யாழ்ப்­பாணம் புதிய சிறைச்­சாலை நேற்று முன்­தினம் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சாலைகள் அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வினால் திறந்து வைக்­கப்­பட்­டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதி­தி­யாக கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் 12 ஆயிரம் முன்னாள் புலிகள் இயக்க போரா­ளிகள் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடுவிக்­கப்­பட்டனர்.

இதன் போது உரு­வா­காத ஐந்­தா­வது கட்ட ஈழப்போர் 217 அர­சியல் கைதி­களை விடு­விக்­கும்­போ­துதான் ஏற்படப்போகின்றதா?

இன­வா­தி­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்­காது தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்ய விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். சிறைச்­சா­லை­களில் போதை­வஸ்துப் பாவனை தடுக்­கப்­ப­ட­வேண்டும்.

சிறு குற்­றங்­க­ளுக்­காக சிறைச்­சா­லைக்கு செல்­ப­வர்கள் மற்றும் அர­சியல் கைதிகள் போதை­வஸ்து பாவ­னை­யா­ளர்­க­ளாக வெளியே வர­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையும் தற்­போது நில­வு­கின்­றது.

சிறை­களில் உள்ள கைதி­களும் மனி­தர்­களே. அவர்­களை நன்கு பரா­ம­ரிக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமையாக உள்­ளது.

அந்­த­வ­கையில் யாழ்ப்­பா­ணத்தில் புதிய சிறைச்­சாலை திறந்­து­வைக்­கப்­பட்­டமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாக உள்­ளது.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் சிறைச்­சா­லை­களில் இடப்­பற்­றாக்­குறை காணப்­ப­டு­வ­துடன் கைதிகள் பெரும் நெருக்­க­டி­களை சிறைச்­சாலை­களில் சந்­திக்க வேண்­டி­யுள்ளது.

யாழ்ப்­பா­ணத்தில் இது­வரை தற்­கா­லி­க­மாக இயங்­கி­வந்த சிறைச்­சா­லையில் உரிய வச­திகள் எதுவும் இருக்கவில்லை.

இதனால் இங்கு தடுத்து வைக்­கப்­பட்ட கைதிகள் இட­நெ­ருக்­க­டி­யினை எதிர்­நோக்கி வந்­தனர். தற்­போது பெரும் செலவில் புதிய சிறைச்­சாலைக் கட்­டடம் அமைக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இனிமேல் கைதிகள் இட­வ­ச­தி­யில்­லாது திண்­டா­ட­வேண்­டிய நிலை ஏற்­படாது.

யாழ். மாவட்­டத்தில் நிரந்­தர சிறைச்­சாலை இல்­லா­மை­யினால் இங்­கி­ருந்து கைதி­களை அனு­ரா­த­புரம் சிறைச்சா­லைக்கு அனுப்­ப­வேண்­டிய நிலைமை இது­வரை ஏற்­பட்­டு­வந்­தது.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ். நீதி­மன்ற கட்­டடம் மீதான தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது­செய்யப்­பட்ட நூற்­றுக்கும் மேற்­பட்டோர் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இதனால் அவர்­களை பார்­வை­யிடும் விட­யத்தில் உற­வி­னர்கள் பெரும் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கினர். அங்கிருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்­களை அழைத்­து­வ­ர­வேண்­டிய நிலை ஏற்பட்டி­ருந்­தது.

தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் சிறைச்­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் கைதிகள் இத்­த­கைய அலைச்சல்களுக்கு உட்­ப­ட­வேண்­டி­ய­நிலை ஏற்­ப­டாது.

நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் 5000 கைதிகள் வரை­யி­லேயே தடுத்து வைக்­கக்­கூ­டிய நிலைமை உள்ளபோதிலும் பல்­லா­யிரக் கணக்­கான கைதிகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் சிறு குற்­றங்­களைப் புரிந்­த­வர்­களும் பிணையில் விடு­விக்­கப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் நாள்­தோறும் அர­சாங்­கத்­துக்கு பெரும்­செ­லவு ஏற்­பட்டு வரு­கின்­றது.

சிறைச்­சா­லை­களில் போதை­வஸ்துப் பாவ­னையும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. இதனால் வேறு குற்­றங்­க­ளுக்­காக சிறைச்­சா­லை­களில் அடைக்­கப்­ப­டு­கின்­ற­வர்கள் போதை­வஸ்துப் பாவ­னை­யா­ளர்­க­ளாக வெளியில் வரவேண்டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

தமிழ் அர­சியல் கைதி­களும் இந்த விட­யத்தில் பெரும் பாதிப்­புக்­களை சந்­திக்­கின்­றனர்.

ஏனெனில் நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் போதை­வஸ்து விநி­யோகம் தொடர்­பான குற்­ற­வா­ளிகள் மற்றும் கொலைக்குற்றவாளிகளு­ட­னேயே தமிழ் அர­சி­யல்­கை­தி­களும் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்­றனர்.

இதனால் தமிழ் அர­சி­யல்­கை­தி­களும் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். குற்­ற­மொன்றைப் புரிந்த நபர் சிறைச்­சா­லைக்கு திருந்­து­வ­தற்­கா­கவே அனுப்­பப்­ப­டு­கின்றார்.

ஆனால் சிறைச்­சா­லை­களில் போதை­வஸ்து பாவனை காரண­மாக திருந்­து­வ­தற்குச் சென்ற நப­ரொருவர் போதை­வஸ்துப் பாவ­னை­யா­ள­ராக வெளியே வரும் நிலை இனி­மேலும் தொட­ரக்­கூ­டாது.

யாழ். குடா­நாடு உட்­பட வடக்கு, கிழக்கில் பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் மற்றும் சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் என்­பன அதி­க­ரித்து வரு­கின்­றன.

இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களை தடுப்­பது குறித்து சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சாலை அமைச்சர் திலக் மாரப்பன தலை­மையில் நாம் ஒன்­றி­ணைந்து ஆராய்ந்­துள்ளோம்.

இத்­த­கைய குற்­றங்­களை இழைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்­டி­யது அவசிய­மா­ன­தாகும்.

சிறைச்­சா­லை­களில் பல வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் உட­ன­டி­யாக விடுவிக்­கப்­பட வேண்டும்.

விடு­த­லை­யு­மின்றி விசா­ர­ணை­யு­மின்றி இவர்கள் இனியும் சிறையில் வாடு­வ­தனை அனு­ம­திக்க முடியாது.

கடந்த பன்­னி­ரண்டாம் திகதி நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­க­கப்­பட்ட 217 அர­சியல் கைதிகள் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு சென்று கைதி­க­ளுடன் நான் உரை­யா­டி­யி­ருந்தேன். அதன் பின்னர் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ வுடன் சிறைச்­சா­லைக்கு சென்­றி­ருந்தேன்.

தமிழ் அர­சியல் கைதிகள் தம்மை பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கு­மாறு கோரு­கின்­றனர். யுத்­தத்­தின்­போதும் அதன் பின்­னரும் கைது­செய்­யப்­பட்ட மற்றும் சர­ண­டைந்த புலி­களின் முன்னாள் தள­ப­திகள் உட்­பட 12 ஆயிரம் பேர் கடந்த அர­சாங்க காலத்தில் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டனர்.

இதேபோல் புலி­களின் முக்­கி­யஸ்­தர்கள் கடந்த அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளா­கவும் முத­ல­மைச்­சர்­க­ளா­கவும் திகழ்ந்­தனர்.

இவ்­வாறு புலி­களின் முக்­கி­யஸ்­தர்கள் அனை­வரும் வெளியில் சுதந்­தி­ர­மாக நட­மாடும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்­தார்கள் என்ற குற்­றச்­சாட்­டிலும் சந்­தே­கத்தின் பேரிலும் கைது­செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்ந்தும் சிறைச்­சா­லை­களில் வாடு­வது எந்­த­வ­கை­யிலும் நியா­ய­மா­ன­தல்ல.

இத­னால்தான் தமிழ் அர­சி­யல்­கை­தி­களை பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்க வேண்­டு­மென்று நான் கோருகின்றேன்.

பொது மன்­னிப்பு அளிப்­ப­தற்கு அமைச்­ச­ர­வையில் சில அமைச்­சர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர். இது தவ­றான நட­வ­டிக்­கை­யாகும்.

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைக்கு எதிர்­வரும் 7ஆம் திக­திக்கு முன்னர் தீர்வு காணப்­படும் என்று ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­துள்ளார். அந்த உறு­திக்­கி­ணங்க தமிழ் அர­சி­யல்­கை­திகள் விடுவிக்­கப்­பட வேண்டும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தமிழ் அர­சி­ய­ல்­கை­தி­களின் விடு­தலை தொடர்­பிலும் ஆராயப்பட்டுள்­ளது.

இவர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த புதன்­கி­ழமை 17 அரசியல்கை­திகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­படுத்­தப்­பட்­ட­போது அவர்­களை பிணையில் விடுதலை செய்­யு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

ஆனால் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் அறிக்கை கிடைக்­க­வில்லை என்ற கார­ணத்­தினால் அரசியல்கைதிகளை நீதி­மன்றம் விடு­விக்­க­வில்லை.

இந்த விட­யத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் விட்­டுக்­கொ­டுப்புப் போக்கை கடைப்­பி­டிக்­க­வேண்­டி­யது அவசிய­மா­ன­தாகும்.

அர­சி­யல்­கை­தி­களின் விடு­த­லையை துரி­தப்­ப­டுத்த சட்­டமா அதிபர் திணைக்­களம் துரித நட­வ­டிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ் அர­சி­யல்­கை­தி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­க­வேண்டும். இல்­லையேல் குறு­கிய கால புனர்­வாழ்வின் பின்­ன­ரா­வது அவர்­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

அர­சி­யல்­கை­தி­களை விடு­வித்தால் அதன்­மூலம் 5ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்­ப­மாகும் என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

இதேபோல் ஜெனிவா தீர்­மா­னத்­துக்­கி­ணங்க சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கா­கவே அரசி­யல்­கை­தி­களை விடு­விக்க அர­சாங்கம் முயல்­வ­தாக முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்­வா­றான இன­வாத கருத்­துக்­க­ளுக்­கெல்லாம் செவி­சாய்க்­காது அர­சி­யல்­கை­தி­களை விடு­விக்க நடவ­டிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அர­சாங்க காலத்தில் 12 ஆயிரம் போரா­ளி­க­ளுக்கு  புன­ர்­வாழ்வு அளித்து விடு­வித்­த­போது ஈழப்போர் உருவா­க­வில்லை.

தற்­போது 217 தமிழ் அர­சி­யல்­கை­தி­களை விடு­விக்­கும்­போ­துதான் மீண்டும் போர் உரு­வா­கப்­போ­கின்­றதா? இனவா­தி­களின் கருத்­துக்கு நாம் செவி­சாய்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

தமிழ் அர­சியல் கைதிகள் பல தட­வைகள் தமது விடு­தலை கோரி போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ளனர்.

இத்­த­கைய நிலையில் தமிழ் அர­சி­யல்­கை­திகள் மீது களுத்­துறை மற்றும் வவு­னியா சிறைச்­சா­லை­களில் தாக்கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

வவு­னியா சிறைச்­சா­லையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் இரண்டு அர­சி­யல்­கை­திகள் உயி­ரி­ழந்­து­மி­ருந்­தனர். இத்­த­கைய உயி­ரி­ழப்­புக்கள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டா­த­வ­கையில் சட்டம் ஒழுங்கு சிறைச்­சா­லைகள் அமைச்சு நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் பேசும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் இங்­குள்ள சிறைச்சாலை­களில் முழு­மை­யாக நிய­மிக்­கப்­பட வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சு இது­கு­றித்தும் கவ­னம்­செ­லுத்­த­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

குடா­நாட்டில் குற்­றச்­செ­யல்­களை தடுக்கும் வகையில் நீதி­ப­திகள் செயற்­பட்டு வரு­கின்­றனர். மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் இதற்­கான தீவிர நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­வது பாராட்­டத்­தக்­க­தாக உள்­ளது.

யுத்­தத்­தினால் பெரும் பாதிப்­புக்­களை சந்­தித்த எமது மக்கள் இனி­யா­வது நிம்­ம­தி­யாக வாழ வேண்டும். இதற்கு குற்­றச்­செ­யல்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு சகல தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கவேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

நாட்டில் குற்­றச்­செ­யல்­களை குறைத்தால் குற்­ற­வா­ளி­களின் எண்­ணிக்­கையும் குறை­வ­டையும் இதன்­மூலம் சிறைச்­சா­லை­களின் எண்­ணிக்­கை­யையும் குறைக்­கலாம்.

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் அர­சியல் கைதிகள் இல்லை என்று அரசதரப்பிலும் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. உண்­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சினை கார­ண­மா­கவே யுத்தம் உருவா­னது.

யுத்­தத்தின் கார­ண­மா­கவே தமிழ் இளைஞர், யுவ­திகள் கைது­செய்­யப்­பட்­டனர். எனவே இவ்­வாறு கைதுசெய்யப்பட்­ட­வர்­களை தமிழ் அர­சியல் கைதிகள் என்று அழைப்­பதில் எந்தத் தவறும் இல்லை.

இன்று இந்த தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வுகள் பெரும் ஏமாற்­றங்­களை சுமந்­த­வாறு வாழ்ந்து வரு­கின்­றன. இவ­ர­்க­ளது ஏக்­கங்­க­ளுக்கும். தீர்வு காணப்­பட வேண்டும்.

சிறையில் வாடும் அவர்­க­ளது உற­வுகள் விடு­விக்­கப்­பட்டால் மட்­டுமே அவர்கள் மகிழ்ச்­சி­ய­டை­வார்கள். இதனைக் கருத்­தில்­கொண்டே அர­சியல் கைதி­களின் விடு­த­லையை துரி­தப்­ப­டுத்­து­மாறு நான் கோரு­கின்றேன்.

அர­சி­யல்­கை­திகள் விட­யத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சும் மனி­தா­பி­மா­னத்­துடன் செயற்­பட­ வேண்டும்.

எதிர்­வரும் 7ஆம் திக­திக்குள் அர­சி­யல்­கை­தி­களை விடு­விக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விடின் அவர்கள் மீண்டும் போராட்­டத்தில் குதிக்கும் சூழலும் காணப்­ப­டு­கின்­றது.

எனவே இந்த விடயத்தில் நாமனைவரும் அக்கறை செலுத்த வேண்டி­யவர்களாக இருக்கின்றோம். தீபாவளிக்கு முன்னராவது இவர்களுக்கு விடிவு ஏற்படவேண்டும்.

மனம் நிறைந்த பாராட்டுகள்  திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கு உரித்தாகட்டும.

 

யாழ் பண்ணை பகுதியில் சிறைச்சாலை திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)

Share.
Leave A Reply