தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் நியா­ய­மான வகையில் சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்­படும். புலி­க­ளுடன் தொடர்­பில்­லாத தமிழ் கைதிகள் விடு­விக்­கப்­ப­டுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்­டுள்ள வழக்­கு­களின் அடிப்­ப­டையில் ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என் று சட்டம்,

ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் விரைவில் இது குறித்து பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பட்டார்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­வரும் நிலையில் சிறைக் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ள­தென வின­வி­ய­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் அர­சியல் கைதி­கௌன யாரையும் தடுத்து வைக்­க­வில்லை. ஆனால் இவர்­களை அர­சியல் கைதிகள் என தெரி­வித்து வரு­கின்­றனர்.

அதேபோல் இவர்கள் அனை­வ­ருக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்டும் எனவும் தமிழர் தரப்பு வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

கடந்த காலத்தில் இருந்தே இந்த விடயம் தொடர்பில் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் விரைவில் ஒரு ஸ்­தி­ர­மான தீர்மானம் எடுக்க முடி­யா­துள்­ளது.

ஏனெனில் இவர்கள் புலி­க­ளுடன் தொடர்­பு­டையவர்கள் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரி­லேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் எவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் இவர்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­பது தொடர்பில் சரி­யான ஆதா­ரங்­களை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

இவ்­வாறு தடுப்­புக்­கா­வலில் உள்ள அர­சியல் கைதிகள் ஒரு­சிலர் மீது குற்­ற­வா­ளிகள் என்று நீதி­மன்றம் தீர்ப்பளித்­துள்­ளது.

அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் புலி­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தையும், குற்­ற­வா­ளிகள் என்­பதை ஒப்புக்கொண்­ட­வர்­களும் இந்த பட்­டி­யலில் உள்­ளனர்.

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் சிலரும் உள்­ளனர். ஆகவே இவை தொடர்பில் சரி­யான விசா­ர­ணைகள் மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

எனவே குற்றம் சுமத்­தப்­பட்டு அது நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள கைதி­களை விடு­விக்க முடி­யாது. அவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு கொடுப்­பது எந்த வகை­யிலும் சாத்­தி­ய­மற்­றது.

எனவே புலி­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களை சட்ட முறை­மைக்கு அமைய தண்­ட­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும். அவர்கள் தொடர்பில் மாற்று நட­வ­டிக்­கை­க­ளுக்கு வாய்ப்­புகள் இல்லை.

ஆனால் விசா­ர­ணைகள் இன்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­களை பிணையில் விடு­விக்க முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் தற்­போது மேற்­கொண்டு வரு­கின்­றது.

எவ்­வாறு இருப்­பினும் குற்றம் இல்­லாத தமிழ் அர­சி யல் கைதிகள் தொடர்பில் நியா­ய­மான வகையில் அரசாங்கம் செயற்­பட்டு அவர்­களின் விடு­தலை தொடர்பில் கூடிய அக்­கறை செலுத்தும்.

இவர்­களை விடு­விப்­பது தொடர்பில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தலை­மையில் குழு­வொன்று ஏற்கனவே அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் முக்­கி­யத்­துவம் கொடுத்து வருகின்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளனர். விரைவில் நாம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாம் செயற்பட்டு வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply