உலக அளவில் இந்த ஆண்டு மட்டும் அதிக அளவு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள நாடு குறித்து சர்வதேச பொது மன்னிப்பு சபை கவலை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் தன் இனத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக அந்த நாட்டு குடிமகன் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 10 மாதங்களில் சவுதி அரசு 142 நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

சவுதியில் வாள் போன்ற நீண்ட கத்தியை பயன்படுத்தி குற்றவாளியின் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு நாடுகளின் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளது மட்டுமல்ல இதுபோன்ற தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சவுதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Amnesty International எனப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபை, சவுதியின் கடுமையான சட்டதிட்டங்களிலும், பெருகி வரும் மரண தண்டனை குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது நாடாக சவுதி அரேபியாவும், முதலிடத்தில் சீனாவும் இரண்டாம் இடத்தில் ஈரான் நாடும் உள்ளது என சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் சவுதி அரசு 90 நபர்களுக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியுள்ளது.

saudi_murderer_003கொலைக்குற்றம், பாலியல் பலாத்காரம், ஆயுதம் கடத்துதல், போதை மருந்து கடத்தல், சமய எதிர்ப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு ஷாரியா சட்டங்களின்படி சவுதி அரசு மரண தண்டனை விதித்து வருகின்றது.

கடந்த 2010- ம் ஆண்டு 27 நபர்களுக்கு மட்டுமே மரண தண்டனையை சவுதி அரசு நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிடும் Death penalty world wide எனும் அமைப்பு, அது படிப்படியாக உயர்ந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு 82 நபர்களுக்கும், 2012-ம் ஆண்டு 72 நபர்களுக்கும், 2013-ம் ஆண்டு 79 நபர்களுக்கும், 2014-ம் ஆண்டு 90 நபர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக Death penalty world wide அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த காதலியை உயிரோடு எரித்துக்கொன்ற முன்னாள் காதலன்

03-10-2016

Sonia-Bibi_3490574b

பாகிஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த காதலியை காதலனே உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா பிபி என்ற 20 வயது இளம்பெண், கடந்த மாதம் உடல் முழுவதும் 50 சதவீத தீக்காயங்களுடன் முல்தானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும், சிகிச்சை பலனின்றி இன்று இறந்துபோனார்.

அவர் இறப்பதற்கு முன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தனது முன்னாள் காதலன் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 24 வயது வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் 2008ம் ஆண்டுக்குப்பிறகு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டதாக அவுரத் அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply