கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் யாழ்.உடுவில் மகளிர் கல்லூரிப் பகுதியில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளது.

தனியாக வசித்து வந்த பாலசிங்கம் சிறீதேவி (வயது67) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் நடமாட்டத்தை அந்தப் பகுதியில் காணாத அயலவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்ததை அடுத்து து இன்று மாலை பொலிஸார் அவரது வீட்டை வீட்டை சோதனை செய்தபோது கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குறித்த வயதான பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு காணப்பட்டதுடன், வீட்டின் பின்புற கதவும் திறந்து காணப்பட்டது.

இவரது வீட்டில் கொள்ளையிட வந்தவர்கள் இந்த பெண்ணை இவ்வாறு கட்டிப்போட்டுவிட்டு சென்றதால் இவர் மரணம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

150 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம்

accident m';

நானுஓயா – உடக்களை தோட்டத்திலிருந்து நானு ஓயா நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து  நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது குறித்த முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டியின் இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply