­டி­யுள்­ளனர்.

மேலும் தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய கூரிய ஆயு­தங்கள் , முக­மூடி என்பவற்­றையும் யாரும் காணாத விதத்தில் காட்­டுப்­ப­கு­தியில் மறைத்து வைத்­துள்­ளனர்.

எனினும், பொலி­ஸாரின் சுற்றி வளைப்பில் தாக்குதலுக்கு பயன்படுத்திய கூரிய ஆயதங்கள், வாகனங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

அநுராதபுர பிரதேசத்தில் கராத்தே வீரர் வசந்த சொய்சாவின் பனோராமா இரவு களியாட்ட விடுதியென்பது அநுராதபுரத்தில் அதுமட்டுமின்றி இல ங்கை முழுவதும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒரு களியாட்ட விடுதியாகும்.

இங்கு இளைஞர்கள் மது அருந்தி, ஆடல், பாடல்கள் என்று உல்லாசமாக இருப்பார்கள். இதன்மூலம் பல மில்லியன் கணக்கில் வருமானமும் கிடைத்தது.

ஆரம்பக் காலங்களில் வரலாற்று சிறப்புமிக்க மகா போதியிருக்கும் ஒரு நகரில் இத்தகைய களியாட்ட விடுதி இருப்பது சிறந்தது அல்ல என்றும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்ததாகவும் தெரியவருகின்றது.

(2015.10.29 வரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் )

-வசந்தா அருள்ரட்ணம்

IMG_2975-1024x637IMG_2990-1024x682IMG_2993-1024x703IMG_2999-769x1024M2U03968unnamed-14unnamed-24

Share.
Leave A Reply