இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைபுலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ள கார் ஒன்று தமிழ்நாட்டில் வலம் வந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் புலிகள் இயக்கம் இன்னமும் தடை செய்யப்பட்ட நிலையில் பிரபாகரனின் படம் காரின் முன்பக்கத்தை அலங்கரித்த குறித்த காரை தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உரிமையாளர் வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பிலான விபரம் வெளியிடப்படவில்லை.
ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை காலால் எட்டி உதைத்த பெண் அமைச்சர்(வீடியோ )
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை பெண் அமைச்சர் ஒருவர் காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பன்னா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் தொடர்பான விழா ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய பிரதேச மாநில மூத்த பெண் அமைச்சர் குசும் மெதிலேவின் காலைத் தொட்டு அந்த சிறுவன் பிச்சை கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவனை காலால் எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார்.
இந்த வீடியோ நேற்று இணையங்களில் வைரலானது. குசும் மெதிலே மத்திய பிரதேச மாநில சட்ட அமைச்சரும் கூட.