மும்­பையில் மென்­பொருள் நிறு­வன ஊழியர் ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு கொலைசெய்யப்பட்ட வழக் கில் குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை விதித்து மும்பை சிறப்பு நீதி­மன்றம் தீர்ப்பளித்­துள்­ளது.

அரி­தினும் அரி­தான வழக்கு என்­பதால் குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை விதிப்­ப­தாக சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி விரு­ஷாலி ஜோஷி தெரி­வித்­துள்ளார்.

எஸ்தர் அனு­சுயா (23) மும்­பையில் ஒரு மென்­பொருள் நிறு­வ­னத்தில் பணி­யாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் ஜன­வரி மாதம் அவ­ரது சொந்த ஊரான ஆந்­திர மாநிலம் மசூ­லிப்­பட்­டி­னத்­துக்குச் சென்­று­விட்டு ரயிலில் மும்பைக்கு திரும்­பினார்.

குர்லா ரயில் நிலையம் வந்­த­டைந்த அவர் அங்­கி­ருந்து அந்­தேரி செல்­­வ­தற்­காக காத்­தி­ருந்­துள்ளார்.

அப்­போது அங்­கு­வந்த சந்­தி­ரபன் சனாப் என்­பவர் 300ரூபா அளித்தால் அந்­தே­ரியில் தனது காரில் இறக்கிவிடுவதாகக் கூறி­யுள்ளார்.

எஸ்தர் அனு­சு­யாவும் அந்தக் காரில் ஏறிச் சென்­றுள்ளார். ஆனால், பந்தூப் தேசிய நெடுஞ்­சா­லையில் சென்று கொண்­டி­ருந்­த­போது அனு­சு­யாவை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த சந்­தி­ரபன் அவரை கொலை செய்து,அவ­ரது உடலை பெற்றோல் ஊற்றி எரி­யூட்டி முட்­பு­தரில் வீசிச் சென்­றுள் ளார்.

2014 ஆம் ஆண்டு ஜன­வரி 16ஆம் திகதி மாலை, காஞ்­சூர்மார்க் பகு­தியை அடுத்துள்ள கிழக்கு விரைவு நெடுஞ்சாலை அருகே உள்ள புத­ருக்குள் இருந்து, சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்­கப்­பட்­டது.

பிரேத பரி­சோ­த­னையில், எஸ்தர் அனு­சுயா பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து கொலை செய்­யப்­பட்­டமை தெரியவந்­தது.

இதை­ய­டுத்து, குற்­ற­வா­ளியை பிடிக்க சுமார் 2 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்­க­ளிடம் பொலிஸார் விசாரணை நடத்­தியும் துப்பு கிடைக்­காமல் திண­றினர்.

இந் நிலையில் ரயில்­நி­லைய கண்­கா­ணிப்பு கமெ­ராவில் பதி­வான காட்­சி­களை வைத்து, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சந்­தி­ரபான் சனாப் (29) என்­ப­வரை பொலிஸார் கைது செய்­தனர்.

அவ­ரிடம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணையில் டிரைவர் சனாப், எஸ்­தரை ரயில் நிலை­யத்தில் இருந்து வெளியே அழைத்து வந்­துள்ளார்.

பின்னர் அவரை வாக­னத்தில் அந்­தே­ரிக்கு அழைத்து செல்­வ­தாக சம­ரசம் செய்து, காஞ்­சூர்மார்க் பகு­திக்கு அழைத்­துச்­சென்று, அங்­குள்ள புத­ருக்குள் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து, பின்னர் கொலை செய்தார். அதன் பின்னர் உடலை பெற்றோல் ஊற்றி எரித்­ததும் தெரி­ய­வந்­தது.

இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வந்­தது. கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வழக்கை விசா­ரித்த நீதி­பதி, சந்­தி­ரபன் சனாப் குற்­ற­வாளி என தீர்ப்­ப­ளித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று தண்­டனை விபரம் வெளி­யி­டப்­பட்­டது. இந்த வழக்கு அரி­தினும் அரி­தா­னது என்பதால் குற்­ற­வா­ளியை சாகும் வரை தூக்­கி­லி­டு­மாறு உத்­த­ர­வி­டு­வ­தாக நீதி­பதி கூறினார்.

தீர்ப்பு மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக பாதிக்­கப்­பட்ட அனு­சு­யாவின் குடும்­பத்­தினர் தெரி­வித்­தனர்.

இதே­வேளை தீர்ப்பு வெளி­யா­னதும் நீதி­மன்ற வளாகத்தில் கதறி அழுத சந்திரபன், “என் மீது தவறாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனக்கு மரண தண்டனை வழங்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறேன் என்றார்.

Share.
Leave A Reply