மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் மற்றும் அவரது பாரியார் பயணித்த அதிவேக படகில் கடந்த மாத இறுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது
சவுதியில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றி நாடு திரும்பிய அவர் , ஹுல்ஹுலே தீவிலுள்ள விமானநிலையத்திலிருந்து படகின் மூலம் மாலே நோக்கி பயணித்து பின்னர் அவர்களது படகு தீவை அடைந்தவுடனேயே வெடிப்பு இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவத்துக்கு காரணமான சந்தேகநபரை கைதுசெய்ய மாலைதீவு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தது. இந்நிலையில் இக் கொலை முயற்சியின் சந்தேகநபரொருவர் தெஹிவளை , நெதிமாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அஹமட் அப்ரோஸ் எனப்படும் 18 வயதான இளைஞனொருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பெண்ணொருவருடன் தங்கியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பு தேடலொன்றில் அவர் கைதுசெய்யப்பட்டதுடன், கணனிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.