வேன் ஒன்றின் மீது, அதிக வலுவைக் கொண்ட மின்சார கம்பி வீழ்ந்ததில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் காலி கிந்தோட்டையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலங்கொடை வாகன சாரதி பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான வேன் ஒன்றின் மீதே இம்மின்கம்பி வீழ்ந்துள்ளதோடு, இதன்போது அதிலிருந்த, புஸ்ஸ இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவரும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, காயமடைந்த மேலும் நால்வர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.