12 வயதான பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான செய்தியொன்று அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெல்லவாய பிரதேசத்தில் பதிவானது.

இந்நிலையில் இத்தற்கொலைக்கான காரணம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று மாணவியின் பாடசாலையில் புத்தகப் பைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்போது 10 ஆண்டு மாணவனொருவரின் பையில்காதல் கடிதமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தை 6 ஆம் தரத்தில் கற்கும் குறித்த மாணவியே அவ்விளைஞனுக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அம்மாணவியை அழைத்துள்ள, அவரது பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் அவரைக் கண்டித்துள்ளதுடன், திங்கட்கிழமை அம்மா அல்லது அப்பாவை பாடசாலைக்கு அழைத்துவர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவி வீட்டுக்கு வந்ததும் தாயின் சாரியில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து தான் தூக்கில் தொங்கப்போவதாக அம் மாணவி பாடசாலையில் வைத்து தமக்கு தெரிவித்ததாக அவரது நண்பிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply