கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொடுக்கும் என்பார்களே… அது தனுஷ் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.
தனுஷ் நடிக்க துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். ஆனால் இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் உருவாக்கித் தரவிருப்பவர் தனுஷ்தான்.
இதற்காக மொத்தம் ரூ 35 கோடிக்கு தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளாராம் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.
தனுஷின் கேரியரில் இதுவரை இல்லாத பெரிய பட்ஜெட் இது. ஏற்கெனவே தனுஷ் தயாரித்த 99 சதவீதப் படங்கள் செம ஹிட். இந்த ஆண்டு மட்டும் காக்கிச் சட்டை, காக்கா முட்டை படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன.
கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படமும் சூப்பர் ஹிட். அடுத்து வரவிருக்கும் விசாரணை படத்தின் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு.
தனுஷ் நடித்த அனேகன், மாரி படங்களும் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிட்டன. ஆக, திரும்பின பக்கமெல்லாம் பணமழை தனுஷுக்கு. திரும்ப முதல் பாராவைப் படிங்க!
Shalini’s Sister “Shamili” Latest Photos.
 

கொமடி நடிகர் செருப்புக்கடையில் பண்ணும் அட்டகாசம்… பாருங்க சிரிக்காமல்

Share.
Leave A Reply