இந்தியாவின் கனவு ஏவுகணையான பிரமோஸ் நேற்று 49-வது முறையாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
அண்மையில் கடற்படையில் இணைக்கப்பட்ட போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொச்சியில் இருந்து ஏவப்பட்ட இந்த சூப்பர்சானிக் ஏவுகணை, 290 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வளிக்கப்பட்ட போர்க்கப்பலை மிகத் துல்லியமாக தாக்கியது.
பிரமோஸ் ஏவுகணையை போர்க்கப்பல், நீர்முழ்கி கப்பல், போர் விமானம் மற்றும் தரையில் இருந்தும் ஏவ முடியும். இந்திய விமானப்படையும் விரைவில் போர் விமானத்தில் இருந்து பிரமோசை ஏவி பரிசோதித்து பாரக்கத் திட்டமிட்டுள்ளது.
சுகாய் 30 ரக போர் விமானத்தில் இருந்தும் பிரமோஸ் ஏவுகணையை ஏவி பரிசோதித்து பார்க்கப்படவுள்ளது.
இதற்கு முன் கடந்த ஜுன் மற்றும் பிப்ரவரி மாதங்களில், இந்திய கடற்படையில் புதியதாக இணைக்கப்பட்ட மற்றொரு போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் இருந்து, இரு முறை பிரமோஸ் ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.