லண்டனிலுள்ள கட்டடமொன்றின் கூரையில் பெண்ணொருவர் முழு நிர்வாணமாக அமர்ந்திருந்ததை கண்ட பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஆனால், ஒரு கலையாகவே அப்பெண் நிர்வாணமாக அமர்ந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஈஸ்ட் என்ட் பிரதேசத்திலுள்ள கட்டடமொன்றின் கூரை உச்சியில் மேற்படி பெண் நிர்வாணமாக அமர்ந்திருந்தார்.

அக்கட்டடத்தைச் சூழவுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களும் அருகிலுள்ள வீதி வழியே சென்றவர்களும் இப்பெண்ணை பார்த்து வியப்படைந்தனர்.

நிர்வாணமாக, அதுவும் குளிரான காலநிலையில் இப்பெண் இவ்வாறு காணப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மேற்படி பெண் பொப்பி ஜெக்ஸன் என்­ற ஒரு கலைஞர் எனவும், ஒரு கலைக்குழுவின் செயற்பாட்டின் ஒரு பகுதியாக அவர் இவ்வாறு அமர்ந்துள்ளார் எனவும் பின்னர் தெரியவந்தது.

Share.
Leave A Reply